சிறிலங்கா, இந்திய அரசுகளை உடனே போரை நிறுத்த வலித்யுறுத்தி தலித்திய சமூக நீதி உரிமைப் பேரவை சார்பில் பேரணி மற்றும் ஆர்ப்பாட்டம் தூத்துக்குடியில் நடைபெற்றது. நேற்று காலை 10 மணியளவில்தூத்துக்குடி பால விநாயகர் ஆலயம் முன்பு தொடங்கிய பேரணி தூத்துக்குடி மாநகராட்சி அலுவலகம் முன்பாக ஆர்ப்பாட்டத்தோடு நடைபெற்றது.
இப்பேரணி ஆர்ப்பாட்டத்திற்கு தோழர் ஆ தவராசுப் பாண்டியன் (மாவட்ட அமைப்பாளர் தலித்திய சமூக நீதி உரிமைப் பேரவை) தலைமை தாங்கினார். தோழர் புலி. செ.பிரான்சிஸ் முன்னிலை வகித்தார். இப்பேரணியை தமிழிய புரட்சிப்புலிகள் தோழர் இர.க.சசி தமிழ்ச்செல்வன் துவக்கி வைத்தார். தொல்தமிழர் பேரவை தோழர் பறைமுதல்வன், தமிழியப் புரட்சிப்புலிகள் தோழர் பாலம் ஆறுமுகம், உழைக்கும் மக்கள் விடுதலை இயக்க அருட்திரு வெனி.இளங்குமரன், ஆதித்தமிழர் பேரவை தோழர் வே.மனோகரன் பெரும்பான்மை மக்கள் கழக தோழர் க.வே.முருகேசன் ஆகியோர் சிறப்பாக தங்கள் கண்டன உரையை பதிவு செய்தனர்.
இறுதியாக விளக்கவுரையாக பெரியார் திராவிடர்கழக தலைமைக்கழக உறுப்பினர் தோழர் பால்.பிரபாகரன் சிறப்பாக தமிழின விரோதிகளை அடையாளப்படுத்தியும், போலி மார்க்சியம் பேசும் மார்க்சிச கட்சி வரதராஜன், கொங்கிரசு கட்சி ஞானசேகரன், சுப்பிரமணிய சுவாமி, துக்ளக் சோ மற்றும் தினமலர், இந்து ராம் போன்ற தமிழின எதிரிகளை அடையாளப்படுத்தி தனது கண்டன உரையை சிறப்பாக பதிவு செய்தார்.
இந்நிகழ்வில் கிறித்துவ வாழ்வுரிமை இயக்க அருட்திரு சுந்தரி மைந்தன், தமிழீழ விடுதலை ஆதரவாளர் ஒருங்கிணைப்புக்குழு தோழர் தமிழ்மாந்தன், தமிழ்நாடு மாணவர் கழக தோழர் வ.அகரன், பெரியார் தி.க. மாவட்ட துணைச்செயலாளர் தோழர் க.மதன், பெரியார் தி.க. நகரச்செயலாளர் தோழர் பால்.அறிவழகன் மற்றும் தமிழின உணர்வாளர்கள் பலர் கலந்துகொண்டனர்.
Comments