ஞானசேகரன் என்ற இன துரோகி(காங்ரஷ்)

மறைந்த முன்னாள் இந்திய பிரதமர் ராஜீவ் காந்தியின் மேல் உண்மையான அன்பும் பாசமும் வேலூர் சட்டமன்ற உறுப்பினர் ஞானசேகரன் அவர்களுக்கு, ஒரு சராசரி தமிழக குடிமகனின் கேள்வி.

சட்டசபையில் தங்களின் அறிவுபூர்வமான கேள்விகளை கண்டு புல்லரித்து போனவர்களில் நானும் ஒருவன்.

///// இலங்கை தனி நாடு அதற்கென தனி இறையான்மை உண்டு, எனவே மத்திய அரசின் மூலம் தான் நடவடிக்கை எடுக்க சொல்ல முடியும்.////

உண்மையில் அசத்தலான பேச்சு, எப்படி உங்களால் இப்படி பேச முடிகிறது. அன்று பங்களாதேஷ் என்ற நாட்டை பிரித்து கொடுக்கும் போது பாகிஸ்தான் என்ற நாட்டிற்கு தனி இறையாண்மை இருப்பது அன்று ஆட்சி செய்த கொண்டு இருந்த காங்கிரஸ் அரசிற்கு தெரியவில்லையா? அல்லது இந்திய அமைதி படை என்று கூறிக்கொண்டு அதிரடியாக நடந்து கொண்ட அன்றைய காங்கிரஸ் அரசிற்கு தெரியவில்லையா? இலங்கை என்ற நாட்டிற்கு தனி இறையாண்மை இருக்கிறது என்று?

///////////நமக்கென ஒரு எல்லை இருக்கிறது அந்த எல்லைக்கு உட்பட்டுத்தான் பிரச்சனையை அணுகவேண்டும், முதல்வர் தீர்மானம் கொண்டு வந்தார், ராஜீவ் இழந்த நிலையிலும் காங்கிரஸ் அந்த தீர்மானத்தை ஆதரித்தது.//////////////

என்ன எல்லை இருக்கிறது என்று எங்களுக்கு புரியவில்லை, நீங்களே சொல்லிவிடுங்கள் பாகிஸ்தான் என்ற நாட்டிற்கு எவ்வளவு எல்லை, இலங்கை மற்றும் சீனா போன்ற நாட்டிற்கு என்ன எல்லை வைத்து உள்ளீர்கள் என்று, நீங்கள் கூறுவதை பார்த்தால் காங்கிரஸ் எதோ வேண்டா வெறுப்பாக இந்த தீர்மானத்தை ஆதரித்தது போல் அல்லவா சொல்லி உள்ளிர்கள். ஞானசேகரன் எழுதி வைத்துகொள்ளுங்கள் அடுத்த முறை உங்களை வேலூர் மக்கள் மிக உயர்ந்த இடத்தில் வைப்பார்கள்.

///////////விடுதலை புலிகளை ஆதரிக்கும் கூட்டமாக இருந்தால் அங்கே சென்று போராடுங்கள்.விடுதலை புலிகளுக்கு வால் பிடிக்கும் கூட்டம் எல்லாம் இங்கே பேச கூடாது.///////////////////

அய்யா தமிழ் உணர்வு உள்ள எவரும் இதை பற்றி பேசலாம் அவன் திமுக-வாக
இருந்தாலும் அதிமுக-வாக இருந்தாலும் மதிமுக-வாக இருந்தாலும் விடுதலை சிறுத்தைகளாக இருந்தாலும் அல்லது பாமக-வாக இருந்தாலும் ஏன் காங்கிரஸ் தோழர்கள் கூட ஈழ பிரச்சனையை பேசலாம், எங்களுக்கு உங்களை போல் ஓட்டு பொறுக்கும் அவசியம் இல்லை.

தலைமை இடம் நல்ல பெயர் வாங்க அவசியம் இல்லை. நாங்கள் சாதாரண தொண்டர்கள். அது சரி விடுதலை புலிகளுக்காக அல்ல அவர்களின் அரசியலும் தெரியாது, ஆனால் ஈழ தமிழர்களுக்காக நாங்கள் அங்கு சென்று போராட தயார் அதை போல் நித்தம் அமரர் ராஜீவ் காந்தி அவர்களை நினைக்கும் நீங்கள் அவர் மேல் கொண்ட பற்றால் ....................... புரியும் என்று நினைகிறேன். சத்தியமாக ஞானசேகரன் பதவிக்காக நடிக்கும் உங்களை அமரர் ராஜீவ் காந்தியின் ஆத்மா கூட மன்னிக்காது.

////////////பிரபாகரன் சரணடைந்தால் போர் நிறுத்தம் என்று ராஜ பக்க்ஷேயே அறிவித்து உள்ளார்.அதற்கு இங்கு உள்ளவர்கள் பொறுபேற்க தயாரா ? தயார் என்றால் மன்மோகன் சிங் நடவடிக்கை எடுப்பார் என்று நான் கூறுகிறேன்./////////////

தூ தூ உன்னை இன துரோகி என்ற பட்டியலில் கூட சேர்க்க முடியாது, பிரபாகரன் ஒருவருக்காக ஒரு இனத்தையே காட்டிகொடுக்கும் கருங்காலி நீ,தமிழன் எப்படி செத்தாலும் கவலை இல்லை என்று கூறும் உன்னை எப்படி அழைப்பது. ஆம் மன்மோகன் சிங் தலை மயி..... காக பேசுவார், ஆனால் தமிழன் உயிருக்காக பேசுவாரா? எப்படி பேசுவார் உன்னை போல் இன துரோகி இருந்தால் அங்கு சீக்கியன் ஒற்றுமையாக இருந்து சாதிகின்றான், இங்கு உன்னை போல் பதவிக்காக பேசி அழிகின்றான்.

இதோ நம் மண்ணில் மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி அவர்களை கொல்ல முயன்ற சிங்கள ராணுவ வீரனை கீழே உள்ள படத்தில் பாருங்கள்,


இந்த நிகழ்வை பற்றி தெரியாதவர்கள் இந்த தளத்திற்கு சென்று பாருங்கள்.

http://video.aol.com/video-detail/indian-pm-rajiv-gandhi-attacked-by-sinhala-sri-lankan-army-soldier/3930407917

ஒருவேளை அந்த தாக்குதலில் அவர் உயிர் நீத்து இருந்தால் சிங்கள இனத்தை பூண்டோடு அழித்து இருப்பீர்களா? ஞானசேகரன் போர் நிறுத்தத்திற்கும் விடுதலை புலிகளுக்கும் என்ன தொடர்பு, இங்கு தீவிரவாதம் (உங்கள் மொழியில்) செய்து கொண்டு இருக்கும் உல்பா இயக்கத்தை இந்திய பேரரசு குண்டு வீசி தாக்கி கொல்கிறதா?

நக்சலைட் தீவிரவாதிகளை இந்திய பேரரசு குண்டு வீசிதான் கொல்கிறதா? ஏன் மறைந்த வீரப்பன் பல வருடங்களாக காட்டில் மறைந்து வாழ்ந்த போதும் இந்திய பேரரசு குண்டு வீசி தாக்கவில்லை. ஆனால் நாட்டில் வாழ்ந்து கொண்டு இருக்கும் தன் நாட்டின் குடிமகன் மீது குண்டு வீசும் ராஜபக்சே கண்டிக்க துப்பில்லாத உங்களுக்கு பதவி ஒரு கேடா?


உங்களை சொல்லி குற்றம் இல்லை, உங்களை போன்றவர்களை ஒட்டு போட்டு தேர்ந்தெடுத்த வேலூர் மக்களை சொல்ல வேண்டும். பாவம் அவர்கள் என்ன செய்வார்கள் வெட்கி தலைகுனிவதை தவிர?
தன்மானம் உள்ள இந்திய அரசாக இருந்தால் இரு தரப்பையும் அழைத்து பேச்சு வார்த்தை நடத்தி இருக்க வேண்டும். குறைந்த பட்சம் ஈழ தமிழர் மத்தியில் அவர்கள் எதை விரும்புகிறார்கள் என்று வாக்கெடுப்பு நடத்த ஏற்பாடு செய்யும் துணிச்சல் நம் அரசிற்கு இருக்கிறதா? பதவி வெறிபிடித்த இதைபோல் ஜென்மங்கள் இருக்கும் வரை தமிழனக்கு விடிவு கிடையாது.

Comments