புதுமுறிப்பு நோக்கிய இருமுனை முன்நகர்வு முறியடிப்பு: 40 படையினர் பலி; 75 பேர் காயம்; 12 உடலங்கள் மீட்பு
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj9ehKtp0VGnkS2WKLgg51yF2x5xkguStkd9UHpk1aQjL1gAsQw-B8k1dtpkLFnSZEf3WF6h3iKBpI-ls_Fq9Wv_kNkY8PbJbWwSeCSEP8rjgHHhesWXEY-NT4G2nEnAyRCZidN1jhSUSfp/s400/army%252023%2520002.jpg)
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj5Dr2adA2D8T90JmAxZcIMZ8CIQ4hGp2pWTEvpGftme1LTe0QIJ1ltKxd9KExsa1_Du3Xp0zmMkAkFDRIj9Hmh5il96ouNjJuWNqGg51w_SAJEuZaeFZjO-OZkmNylVUW9GdF-L4U_-Cd6/s400/puthumurapu_fighting_in.jpg)
கிளிநொச்சி புதுமுறிப்பு நோக்கி இரு முனைகளில் சிறிலங்கா படையினர் மேற்கொண்ட பெரும் எடுப்பிலான முன்நகர்வு தமிழீழ விடுதலைப் புலிகளால் முறியடிக்கப்பட்டுள்ளது. இதில் 40 படையினர் கொல்லப்பட்டுள்ளதுடன் 75-க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர். படையினரின் 12 உடலங்கள் விடுதலைப் புலிகளால் கைப்பற்றப்பட்டுள்ளன.
இது தொடர்பாக விடுதலைப் புலிகள் மேலும் தெரிவித்துள்ளதாவது:
புதுமுறிப்பு நோக்கி இரு முனைகளில் சிறிலங்கா படையினர் இன்று புதன்கிழமை காலை 9:00 மணிக்கு பல்குழல் வெடிகணைகள், ஆட்டிலெறிப் பீரங்கிககள் ஆகியனவற்றின் செறிவான சூட்டாதரவுடன் முன்நகர்வினை மேற்கொண்டனர்.
இம்முன்நகர்வுக்கு எதிராக விடுதலைப் புலிகள் தீவிர தாக்குதலை நடத்தினர்.
இதில் சிறிலங்கா படையினர் தரப்பில் 40 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன் 75-க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர். படையினரின் 12 உடலங்கள் விடுதலைப் புலிகளால் கைப்பற்றப்பட்டுள்ளன.
பிகே எல்எம்ஜி - 02
ஆர்பிஜி - 02
ஏகேஎல்எம்ஜி - 04
ரி-56-2 ரக துப்பாக்கிகள் - 11
இரவு பார்வை காட்டி - 01
லோ - 01
உள்ளிட்ட படையப்பொருட்கள் விடுதலைப் புலிகளால் கைப்பற்றப்பட்டுள்ளன என விடுதலைப் புலிகள் தெரிவித்தனர்.
Comments