கொழும்பு மகசீன் சிறைச்சாலையில் மாவீரர் நாள் நடைபெற்றது



கொழும்பு மகசீன் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகள் மாவீரர் தினத்தை எவ்வித தடைகளுமின்றி அனுஷ்டித்ததாக தெரிவிக்கப்படுகின்றது. கடந்த 27ம்திகதி 60க்கும் மேற்பட்ட அரசியல் கைதிகள் தமிழீழத்தின் விடுதலைக்காக உயிநீர்த்த மாவீரர்களின் நினைவாக மாலை வேளையில் ஈகைச்சுடர் ஏற்றி அகவணக்கம் செய்தனர்.

இதனையடுத்து மாவீரர்களின் நினைவாக கவிதைகள், பாடல்களும் இடம்பெற்றதாக தெரிவித்தனர்.கடந்த வருடம் மாவீரர் தினத்தில் கைதிகள் மீது பல்வேறு அசௌகரியங்களை சிறை அதிகாரிகள் ஏற்படுத்தினர் ஆனால் இவ்வருடம் எவ்வித தடைகளையும் ஏற்படுத்தாது எமது நிகழ்வை பார்வையிட்டதாகவும் அரசியல் கைதிகள் தெரிவித்தனர்.


Comments