வட போர்முனையில் வீரச்சாவடைந்த மாவீரர்களுக்கு நினைவு மண்டபம் திறப்பு

வட போர்முனையில் வீரச்சாவடைந்த மாவீரர்களின் நினைவான மண்டபம் முரசுமோட்டையில் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

போராளி யாழவன் தலைமையில் இன்று புதன்கிழமை முற்பகல் நடைபெற்ற நிகழ்வில் பொதுச்சுடரினை வட போர்முனை நிர்வாகப் பொறுப்பாளர் வேந்தன் ஏற்றினார்.

தமிழீழ தேசியக் கொடியினை வட போர்முனை பொறுப்பாளர்களில் ஒருவரான மகேஸ் ஏற்றினார்.

மாவீரர்களின் பொதுத் திருவுருவப்படத்திற்கான ஈகைச்சுடரினை முருகானந்தா மகா வித்தியாலய முதல்வர் திருமதி இதய சிவதாஸ் ஏற்றினார்.

மலர்மாலையினை மாவீரனின் உடன்பிறப்பு தயா சூட்டினார்.

தொடர்ந்து, மண்டபத்தில் 200-க்கும் அதிகமான மாவீரர்களின் திருவுருவப்படங்களுக்கு சுடரேற்றி, மலர்மாலைகள் சூட்டப்படடன.

இதேவேளை, எல்லைப் படை மாவீரர்களின் நினைவாலயம் வட்டக்கச்சி இராமநாதபுரம் கிழக்கில் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

தமிழீழ விளையாட்டுத்துறையின் ஏற்பாட்டில் இந்த நினைவாலயம் அமைக்கப்பட்டுள்ளது.

விளையாட்டுத்துறை பொறுப்பாளர்களில் ஒருவரான தேவன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் பொதுச்சுடரினை விளையாட்டுத்துறைப் பொறுப்பாளர் செம்பியன் ஏற்றினார்.

தமிழீழ தேசியக் கொடியை கல்மடு இராமநாதபுரம் வட்டப் பொறுப்பாளர் கலைவாணன் ஏற்றினார்.

எல்லைப்படை மாவீரர்களின் நினைவாலயத்தினை ஓய்வுபெற்ற முதல்வர் தணிகையன் நாடாவை வெட்டி திறந்து வைத்தார்.

மாவீரர்களின் பொதுத் திருவுருவப்படத்திற்கு ஈகைச்சுடரினை ஏற்றி, மலர்மாலையினை இராமநாதபுரம் கிழக்கு பாடசாலை முதல்வர் புண்ணியமூர்த்தி சூட்டினார்.

நிகழ்வில் கருத்துரையினை தணிகையன் ஆற்றினார்.

அதேவேளை, முள்ளியவளை மாவீரர் துயிலும் இல்லத்தில் பார்த்தீபன் தலைமையில் மாவீரர் எழுச்சி நாள் நிகழ்வுகள் நடைபெற்றன.

இதில் பொதுச்சுடரினை முள்ளியவளை கோட்ட அரசியல்துறைப் பொறுப்பாளர் மு.உமைநேசன் ஏற்றினார்.

தமிழீழ தேசியக் கொடியினை முள்ளியவளை மாவீரர் துயிலும் இல்லப் பொறுப்பாளர் சைமன் ஏற்றினார்.

நிகழ்வில் சிறப்புரையினை வற்றாப்பளை வட்டப் பொறுப்பாளர் பரன் ஏற்றினார்.

இதேவேளை, மணலாறு கட்டளை பணியகப் போராளிகளால் முள்ளியவளை வித்தியானந்த கல்லூரியில் சிறப்பாக அமைக்கப்பட்ட பந்தலில் மாவீரர்களின் திருவுருவப்படங்கள் வைத்து மாவீரர் நாள் தொடக்க நிகழ்வுகள் நடைபெற்றன.

இதில் பொதுச்சுடரினை உமைநேசன் ஏற்றினார்.

தமிழீழ தேசியக் கொடியினை மணலாறு கட்டளைப் பணியகத் தளபதி கேணல் ஜெயம் ஏற்றினார்.

மாவீரர்களின் திருவுருவப்படத்திற்கு ஈகைச்சுடரேற்றி, மலர்மாலைகள் சூட்டப்பட்டன.

நிகழ்வில் உரையினை முள்ளியவளை நுண்கலைக் கல்லூரி முதல்வர் திருமதி மணிமொழி கிருபாகரன் நிகழ்த்தினார்.

அதேவேளை, உடையார்கட்டு கோட்டத்தில் மாவீரர் எழுச்சி நாள் நிகழ்வுகள் சிறப்பாக அமைக்கப்பட்ட நினைவு இடத்தில் நிதித்துறையின் சேரன் நிறுவனத்தைச் சேர்ந்த குயிலின்பன் தலைமையில் நடைபெற்றது.

பொதுச்சுடரினை சேரன் வாணிப நிறைவேற்றுப் பணிப்பாளர் இளம்பருதி ஏற்றினார்.

தமிழீழ தேசியக் கொடியினை உடையார்கட்டு கோட்ட அரசியல்துறைப் பொறுப்பாளர் ஞானவேல் ஏற்றினார்.

தொடர்ந்து, மாவீரர்களின் திருவுருவப் படங்களுக்கு மக்களால் மலர்வணக்கம் செலுத்தப்பட்டது.

இதேவேளை, புதுக்குடியிருப்பில் சிறப்பாக அமைக்கப்பட்ட மாவீரர் நினைவு மண்டபத்தில் நிதித்துறையின் கணக்கு ஆய்வுப் பொறுப்பாளர் அறவாணன் தலைமையில் நிகழ்வுகள் நடைபெற்றன.

பொதுச்சுடரினை மருத்துவ பிரிவின் மருத்துவப் போராளி தேவா ஏற்றினார்.

தமிழீழ தேசியக் கொடியினை புதுக்குடியிருப்பு கோட்ட அரசியல்துறைப் பொறுப்பாளர் இளம்பருதி ஏற்றினார்.

முதன்மை மாவீரர்களின் திருவுருவப்டங்களுக்கு சுடரேற்றி மலர்மாலைகள் சூட்டப்பட்டன.

அதேவேளை, புதுக்குடியிருப்பில் அமைந்துள்ள திருகோணமலை மாவட்ட தொடர்பகத்தில் திருகோணமலை மாவட்ட மாவீரர் பணிமனைப் பொறுப்பாளர் தென்னவன் தலைமையில் நிகழ்வுகள் நடைபெற்றன.

இதில் பொதுச்சுடரினை மாவீரரின் தந்தை சிறீதரன் ஏற்றினார்.

தமிழீழ தேசியக் கொடியினை திருகோணமலை மாவட்ட தளபதி வசந்தன் ஏற்றினார்.

தொடர்ந்து, மாவீரர்களின் திருவுருவப்படத்திற்கு பெற்றோர்கள், போராளிகளால் சுடரேற்றி, மலர்மாலைகள் சூட்டப்பட்டன.

இதேவேளை, புதுக்குடியிருப்பில் சோதியா படையணி மாவீரர்களின் திருவுருவப்படம் வைக்கப்பட்ட மாவீரர் மண்டபத்தில் போராளி இசைஅறிவு தலைமையில் நிகழ்வுகள் நடைபெற்றன.

பொதுச்சுடரினை புதுக்குடியிருப்பு கோட்ட அரசியல்துறைப் பொறுப்பாளர் சி.இளம்பருதி ஏற்றினார்.

தமிழீழ தேசியக் கொடியினை சோதியா படையணி தளபதிகளில் ஒருவரான மதுரம் ஏற்றினார்.

தொடர்ந்து, மாவீரர்களின் திருவுருவப்படங்களுக்கு சுடரேற்றி, மலர்மாலைகள் சூட்டப்பட்டன.

நிகழ்வில் எல்லைப்படை பொறுப்பாளர் காளித் சிறப்புரை நிகழ்த்தினார்.

அதேவேளை, புதுக்குடியிருப்பில் காவல்துறை பணிமனை, நீதிமன்றம், பொன்னம்பலம் நினைவு மருத்துவமனைகளில் மாவீரர் எழுச்சி நாள் தொடக்க நிகழ்வுகள் சிறப்புற நடைபெற்றன.

விசுவமடு மாவீரர் துயிலும் இல்லத்தில் இனியவன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் பொதுச்சுடரினை மாவீரர் போராளிகள் குடும்ப நலன் காப்பகப் பொறுப்பாளர் திருக்குமரன் ஏற்றினார்.

தமிழீழ தேசியக் கொடியினை தமிழீழ பொருண்மிய மேம்பாட்டு நிறுவனப் பொறுப்பாளர் கரிகாலன் ஏற்றினார்.

மாவீரர்களின் பொதுத் திருவுருவப்படத்திற்கு எழுமதி கரிகாலன் சுடரேற்றி, மலர்மாலை சூட்டினார்.

இதேவேளை, ரீ.ஆர். ரெக் நிறுவனத்தில் மாணவர் கதிர்ச்செல்வன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் பொதுச்சுடரினை ரீ.ஆர். ரெக் முதல்வர் பிரதாபன் ஏற்றினார்.

மாவீரர்களின் பொதுத்திருவுருவப்படத்திற்கு சுடரேற்றி மலர்மாலைகள் சூட்டப்பட்டன.

நிகழ்வில் உரையினை விரிவுரையாளர் கருணாகரன் நிகழ்த்தினார்.

அதேவேளை, புதுக்குடியிருப்பு இரணைப்பாலை வட்டத்தில் மாவீரர் மண்டபம் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

இரணைப்பாலை வட்ட மாவீரர் செயற்பாட்டுக்குழுச் செயாலளர் தேன்மொழி தலைமையில் நிகழ்வுகள் நடைபெற்றன.

முன்னதாக செந்தூரன் சிலையடியில் இருந்து மாவீரர் பெற்றோர் அணியிசை வகுப்புடன் அழைத்து வரப்பட்டு நிகழ்வுகள் நடைபெற்றன.

பொதுச்சுடரினை மாவீரரின் தந்தை புஸ்பராசா ஏற்றினார்.

தமிழீழ தேசியக் கொடியினை கடற்புலிகளின் துணைத்தளபதி விநாயகம் ஏற்றினார்.

மாவீரர் மண்டபத்தினை புதுக்குடியிருப்பு கோட்ட அரசியல்துறைப் பொறுப்ளார் சி.இளம்பருதி நாடா வெட்டி திறந்து வைத்தார்.

மாவீரர்களின் திருவுருவப்படத்திற்கு மாவீரர்களின் பெற்றோர்களால் சுடரேற்றி மலர்மாலைகள் சூட்டப்பட்டுள்ளன.

நிகழ்வில் மாணவர்களின் மாவீரர் வணக்க நிகழ்வு நடைபெற்றது.

நிகழ்வில் கருத்துரைகளை கடற்புலிகளின் துணைத்தளபதி விநாயகம், புதுக்குடியிருப்பு கோட்ட அரசியல்துறைப் பொறுப்பாளர் சி.இளம்பருதி ஆகியோர் நிகழ்த்தினர்.


Comments