இலங்கை இராணுவத் தளபதி சரத்பொன்சேகா கொடும்பாவி எரிப்பு


இலங்கை இராணுவத் தளபதி சரத்பொன்சேகா ஆங்கில நாளேட்டிற்கு கொடுத்த பேட்டியில் இந்திய அரசு இலங்கையில் போரை நிறுத்த சொல்ல கூடாது,

இலங்கைக்கு உதவ வேண்டுமென்று கூறியதை கண்டித்தும் கொளத்தூர் விடுதலை சிறுத்தைகள் சார்பாக பேருந்து நிலையத்தில்...இலங்கை இராணுவத் தளபதி சரத்பொன்சேகா கொடும்பாவி எரிப்பு போராட்டம்

இலங்கை அதிபர் ராஜபக்க்ஷேவின் உருவபொம்மையை எரித்த ம.தி.மு.க.,வினர் 16 பேர் நெல்லையில் கைது!




இலங்கை ராணுவ தளபதி சரத்பொன்சேகா அண்மையில் பத்திரிகை ஒன்றிற்கு அளித்த பேட்டியில், தமிழக அரசியல் தலைவர்களை கோமாளிகள் என கிண்டலடித்து கூறியுள்ளார்.

இதனை கண்டித்து இன்று நெல்லையில் இலங்கை அதிபர் ராஜபக்க்ஷே, ராணுவ தளபதி சரத்பொன்சேகா ஆகியோரின் உருவ பொம்மைகளை எரித்தனர்.

ம.தி.மு.க.,நகர செயலாளர் கே.எம்.ஏ.நிஜாம், மாவட்டசெயலாளர் ப.ஆ.சரவணன் ஆகியோர் தலைமையில் எரிப்பு போராட்டத்தில் ஈடுபட்ட 16 பேர் கைது செய்யப்பட்டனர்.


Comments