உயிர்நீத்த ஈழத்தமிழருக்காக "மரண கானா' இசை நிகழ்வு

போரினால் உயிர்நீத்த ஈழத் தமிழர்களின் நினைவாக கானா கலைஞர் கானா விஜய் ""மரண கானா' என்னும் இசை நிகழ்வொன்றை நடத்தவுள்ளார்.

எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (30.11.2008 ) பொன்னி 31, பி.எஸ். குமாரசாமிராஜா சாலை, சென்னை 6000028 அமைந்துள்ள தமிழ்நாடு இயல் இசை நாடக மன்ற வளாகத்தில் இது இடம்பெறவுள்ளது.

இந்நிகழ்வை தென் சென்னை தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கமும் நாடகவெளி அமைப்பும் இணைந்து ஏற்பாடு செய்துள்ளன.

ஈழத் தமிழரின் துயரில் பங்கு கொள்ளும் விதமாக இந்த ""மரண கானா' நிகழ்வில் கலந்துகொண்டு உணர்வுகளை பகிர ஏற்பாட்டாளர்கள் பொது அழைப்பை விடுத்துள்ளனர்.


Comments