ஈழத்தமிழருக்கு ஆதரவான எழுச்சியில் உடல் வலுக்குறைந்தோர் பங்கேற்பு




இந்திய மத்திய மாநில அரசைக் கண்டித்து ஈழத்தமிழருக்கு ஆதரவாக உடல் வலுக்குறைந்தோர் தமிழ்நாடு எங்கும் ஆர்ப்பாட்டங்களை நடத்தி வருகின்றனர்.
இது தொடர்பாக தமிழ்நாடு உடல் ஊனமுற்றோர் சங்கங்களின் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் த.பிரகாஷ்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:

எமது யெங் இண்டியன் சொசைட்டியின் சார்பாக உடல் ஊனமுற்றோர்கள் ஈழத்தில் போர் நிறுத்தம் மற்றும் அனைத்துலக தொண்டு நிறுவனங்களை வன்னியில் அனுமதிக்கக் கோருதல் உள்ளிட்ட ஏழு அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு எங்கும் ஆர்ப்பாட்டம் செய்து வருகின்றனர்.

எமது கூட்டமைப்பின் சார்பாக தமிழகத்தின் தென்பகுதியில் உள்ள ஒன்பது மாவட்டங்களிலும் போராட்டத்தை வலுப்படுத்தியுள்ளோம்.

அதேவேளையில், சென்னையில் எதிர்வரும் சனிக்கிழமை (29.11.08) மாபெரும் ஆர்ப்பாட்டத்தை நடத்துவதற்கு அனைத்து ஏற்பாடுகளையும் செய்துள்ளோம்.

இதில் தமிழகம் முழுவதும் உடல் ஊனமுற்றோர்களின் சங்கங்கள் சார்பாக தமிழ்நாடு உடல் ஊனமுற்றோர் சங்கங்களின் கூட்டமைப்பு மற்றும் தென்மண்டல கூட்டமைப்பு போன்ற பெரிய அமைப்புக்கள் பங்கேற்க உள்ளன என்று அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.




Comments