தாயகத்தில் சிறீலங்கா சிங்கள இனவாத அரசின் இன அழிப்பையும், மனித உரிமை மீறல்களையும் வெளிப்படுத்திக் கண்டனத்தைத் தெரிவிக்கும் ஒரு செயற்பாடாக யேர்மனியில் தமிழ்க் கல்விக் கழகத்தின் 130 தமிழாலயங்களின் 6500 மாணவர்களும் அவர்களின் 950 க்கு மேற்பட்ட ஆசிரியர்களும் ஒருங்கிணைந்து தமிழாலயங்களில் 29.11.2008 தொடக்கம் நான்கு வாரங்களுக்குத் தொடர்ச்சியாக கொடிவார நிகழ்வைத் தாயக உணர்வோடு முன்னெடுத்துவருகின்றனர்.
நேற்று சனிக்கிழமை இந் நிகழ்வு ஆரம்பமாகியது.இச் செயற்பாட்டுக்கென கல்விக் கழகத்தினால் விசேடமாகத் தயாரிக்கப்பட்ட கொடிவார அட்டையில் தாயகத்தில் இடம்பெயர்ந்த 300000 க்கு மேற்பட்ட உறவுகள் அனுபவித்துவரும் துன்பங்களை தமிழ், யேர்மன் ஆகிய இரு மொழிகளிலும் குறிப்பிடப்பட்டுள்ளன.
குறிப்பாக தாயகத்தில் தமிழ் மாணவச் சமூகம் அனுபவித்துவரும் துயர நிலையை தாம் பயிலும் யேர்மனியப் பள்ளிகளின் ஆசிரியர்களுக்கும் சக மாணவர்களுக்கும் வெளிப்படுத்துகின்ற செயற்பாடாகவும் முன்னெடுக்கப்படவுள்ளது.
Comments