சிறிலங்கா படையினரின் எறிகணை மற்றும் வான் தாக்குதலில் இளம் பெண் பலி; 10 பேர் காயம்

கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள இரணைமடு மற்றும் யாழ். மாவட்டத்தில் உள்ள இயக்கச்சி பகுதிகளில் சிறிலங்கா படையினர் நடத்திய எறிகணை மற்றும் வான் தாக்குதல்களில் இளம் பெண்ணொருவர் கொல்லப்பட்டுள்ளதுடன் பத்து பேர் காயமடைந்துள்ளனர்.
இயக்கச்சி பகுதியில் இன்று சனிக்கிழமை ஓலை வெட்டச்சென்ற மக்கள் மீது சிறிலங்கா படையினர் எறிகணைத் தாக்குதல் நடத்தினர்.

இதில் ஒருவர் கொல்லப்பட்டுள்ளதுடன் இருவர் காயமடைந்துள்ளனர்.

கொல்லப்பட்டவர், தவமலர் (வயது 24) என அடையாளம் காணப்பட்டுள்ளார். அஜந்தா (வயது 18) மற்றும் பொன்னம்பலம் (வயது 42) ஆகியோர் படுகாயமடைந்துள்ளனர் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

காயமடைந்தவர்களில் அஜந்தா இரண்டு கால்களையும் இழந்துள்ளார்.

இரணைமடு மக்கள் குடியிருப்புக்களை இலக்குவைத்து சிறிலங்கா படையினரின் வானூர்திகள் இன்று நடத்திய தாக்குதல்களில் எட்டு பொதுமக்கள் காயமடைந்துள்ளதுடன் மக்களின் வீடுகள் பல சேதமடைந்துள்ளன.

சண்முகப்பிரியா (வயது 46)

விக்னேஸ்வரன் (வயது 32)

சதீஸ்குமார் (வயது 23)

துரைசாமி (வயது 57)

சத்தியபாமா (வயது 32)

தெய்வேந்திரன் (வயது 29)

விக்கினபாலன் (வயது 32)

தவராசா (வயது 24)

ஆகியோர் படுகாயமடைந்த நிலையில் தருமபுரம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


Comments