இந்தியாவின் இறையாண்மையை கேள்விக்குள்ளாக்கும் சிங்கள குள்ள நரித்தனம்


சிங்களப் பேரினவாத அரசின் கொடூரத் தாக்குதலுக்குள்ளாகியிருக்கும் ஈழத்தமிழர் மீதான போர்நிறுத்தத்தை வலியுறுத்தும் மாநாடு, கருநாடக மாநில பெரியார் திராவிடர் கழகத்ததினால் நடத்தப்பட்டது. நவம்பர் 23ம் திகதி ஞாயிற்றுக்கிழமை மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரை நடைபெற்றது.

சோமசாச வேதிகே என்ற அமைப்பின் சார்பில் அசோக், கருநாடக தமிழ் மக்கள் இயக்கத்தின் சார்பில் அய்.இராசன்,

தமிழ்ச் சங்கத் துணைத் தலைவர். மீனாட்சி சுந்தரம் மற்றும் பல்வேறு தமிழ் அமைப்புகளைச் சேர்ந்த தமிழ் உணர்வாளர்கள் கலந்துக் கொண்டு, சிங்கள அரசின் காட்டுமிராண்டித்தனத்தையும், இந்த இனப்படுகொலைக்குத் துணைபோகும் இந்திய அரசின் துரோகத்தை கண்டித்து கண்டன உரையாற்றினர்.

இதனை தொடர்ந்து, பேராசிரியர். சரசுவதி அவர்கள் சிறப்புரையாற்ற, பெரியார் திராவிடர் கழகத் தலைவர்.கொளத்தூர்.மணி அவர்கள் மாநாட்டு நிறைவுறையாற்றினார். பேராசிரியர்.சரசுவதி அவர்கள் தனது உரையில், இலங்கையின் பூர்வீக குடிகள் தமிழர்களே, இலங்கை என்ற பெயரிட்டதே தமிழன் தான், இலங்கை திவுக்கு தாமிரபரணி என்ற பெயரும் உண்டு என்ற செய்திகளை சரித்திர சான்றுகளோடு விளக்கி பேசினார்.கொளத்தூர்.மணி அவர்கள் தனது நிறைவுரையில், தமிழ்நாட்டு மக்களின் ஈழ ஆதரவு கட்டுடைத்து வெளிப்படும் நேரத்தில்,சகோதர யுத்தம் என்றப் பெயரிட்டு, தமிழ்நாட்டின் அரசியல் தலைவர்களின் திரிபுவாதத்திற்கு பதில் அளிக்கும் வகையில் 2005 -இல் நடைபெற்ற தேர்தலில் புலிகளின் ஆதரவு பெற்ற தமிழ் தேசிய கூட்டமைப்பு வெற்றிப் பெற்றதையும், இந்த அமைப்பில் மாற்று இயக்கத்தவர்கள் கூட, கடந்த கால தவறுகளை உணர்ந்து விடுதலைப் புலிகளின் தலைமையை ஏற்றுக்கொண்டதை சுட்டிக்காட்டினார்.

பெரியார் திராவிடர் கழகத் தலைவர் கொளத்தூர் மணி அவர்கள், ஈழத்தமிழர் படுகொலைக்கு சிங்களனுக்கு ஆயுதம் கொடுத்து, இலங்கையின் இறையாண்மையை காக்கும் இந்தியாவின் இறையாண்மையை கேள்விக்குள்ளாக்கும் சிங்கள குள்ள நரித்தனத்தை... "ஆபரேஷன் முத்துமாலை" என்றப் பெயரில், இந்திய துணைக்கண்டத்தை சுற்றிலும்... தளங்களை அமைத்து வரும் சீனாவிற்கு சீறிலங்கா அரசு1987-ராசீவ் - ஜெயவர்த்தனே ஒப்பந்தத்தை மீறி இடமளித்திருப்பது -இந்தியாவின் பாதுகாப்பை காவு கேட்கும் நடவடிக்கை
இது பற்றி கவலைப்படாத அரசு மற்றும் உளவு நிறுவன அக்கரையின்மை குறித்தும் விரிவான நிறைவுரையாற்றினார்.

(அருணாசலபிரதேசம், சீனாவின் பகுதியே என்று அண்மையில் சீனம் குறிப்பிட்டிருப்பதும்,1962-இல் நடைப்பெற்ற யுத்தத்தில் இந்தியா படுதோல்வி அடைந்தது நினைவு கூறத்தக்கது) பெரியார் திராவிடர் கழகத்தினர் நடத்திய இம்மாநாட்டில் கருநாடகத்தில் உள்ள தமிழ் அமைப்புகளும், அரசியல் கட்சியினரும், மாணவர்கள் மற்றும் பலரும் கலந்து கொண்டார்கள்.

Comments