டிசம்பர் 10 மனித உரிமைகள் நாள் : அவுஸ்திரேலியாவில் கவனயீர்ப்பு


அனைத்துலக மனித உரிமைகள் நாள் எதிர்வரும் 10ஆம் நாள் இடம்பெறவுள்ள நிலையில், ஈழத்தமிழ் மக்களின் உரிமைகளை வலியுறுத்தி அவுஸ்திரேலியா சிட்னியில் கவனயீர்ப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட இருக்கின்றது.

எதிர்வரும் 10ஆம் நாள் காலை 11:00 மணி முதல் பிற்பகல் 3:00 மணிவரை சிட்னியில் (First Fleet Park, George Street, Circular Quay, Sydney) இந்தக் கவனயீர்ப்புப் போராட்டம் நடைபெற இருப்பதாக, அவுஸ்திரேலிய தமிழ் இளையோர் அமைப்பு அறிவித்துள்ளது.

புலம்பெயர் நாடுகளில் குறிப்பாக அவுஸ்திரேலியாவில் தமிழ் மக்களது அடிப்படை உரிமைகளும், பேச்சுச் சுதந்திரமும், கலாசாரமும் மதிக்கப்படும் நிலையில், மனித உரிமைகள் மறுக்கப்பட்டுள்ள தாயக உறவுகளுக்காக குரல்கொடுக்க அனைவரும் அணிதிரள வேண்டும் என இளையோர் அமைப்பினால் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன், தமிழ் மக்கள் மீதான மனித உரிமை மீறல்கள் மறுக்கப்பட்டுள்ள நிலையில், அதற்கான குரல்கொடுக்கும் தார்மீகக் கடமை புலம்பெயர் மக்களிற்கு இருப்பதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.


Comments