(2ம் இணைப்பு)கிளிநொச்சி நோக்கிய நான்கு முனை முன்நகர்வு முறியடிப்பு: 100 படையினர் பலி; 250 போ் காயம்; 18 உடலங்கள் உட்பட படையப் பொருட்கள் மீட்பு



கிளிநொச்சி நோக்கிய நான்கு முனைகளிலான சிறிலங்கா படையினரின் முன்நகர்வு தமிழீழ விடுதலைப் புலிகளால் முறியடிக்கப்பட்டுள்ளது. இதில் 100-க்கும் அதிகமான படையினர் கொல்லப்பட்டுள்ளதுடன் 250-க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர். 18 உடலங்கள் விடுதலைப் புலிகளால் கைப்பற்றப்பட்டுள்ளன.

இது தொடர்பாக விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளதாவது:

குஞ்சுப்பரந்தனில் இருந்து கிளிநொச்சி நோக்கியும் முறிகண்டியில் இருந்து இரணைமடு நோக்கியும் புலிக்குளத்தில் இருந்து கிளிநொச்சி நோக்கியும் மலையாளபுரத்தில் இருந்து கிளிநொச்சி நோக்கியுமாக நான்கு முனைகளில் இன்று செவ்வாய்க்கிழமை அதிகாலை 5:00 மணியளவில் சிறிலங்கா படையினர் முன்நகர்வுகளை மேற்கொண்டனர்.


[படம்: புதினம்]


[படம்: புதினம்]

செறிவான பல்குழல் வெடிகணை, ஆட்லெறி எறிகணை மற்றும் கனரக போர்க்கலங்களின் சூட்டாதரவுடன் முன்நகர்வுகளை மேற்கொண்ட சிறிலங்கா படையினருக்கு எதிராக விடுதலைப் புலிகள் தீவிர எதிர்த்தாக்குதலை நடத்தி முன்நகர்வுகளை முறியடித்தனர்.

இதில் 100-க்கும் அதிகமான சிறிலங்கா படையினர் கொல்லப்பட்டனர். 250-க்கும் அதிகமானோர் காயமடைந்தனர்.


கொல்லப்பட்ட படையினரின் அடையாள இலக்கத்தகடு [படம்: புதினம்]


கொல்லப்பட்ட படையினரின் அடையாள இலக்கத்தகடு [படம்: புதினம்]

படையினரின் 18 உடலங்கள் உட்பட பெருமளவிலான படையப் பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, கிளாலியிலிருந்து மேற்கொள்ளப்பட்ட முன்நகர்வினை முறியடித்த விடுதலைப் புலிகள் 40-க்கும் அதிகமான சிறிலங்கா படையினர் கொன்று 120-க்கும் அதிகமானோரை காயப்படுத்தி படையினரின் எட்டு உடலங்கள் உட்பட படையப் பொருட்களை கைப்பற்றியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.



Comments