தமிழக கல்லூரி மாணவர்களிடையே பிரபாகரன் ஒரு மாவீரனே: குமுதம் ரிப்போர்ட்டர் கருத்துக்கணிப்பு


தமிழக கல்லூரி மாணவர்களிடையே தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் ஒரு மாவீரனாகவே பார்க்கப்படுகின்றார் என்பது உண்மை என்று தமிழ்நாட்டிலிருந்து வெளிவரும் குமுதம் ரிப்போர்ட்டர் நடத்திய கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் குமுதம் குழுமத்தின் வெளியிடான குமுதம் ரிப்போர்டரில் வெளிவந்த கருத்துக்கணிப்பு விவரம்:

1. விடுதலைப் புலிகளை ஆதரித்துப் பேசுவது சரியா? தவறா?

சரி - 53.1% (1000 பேர்)

தவறு - 46.9% (833 பேர்)

2. ராஜீவ் காந்தி கொலையை மன்னிக்கலாமா? கூடாதா?

மன்னிக்கலாம் - 35.46% (650 பேர்)

மன்னிக்கக்கூடாது - 64.40% (1,180 பேர்)

கருத்துக்கூற விரும்பாதவர்கள் - 0.16% (3 பேர்)

3. இலங்கைப் பிரச்சினையில் முதல்வர் கருணாநிதியின் செயற்பாடு சரியா? தவறா?

சரி - 43.8% (803 பேர்)

தவறு - 55.7% (1,021 பேர்)

கருத்துக்கூற விரும்பாதவர்கள் - 0.05% (9 பேர்)

4. இலங்கைப் பிரச்சினையில் மத்திய அரசு சரியாக சரியாக நடந்து கொள்கிறதா? பாரபட்சம் காட்டுகிறதா?

சரியாக நடந்துகொள்கிறது - 36.98% (678 பேர்)

பாரபட்சம் காட்டுகிறது - 62.90% (1,153 பேர்)

கருத்துக் கூற விரும்பாதவர்கள் - 0.1% (2 பேர்)

இந்தக் கேள்விகளில் ராஜீவ் காந்தி கொலையை மன்னிக்கலாமா? கூடாதா? என்பதற்கு மட்டும் மிக அதிகம் பேர், சோனியா காந்தி மன்னித்து விட்டாலும் கூட எங்களால் அதை மன்னிக்கவே முடியாது!' என்று அடித்துக் கூறினார்கள். அப்படிக் கூறியவர்கள்கூட, தடை செய்யப்பட்ட விடுதலைப் புலிகளை இங்கே ஆதரித்துப் பேசுவதில் எந்தத் தவறும் இல்லை என்று கூறியதுதான் நமக்கு ஆச்சரியமாக இருந்தது. மேலும், கல்லூரிப் பருவத்தினரிடையே புலித் தலைவர் பிரபாகரன் ஒரு மாவீரனாகவே பார்க்கப்படுகிறார் என்பதும் உண்மை.

அடுத்ததாக, இலங்கைப் பிரச்சினையில் மத்திய அரசின் செயல்பாடு என்பது நமது முதல்வர் கலைஞருக்கு வேண்டுமானால் திருப்தியளிக்கலாம். ஆனால், பெரும்பான்மையான மக்களுக்குத் திருப்தியளிக்கவில்லை. மத்திய அரசு பாரபட்சம் காட்டுவதாகவே கூறியுள்ளார்கள்.

அதேபோல், இலங்கைப் பிரச்சினையில் முதல்வர் கலைஞரின் செயற்பாடும் சரியில்லை என்பதே பெரும்பான்மை மக்களின் கருத்தாக இருக்கிறது. அவர்களின் கருத்தைத்தான் மேலேயுள்ள அட்டவணையில் துல்லியமாகக் குறிப்பிட்டுக் காட்டியுள்ளோம்.

இதைப் புரிந்து கொள்ள வேண்டியவர்கள் புரிந்து கொண்டு செயற்பட வேண்டும் என்பதே நமது விருப்பம் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Comments