புலிகளின் தற்காப்பு நிலைக்கு சவாலாகும் ஜனாதிபதியின் டில்லி பிரகடனம்

"தேசிய ரீதியாக, அனைத்துலக ரீதியாக எமக்குச் சாதகமான அரசியல், இராணுவ சூழ்நிலைகளை வைத்தே, நாம் வலிந்த தாக்குதல்களை மேற்கொள்ள வேண்டும்'' என அண்மைய நேர்காணலொன்றில் தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் துறைச் செயலர் பா.நடேசன் தெரிவித்திருந்தார்.

இதில் குறிப்பிடப்பட்ட விடயம், வன்னி மேற்கு மீதான இராணுவ நடவடிக்கைக்கு புலிகளின் நிலைப்பாட்டை தெளிவுபடுத்தியுள்ளது.

விடுதலைப் புலிகள், ஆயுதங்களை கீழே போட்டால் மட்டுமே, அரசு பேச்சுவார்த்தையில் ஈடுபடும் என்கிற அரசின் பிரகடனத்திற்குப் பதில் அறிக்கையாகவும் இதனைக் கொள்ளலாம்.அதேவேளை புலிகளுடன் இனிப் பேச்சுவார்த்தை கிடையாதெனவும் அரச தரப்பிலிருந்து செய்திகள் வெளியிடப்படுகின்றன.வடக்கிற்கு வசந்தத்தை அழைத்து வர, புலி அழிப்புப் பாதையில் பயணிக்கும் பேரினவாத ஆக்கிரமிப்புப் புயல், தென்னாசிய வல்லரசுகளின் ஆதரவுடன் தமிழினத்தை அழிக்கலாமென கற்பிதம் கொள்கிறது.

இந்தியாவிலிருந்து ஜனாதிபதி கொழும்பு திரும்பியவுடன் சீனா பாகிஸ்தானிற்கு பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ ஆயுதக் கொள்வனவுப் பயணமொன்றை மேற்கொள்ளப் போவதாக செய்திகள் கசிய விடப்பட்டுள்ளன.

தமிழக சட்டசபை தீர்மானத்தை விழுங்கி போர் நிறுத்தமொன்றை மேற்கொள்ளுமாறு அரசு மீது இந்தியா அழுத்தத்தைப் பிரயோகித்தால் சீனாவிடம் செல்வோமென்று எச்சரிக்கிறது அரசு.ஜனாதிபதி ஆலோசகர் பசில் ராஜபக்ஷவின் புதுடில்லி விஜயத்தின் போதும் இவ்வகையான பயணங்களை கோத்தபாய மேற்கொண்டார்.

காந்தி தேசத்தின் இரு பரிமாண குருட்டு ராடர்களின் களப் பயன்பாடு கேள்விக்குறியாகியுள்ள நிலையில் சீனாவின் முப்பரிமாண நெற்றிக் கண் ராடர்களோடு அதனை இயக்க செஞ் சீனத் தோழர்களை வரவழைக்கும் முயற்சியிலும் அரசு ஈடுபட விரும்புகிறது.

ஆனாலும் இந்தியாவிடம் முப்பரிமாண ராடர்கள் கையிருப்பில் இல்லையாவென்றே கேள்வியும் எழுகிகிறது.அவ்வாறு இருப்பினும் அதை ஏன் இலங் கைக்கு இந்தியா வழங்காமல் தவிர்க்கிறது என்கிற சந்தேகம் சீனாவிற்கு ஏற்படும் வாய்ப்புக்கள் அதிகம்.

இலங்கைக்கான சீனாவின் ஆயுத விநியோகத்தை அனுமதிக்கும் இந்தியா, அந்நாட்டின் இராணுவ தொழில்நுட்பவியலாளர்களின் பிரசன்னத்தை ஏற்றுக் கொள்ளாதென்பது அரசுக்கு புரியும்.ஆனாலும் இராணுவ நகர்வில் சாதனை நிகழ்த்துவதாக உலகிற்குக் கூறும் இலங்கை அரசு, வான் புலிகளின் பலத்தைச் சிதைக்க முடியாமல் தடுமாறும் போது, சீனா இடையில் புகுந்து விடுமென்கிற அச்சமே இந்தியாவிடம் மேலோங்கியுள்ளது.

அதாவது இலங்கை விவகாரத்தில் இருவிதமான பிரச்சினைகளை இந்தியா எதிர்கொள்வதாகக் கருதலாம்.முதலாவதாக நடுவன் ஆட்சி அதிகாரத்தை அசைத்துப் பார்க்கும் தமிழக எழுச்சி, இரண்டாவது இந்திரா ராடர்களின் பலவீனத்தால் தொடர் வெற்றித் தாக்குதல்களை மேற்கொள்ளும் வான் புலிகளை முறியடிக்க சீனாவினை நாடும் அரசு.

இந்த இரு முனை நகர்வுகளில் தமது அதிகாரம் குறித்த அச்சமும் பிராந்திய பாதுகாப்பு பற்றிய கவலையும் உள்ளடங்குகிறது.அதேவேளை தமிழக எழுச்சியின் எதிர்வினையாக தென்னிலங்கையில் உருவாகிக் கொண்டிருக்கும் இந்திய எதிர்ப்பு கருத்துருவாக்கங்களும் போராட்டங்களும் பிரதமர் மன்மோகன் சிங் அரசிற்கு அதிக கலக்கத்தை ஏற்படுத்துமென்று கருதலாம்.வான் புலிகளின் வல்லாண்மை குறித்து சிங்கள நாளேடுகள் வெளிப்படுத்தும் மிகைப்படுத்தப்பட்ட அரசியல் உத்தி கலந்த பரப்புரைகள், இந்தியா அமெரிக்காவிற்கு எதிரான கருத்தினை தென்னிலங்கை மக்கள் மத்தியில் விதைக்கின்றன.

விடுதலைப் புலிகளின் வானூர்திகளை இந்திய விமானிகள் ஓட்டுவது போலவும் எட்டுத் தடவைகள் தாக்குதல் நடத்தி விட்டு இந்துமா கடலில் தரித்து நிற்கும் உலக மகா வல்லரசின் கப்பலில் பாதுகாப்பாக இறங்கியதாகவும் அச் செய்திகள் கூறுகின்றன.அதாவது இரவு வானை வெளிச்சமாக்கும் விமான எதிர்ப்பு குண்டுகளின் வெடிப்பிலிருந்து வான் புலிகள் தப்பிச் செல்வதாயின் பலமான பின்புலமொன்று அவர்களுக்கு இருக்க வேண்டுமென்பதை இலங்கை அரசு வலியுறுத்த ஆரம்பித்துள்ளது.இதனை வேறு கோணத்திலும் நோக்கலாம், அரசியல் தீர்வு குறித்து பிரஸ்தாபிக்கும் அமெரிக்க தூதுவர் றொபேட் ஓ பிளேக்கின் சொல்லாடல்களுக்கு அச்சுறுத்தல் கலந்து எதிர்ப்புரைகளை மூலம் பதிலளிக்கும் உத்தியாகவும் இந்தக் கப்பல் கதைகளை கணிக்கலாம்.

பாகிஸ்தான் விமானிகள் மற்றும் இந்திய தொழில்நுட்பவியலாளர்களின் துணையோடு, தமிழருக்கு எதிராக யுத்தம் புரிவதாக மேற்கொள்ளப்படும் தமிழ் தேசிய ஊடகப் பரப்புரையை மறுதலிக்கவும் அதேவேளை அரசியல் தீர்வை முன்வைக்கத் தூண்டும் இந்தியா, அமெரிக்காவை மௌனமாக்குவதற்காக இப் புனை கதைகள் கட்டவிழ்த்து விடப்படுகின்றன.தற்போதைய தென்னிலங்கை அரசியல் களத்தில் சீன சார்புப் பார்வையானது யூ.என்.பி. உட்பட சகல கட்சிகள் மட்டத்திலும் விரிவடைய ஆரம்பித்துள்ளது.

அதன் பிரதிபலிப்பாகவே, அரசிற்கெதிராக சிறு துரும்பை இந்தியா வீசினாலும் எதிர்ப்பலைகள் பலமாக எழுகிறது.ஜீ.எஸ்.பி. பிளஸ் பறிபோனாலும் நிதி ஆதரவளிக்க சீனா வருமென்கிற திடமான நம்பிக்கையில், இறையாண்மையை விற்று சலுகைகளை பெறத் தயாரில்லையென்று ஜனாதிபதி கூறுவதை அவதானிக்க வேண்டும்.அதேவேளை தற்போதைய மோசமான உலக பொருளாதார நிலைமையில் ஜீ.எஸ்.பி. பிளசைப் பெற்றாலும் ஆடை ஏற்றுமதிக்கான கேள்வியின் அளவு குறைவாக இருக்குமென்பது அரசிற்கு புரியும்.13 ரில்லியன் (கூணூடிடூடூடிணிண) டொலர் பணமூடையில் நொந்து நூலாகியிருக்கும் அமெரிக்காவின் பொருளாதாரச் சீரழிவினால் உலகின் குறுகிய மன்னர்களான ஏனைய சிறிய வல்லரசுகளும் ஆடிப் போயுள்ளன.

மாதமொரு முறை வெளியிடப்படும் நுகர்வோர் வீதமும் கீழ் நோக்கிச் செல்கிறது.சலுகை மூலம் பெறப்பட்ட நன்மையை அந்நியச் செலாவணியாக மாற்றக்கூடிய பொருளாதார நிலைமை உலகெங்கும் இல்லை.இந்நிலையில் ஜீ.எஸ்.பீ. பிளஸ் சலுகை கிடைத்தாலும் கிடைக்காவிட்டாலும் பாதிப்பு ஒரே அளவாக இருக்குமென்பதை இலங்கை அரசு தெளிவாகப் புரிந்து கொள்கிறது.ஆகவே இறையாண்மை குறித்து பேசுவதெல்லாம் மீசையில் மண் ஒட்டாத கதை போலவே இருக்கும்.உலகப் பங்குச் சந்தையில் தொடர்ச்சியாக ஏற்படும் வீழ்ச்சி, இலங்கையின் அந்நியச் செலாவணியை ஈட்டித் தரும் பணப் பயிர் ஏற்றுமதியிலும் உல்லாசப் பயணத்துறை வருவாயிலும் தாக்கத்தினை இயல்பாகவே ஏற்படுத்தும்.

ஆதலால் கோடிக்கணக்கான ரூபாய்களை விழுங்கும் இராணுவச் செலவீனங்களை அதிகரிக்கும் அரசின் போக்கு, நாட்டின் பொருளாதாரத் தளத்தினை சிதைத்து விடும் அபாயத்தை நோக்கியே நகர்கின்றது.அமெரிக்காவை காப்பாற்றும்படி உலக நாடுகளுக்கு அழைப்பு விடுக்கப்படுகிறது. அத்தோடு சர்வதேச நாணயச் சபைக்கு நிதியுதவி செய்து ஆதரவு வழங்குமாறு அமெரிக்க அதிபர் வேண்டுகோள் விடுக்கிறார்.அமெரிக்க டொலரை மையப்படுத்திய உலகப் பொருளாதாரம் ஆட்டம் காணும் இவ்வேளையில் யுத்தத்தில் வெற்றி பெற்றவுடன் நாட்டின் பொருளாதாரத்தை உயர்த்துவோமெனக் கூறும் இலங்கை ஆட்சியாளர்களின் பேரினவாத மேதாவித் தனத்திற்குப் பலியாகப் போகிறவர்கள், சாதாரண மக்கள் என்பதைப் புரிய வைக்க இப் பூவுலகில் எவருமில்லை.

மிதமிஞ்சிய அளவிற்கு அமெரிக்க டொலர்களைத் திறை சேரிக் கையிருப்பில் வைத்திருப்பவர்கள், பொருளாதாரச் சீரழிவுச் சுனாமியிலிருந்து ஓரளவு தப்பித்து விடுவார்கள்.பன்னாட்டு வங்கிகள், கம்பனிகளில் தலைமை வகித்த பெருஞ் சுறாக்கள், கிடைத்தவற்றை சுருட்டிக் கொண்டு தப்பிவிட சிறிய மீன்களே சிலுவை சுமக்கத் தொடங்கியுள்ளனர்.77 இலிருந்து இற்றைவரை, பாதுகாப்பிற்கென ஒதுக்கப்பட்ட பல்லாயிரம் கோடி ரூபாய்களை நாட்டின் பொருளாதார மேம்பாட்டிற்கு செலவிட்டிருந்தால் இலங்கையானது கடன் இல்லாத தேசமாகவாவது இருந்திருக்கும்.

பேரினவாத மகாவம்சக் கற்பிதங்களை மூலதனமாகக் கொண்டு பிராந்திய அணு ஆயுத வல்லரசுகள் போடும் ஆதிக்க நாடகங்கள், தமிழினத்தின் அழிவிற்கே வழிவகுத்துள்ளது.கிளிநொச்சி என்றால் "சிவந்த மண்' என்கிறார் எல்லாவல மேதானந்த தேரர் பௌத்தர்களின் வரலாற்றுப் பொக்கிஷமான பூர்வீக நிலத்தை மீட்கும் போர், அங்கு நடைபெறுவதாக அவர் கூறுகிறார். பேரினவாதத்தின் ஆழ்மனத்துள் படிந்துள்ள மகாவம்ச ஆசைகள் கிழக்கு மற்றும் மன்னார் நில வெற்றிகண்டு வெளிக் கிளம்ப ஆரம்பித்துள்ளது.பயங்கரவாதத்திற்கெதிரான போர் இதுவெனக் கூறிய பௌத்த சிங்களம், தமது சுயரூபத்தைத வெளிப்படுத்தும் வகையில் "நில மீட்புப் போர்' என்கிற சொல்லாடலை பிரயோகிக்கிறது.

அரசின் இராணுவ முனைப்பை பயங்கரவாதத்திற்கெதிரான போரென நியாயப்படுத்தும் ஐரோப்பிய நாடுகளும் அமெரிக்காவும் குறிப்பாக இந்தியாவும் தேரரின் கூற்றினை புரிதல் வேண்டும்.புரிந்தும் பரியாதது போல் நடிக்கும் வல்லரசுகளுக்குப் புரிய வைப்பதை விட போராடும் இனம் இதனைத் தெளிவாக உணர்ந்து கொண்டாலே போதும்.தமிழகம் எடுத்த சர்வகட்சித் தீர்மானம் இந்தியத் தலைமைக்கு எடுத்துக் கூறப்பட்டு விட்டது. புதுடில்லிக்கு விஜயம் செய்த மஹிந்த ராஜபக்ஷ, போரை நிறுத்தப் போவதில்லையென்கிற தனது நிலைப்பாட்டினை மிக அழுத்தமாக மன்மோகன் சிங்கிடம் தெரிவித்துள்ளார்.

பிராந்திய வல்லரசொன்றின் தலைநகரில் நின்றவாறு, விடுதலைப் புலிகளின் ஆயுதங்களைக் களைந்த பின்னரே, அரசியல் தீர்வு பற்றி பேச முடியும்' என இலங்கை ஜனாதிபதி செய்த யுத்தப் பிரகடனம் சர்வதேச நாடுகளில் எத்தகைய எதிர்வினைகளை ஏற்படுத்துமென ஊகிக்க முடியாது.ஆனாலும் விடுதலைப் புலிகள் கடைப்பிடிக்கும் தற்காப்பு நிலைப் பரிமாணத்திற்குப் பெருஞ் சவாலாக இந்த ஜனாதிபதியின் டில்லிப் பிரகடனம் அமையப் போகிறது.
-இதயச்சந்திரன்
Sunday, 16 November 2008 04:29 தராக்கிராம் சமகால அரசியல் ""தேசிய ரீதியாக, அனைத்துலக ரீதியாக எமக்குச் சாதகமான அரசியல், இராணுவ சூழ்நிலைகளை வைத்தே, நாம் வலிந்த தாக்குதல்களை மேற்கொள்ள வேண்டும்'' என அண்மைய நேர்காணலொன்றில் தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் துறைச் செயலர் பா.நடேசன் தெரிவித்திருந்தார்.

Comments