அரசியல் தீர்வு என்பது என்ன மந்திரக் கோல் மாயமா...?

பூநகரியை இராணுவத்தினர் தம்வசமாக்கிய அன்று, கடந்த சனிக்கிழமையன்று, ஜனாதிபதி அலரிமாளிகையில் இருந்து விசேட செய்தி ஒன்றைத் தொலைக்காட்சி மூலம் நாட்டு மக்களுக்கு விடுத்தார்; உரையாற்றினார்.

போர்க் களத்தில் வெற்றியை ஈட்டிக்கொடுத்த படையினரைப் பாராட்டுவ தற்காகவே அந்த விசேட ஒலிபரப்பு நிகழ்த்தப்பட்டது.

அதன் ஓர் அம்சமாக, ஆயுதங்களைக் கீழே வைத்து விட் டுப் பேச்சுவார்த்தைக்கு வருமாறு தமிழீழ விடுத லைப்புலி களின் தலைவர் வே.பிரபாகரனுக்கு மீண்டும் அழைப்பு விடுவதையும் ஜனாதிபதி சேர்த்துக் கொண்டார்.
அதற்கு ஒருசில நாள்களுக்கு முன்னர் இந்தியா சென்றி ருந்தவேளை, புதுடில்லியில் செய்தியாளர்களுக்குக் கருத் துத் தெரிவிக்கையில் -

தமிழீழ விடுதலைப்புலிகளுடன் போர்நிறுத்தம் என்ற பேச்சுக்கே இடமில்லை என்று திட்டவட்டமாக - வெட்டு ஒன்று துண்டு இரண்டாக - கூறியிருந்தார். அவரது அந்தக் கருத்து தமிழகத்தின் ஏழு கோடி மக்களின் கோரிக்கையை - இலங்கையில் போர்நிறுத்தம் கொண்டுவர வேண்டும் என்ற அனைத்துத் தமிழகக் கட்சிகளின் தீர்மானத்தை- கருத்தை- தூக்கி வீசுவது போன்று, அவர்களை அவமதிப்பது போன்று இருந்தது.

இந்திய அரசின் ஊடாக- மறை முகமாக - எனக்குப் புத்திசொல்ல நீங்கள் யார் என்று தமிழகத் தலை வர்களை அலட்சியம் செய்வதாக, உதாசீனப் படுத்துவதாக, அவமரியாதை செய்வதாக அமைந்திருந்தது.

அதன் தாக் கமே, ராஜபக்ஷ சொல்வதை நம்பி ஏமாறாதீர்கள் என்று முதல்வர் கருணாநிதி மத்திய அரசின் கவனத்தை ஈர்த்து தமிழகச் சட்டசபையில் நிகழ்த்திய உரை.
விடுதலைப்புலிகளோடு போர்நிறுத்தம் இல்லை என்ற அழுங்குப்பிடியைத் தாம் கைவிடப்போவதில்லை என்ப தனை ஜனாதிபதி மீண்டும் மீண்டும் வெளிப்படுத்தி வருகி றார்.

வார இறுதியில் புத்திஜீவிகளுடன் நடத்திய சந்திப் பிலும் தமது நிலைப்பாட்டை இடித்து உரைத்திருக்கிறார் அவர்.
வடக்கு - கிழக்கில் இப்போதுள்ள நிலைகளின் பிர காரம் போர்நிறுத்த உடன்படிக்கை அவசியமே இல்லை என்று விளக்கியிருக்கிறார் அவர்களுக்கு. போர்நிறுத்தம் தற் போது பலவீனமடைந்திருக்கும் விடுதலைப்புலிகளை மீண் டும் பலமுள்ளவர்கள் ஆக்குவதற்கே உதவும் என்று வியாக் கியானமும் வேறு கொடுத்துள்ளார்.

அது ஒருபுறமிருக்க -
போரின் இறுதிக்கட்டம் நெருங்கியிருப்பதால் அடுத்த நடவடிக்கையாகத் தமிழ் மக்களின் பிரச்சினைக்கு அரசி யல் தீர்வு யோசனையை மிக விரைவில் முன்வைப் பதற் குத் தாம் கூடுதல் கவனம் செலுத்துவதாகவும் ஜனாதிபதி புத்திஜீவிகளிடம் எடுத்துக் கூறியுள்ளார்.
இத்தனைக்கும், இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வுக் குரிய ஏற்புடைத்தான, அர்த்தபுஷ்டியான அரிச்சுவடிகூட எழுதப்படவில்லை. அனைத்துக் கட்சிக்குழு என்ற தமிழ் மக்களின் பிரதிநிதித்துவம் இல்லாத ஒன்றின் ஊடாகத் தமக்கு வாய்ப்பான ஒரு தீர்வு யோசனையை முன்வைத்து அத னைத் தமிழர் மீது திணிப்பதே மஹிந்தரின் உள்ளார்ந்த சூழ்ச்சி நிறைந்த எண்ணம்.

அருகில் உள்ள பிராந்திய வல்லரசான இந்தியாவுடன் பகைத்துவிடக்கூடாது என்பதற்காக, அதனோடு இருபத் தொரு வருடங்களுக்கு முன்னர் செய்த ஒப்பந்தத்தின் பிர காரம் எழுதப்பட்ட 13ஆவது அரசமைப்புச் சட்டத் திருத் தத்தை கையில் எடுத்துப் பிடித்திருக்கிறார் ஜனாதிபதி. அலி பாபாவின் அற்புத விளக்காக அதைக் காட்டித் தமிழ் மக்க ளையும் சர்வதேசத்தையும் ஏமாற்றிக் காலத்தைப் போக் கலாம் என்பது அவரின் உள்ளார்ந்த நோக்கம்.

13ஆவது அரசமைப்புச் சட்டத்திருத்தம், தமிழர்களின் அரசியல் அபிலாசைகளைத் திருப்திகரமாக நிறைவேற் றுவதை எட்டிக்கூடப் பார்க்கவில்லை என்று தெரிவித்து அவர்களால் நிராகரிக்கப்பட்ட ஒன்று.

தமிழர்களுக்கு எதனையோ கிள்ளித் தெளிப்பது போன்று, 13ஆவது திருத்தத்துக்கு அப்பாலும் சென்று தீர்வு யோசனை ஒன்றை முன்வைக்கப்போவதாக, இந்தியாவைத் திருப் திப்படுத்துவது போன்று செயற்படுவதிலேயே ஜனாதிபதி முனைப்பாக உள்ளார்.

அனைத்துக் கட்சிக் குழுவுக்கு ஆலோசனை வழங்க அமைக் கப்பட்ட அரசியல் நிபுணர்களின் சிபார்சுகள் சில வற்றை ஜனாதிபதி ஏற்றுக்கொள்ளவில்லை என்ற செய்திகள் கசிந் திருப்பதும் இங்கு கருத்திற்கொள்ளப் படவேண்டிய ஒன்று.

13ஆவது சட்டத்திருத்தம், முருக்கம் செத்தலுக்கு வர் ணப் புடவை கட்டிவிட்டது போன்ற ஒரு பம்மாத்து என் பது பல வருடங்களுக்கு முன்னரே தமிழ் மக்களிடையே பேசப் பட்ட ஒன்று. 13ஆவது சட்டத் திருத்தத்தைத் தமி ழர்கள் முழுமையாக நிராகரித்தார்கள் என்பதனைத் தெரிந்து கொண் டும், அதன் அடிப்படையில் அரசியல் தீர்வு இயற்றப் படுவதாக ஜனாதிபதி மஹிந்த கூறுவது காலத்தை வாங் கும் உத்தியே; தமது பதவிக்காலத்தை நிலைநிறுத்தும் புத்தியே.

தமிழர் தரப்பின் நிலைப்பாடு ஒருபுறமிருக்க -
13ஆவது திருத்தத்துக்கு அப்பால் சென்று ஒரு தீர்வை உருவாக்குவதற்குத் தெற்கின் சிங்களப் பேரினவாதம் ஜனாதி பதியை அனுமதிக்குமா என்பது பிரதான கேள்வி.

13ஆவது திருத்தத்துக்கு அப்பால் சென்று அரசியல் தீர்வு ஒன்றைக் காண்பது என்பது பிரச்சினைக்குத் துணை போகும் என்று தேசப்பற்றுள்ள தேசிய நிலையம் சங்கு ஊது வதற்குத் தொடங்கிவிட்டது.
அரசாங்கம் அதனை நாடிச் செயற்படுத்துவதில் ஆர்வம் காட்டுமானால், தெற்கில் நெருக்கடி நிலையை எதிர்கொள்ள நேரிடும் என்று அந்தப் பேரினவாத அமைப்பு எச்சரித் துள்ளது.

பயங்கரவாதத்துக்கு எதிரான நடவடிக்கை என்பது பிரி வினையைத் தோற்கடிப்பதாகும். அப்படியிருக்க 13ஆவது திருத்தத்துக்கும் அப்பால் செல்வதென்பது ஏற்றுக்கொள்ள முடியாதது. பிரிவினைவாதத்துக்கு ஊக்கமளிக்கும் சதித் திட்டத்தைத் தோற்கடிப்பதற்கு, தேசப்பற்றுள்ள ஒவ்வொ ருவரும் ஒன்றுபட வேண்டும் என்று ஆதரவு திரட்டவும் ஆரம்பித்துள்ளது அந்த அமைப்பு.

இத்தகைய இடக்குமுடக்கான பின்னணியில், தமிழர் களின் அரசியல் அபிலாசைகளை ஓரளவுக்கேனும் நிறை வேற்றக்கூடிய அரசியல் தீர்வைத்தானும் மஹிந்த அரசால் ஒப்பேற்ற முடியுமா என்பது நூறு வீதம் சந்தேகத்துக்கு உரியது.
நிலைமை இவ்வாறிருக்க,

அரசியல் தீர்வு என்ற எட்டாக் கொப்பை ஜனாதிபதி மஹிந்தவினால் பிடிக்க முடியுமா? மாயாஜாலம்காட்டி ஓர் உருப்படியான அரசியல் தீர்வைக் கொண்டுவருவது என்பது வெற்றுப்பேச்சே. அதில் சந் தேகம் எதுவும் இல்லை! அரசியல் தீர்வு என்பது, என்ன, மந்திரக் கோல் மாயம் என்ற நினைப்பா?

Comments