ஒப்பற்ற தலைவரின் காலத்தில் தமிழீழ விடுதலைப் போராட்டம் நடைபெற்று வருகிறது, இந்த விடுதலைப் போராட்டம் தலைவரது காலத்தில் நிச்சயம் வெற்றிபெறும்-- சீமான்
சிங்கள அரசு அனைத்துலக நாடுகளின் உதவியுடன் போரை முன்னெடுப்பதால், தமிழீழ விடுதலைப் புலிகள் சிறீலங்கா அரசுடன் மட்டுமன்றி, அனைத்துலகத்துடன் போரிட்டு வருவதாக, தமிழன உணர்வாளர் இயக்குனர் சீமான் தெரிவித்துள்ளார்.
பிரித்தானியத் தலைநகர் லண்டனில் நடைபெற்ற மாவீரர் நாள் (தேசிய நினைவெழுச்சி நாள்) நிகழ்வில் ஒலிவடிவில் இடம்பெற்ற சீமானின் உரையில் அவர் இதனைக் கூறியிருப்பதாக, பிரித்தானியச் செய்தியாளர் தெரிவிக்கின்றார்.
ஒப்பற்ற தலைவரின் காலத்தில் தமிழீழ விடுதலைப் போராட்டம் நடைபெற்று வருவதாகவும், இந்த விடுதலைப் போராட்டம் தலைவரது காலத்தில் நிச்சயம் வெற்றிபெறும் எனவும் சீமான் உறுதியாகக் கூறினார்.
தமிழனாகப் பிறந்த ஒவ்வொருவருக்கும் ஒரு வரலாற்றுக் கடமை காத்திருப்பதாகவும், அதுவே இன்று அனைவரும் செய்ய வேண்டியது எனவும் சீமான் தனதுரையில் குறிப்பிட்டார்.
தமிழ்நாட்டில் பல்வேறு தடைகளையும் தாண்டி ஏற்பட்டுள்ள மக்கள் எழுச்சி போன்று, எந்த நூற்றாண்டிலும் கிடைக்காத ஒப்பற்ற பெருந்தலைவனின் அணியில் உலகத் தமிழினம் அணிதிரள வேண்டும் எனவும் சீமான் அழைப்பு விடுத்தார்.
Comments