தடம்புரண்டுபோன களமுனை உத்திகள்


கிளிநொச்சியை கைப்பற்றும் நடவடிக் கையை வேகப்படுத்தும் நோக்கத்துடன் அரசு தாக்குதல் படை அணிகளை அங்கு நகர்த்தி யுள்ளது. ஆனால் அங்கு இடம்பெற்று வரும் மோதல்களில் சிறப்பு படையணிகள் பாரிய அழிவை சந்தித்து வருகின்றன. கடந்த வாரம் வன்னிப் பகுதியில் அதிக மோதல்கள் நடை பெற்று வந்த போதும் இராணுவம் மேலும் ஒரு புதிய படையணியை உருவாக்கியுள்ளது.நடவடிக்கை படையணி ஐந்து (Task Force V) எனப்படும் இந்த படையணி வன்னி படை நடவடிக்கை ஆரம்பமாகிய பின்னர் உருவாக் கப்படும் எட்டாவது படையணியாகும்.

கேணல் அதுல கலகமே இந்த படையணியின் கட்டளைத் தளபதியாக நியமிக்கப்பட்டுள்ள அதே சமயம் இரண்டு பிரிகேட்டுக்களை கொண்ட இந்த படையணியின் பிரிகேட் கட் டளை அதிகாரிகளாக லெப். கேணல் பிரி யங்கா பெர்னாண்டோ, லெப்.கேணல் ரன்ஜித் அபயரட்னா ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ள னர்.இந்த மாதத்தின் ஆரம்பத்தில் இராணுவ நட வடிக்கை படையணி நான்கு என்னும் 64 ஆவது டிவிசன் உருவாக்கப்பட் டது. அது தற்போது 59 ஆவது படையணி யுடன் முல்லைத்தீவு பகுதியில் நடவடிக் கையில் ஈடு பட்டு வருகின்றது.

அதிகளவான படையணிகளை உருவாக்கி பாரிய நிலப் பிரதேசங்களை கைப்பற்ற படைத்தரப்பு முனைந்து வருவது இராணுவம் மரபுவழியிலான படை நடவடிக் கையில் முற்று முழுதாக மூழ்கி வருவதையே காட்டுகின்றது.கடந்த வாரம் 10 ஆம் நாள் புதுமுறிப்புக் குளம் பகுதியில் நடைபெற்ற கடுமையான மோதல்களில் படைத்தரப்பு அதிக இழப்புக் களை சந்தித்த நிலையில் கிளிநொச்சி நோக் கிய நடவடிக்கை முடக்கமடைந்திருந்தது. இதனைத் தொடர்ந்து வான் தாக்குதல்களை வான்படையினர் தீவிரப்படுத்தியிருந்ததுடன் அடுத்த கட்டமாக பல முனை நகர்வுகளுக் கான திட்டம் தீட்டப்பட்டது.

இந்தக் காலப் பகுதியில் வான்படையின் மிகையொலி போர் விமானங்களும், தாக்குதல் உலங்குவானூர்திக ளும் வன்னிப் பகுதியில் ஒரு டசினுக்கும் மேற்பட்ட தாக்குதல்களை நிகழ்த்தியிருந்தன.இதனிடையே, 574 பிரிகேட் படையணியி னர் முறிகண்டி பகுதிக்கும், 631 பிரிகேட் படையினர் ஒலுமடுவிற்கு கிழக்காகவும், 632 ஆவது பிரிகேட் படையினர் அம்பகாமம் பகு திக்கும் நகர்ந்துள்ளதாக படைத்தரப்பு அறிவித் திருந்தது. அரசு எதனை கூறினாலும் இந்த வாரம் ஏற்பட்ட பல முனை மோதல்கள் மீண் டும் பாரிய சேதங்களை ஏற்படுத்தியுள்ளன.

கடந்த வாரம் பாதுகாப்பு செயலாளர் கோத்த பாய ராஜபக்ஷ, பாதுகாப்பு துறை பிரதம அதி காரி ஏயர் சீப் மார்ஷல் டொனால்ட் பெரேரா, இராணுவத்தளபதி லெப். ஜெனரல் சரத் பொன் சேகா ஆகியோர் வன்னிக்குச் சென்று கள நிலைமைகளை ஆராய்ந்ததுடன் வன்னி மாவட்ட கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் ஜெகத் ஜெயசூரியா மற்றும் டிவிசன், பிரிகேட் கட்டளை அதிகாரிகளுடன் அடுத்த கட்ட நடவடிக்கை தொடர்பான திட்டங்களையும் வகுத் திருந்தனர்.பின்னர் யாழ்.குடாநாட்டுக்கு சென்று யாழ். மாவட்ட கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் சந்திரசிறி மற்றும் டிவிசன், பிரிகேட் கட்டளை அதிகாரிகளுடன் அடுத்த கட்ட நடவடிக்கை தொடர்பான திட்டங்களையும் வகுத்திருந்த னர்.

இந்த விஜயத்தின் போது ஒரே சமயத்தில் கிளிநொச்சியிலும், கிளாலியிலும் சிறப்பு பயிற்சிகளைக் கொண்ட மூன்று முன்னணி டிவிசன்களை (53, 57, 58) பயன்படுத்தி தாக்குதல் நடத்துவது என்ற திட்டம் வகுக்கப் பட்டிருந்தது.53 ஆவது படையணியின் 531 (வான் நகர்வு பிரிகேட்) மற்றும் 532 (கொமோண்டோ பிரிகேட்) பிரிகேட்டுக்கள் அதன் கட்டளைத் தளபதி பிரிகேடியர் கமால் குணரத்தினா தலைமையில் கிளாலி முனையி லும், 57 ஆவது படையணியின் மூன்று பிரி கேட்டுக்கள் (571, 572, 573) அதன் கட் டளை தளபதி மேஜர் ஜெனரல் ஜெகத் டயஸ் தலைமையில் கிளிநொச்சிக்கு மேற்குப்புறமாக வும் மற்றும் இரணைமடுவிற்கு தெற்குபுறமாக வும், 58 ஆவது படையணியின் ஐந்தாவது கவசப் பிரிவு மற்றும் இலகுகாலாட்படை பிரிவுகள், பிரிகேடியர் சவீந்தர சில்வா தலை மையில் குஞ்சுப்பரந்தன் களமுனையிலும் நகர்வை மேற்கொள்வது என்ற திட்டம் வகுக்கப்பட்டிருந்தது.

கிளாலி முனையில் அதிகாலையில் நகர்வை ஏற்படுத்துவதன் மூலம் விடுதலைப்புலிகளின் கவனத்தை 53 ஆவது படையணி திசைதிருப்ப ஏனைய இரு படையணிகளும் கிளிநொச் சியை கைப்பற்றுவது தான் படையினரின் திட்டம். அதிகாலை 1.30 மணியளவில் பல்குழல் உந்துகணை செலுத்திகள் மற்றும் பீரங்கிகளின் செறிவான சூட்டாதரவுடன் 53 ஆவது படையணியின் 6 ஆவது கஜபா றெஜிமென்ட், 5 ஆவது கெமு னுவோச், 1 ஆவது விஜயபா இலகுகாலாட் படை றெஜிமென்ட் என்பன நகர்வை மேற்கொண்டன.


இது ஒரு இரவுநேர படை நட வடிக்கையாகவே திட்டமிடப்பட்டிருந்தது. மேஜர் ஜெனரல் சந்திரசிறி பிரிகேடியர் கமால் குணரட்னாவுடன் தொடர்பில் இருந்தார்.ஆனால் படையினர் எதிர்பார்த்தது போல களமுனை இருக்கவில்லை, விடுதலைப்புலிக ளின் தாக்குதல் உக்கிரமாக இருந்தது, விடு தலைப்புலிகளின் காப்பரண்களை அண்மிக்க முனைந்த பல படையினர் கனரக துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகினர். பலர் பதுங்குகுழிக்குள் சிக்கி கொண்டனர்.

பொறிவெடிகள் மற்றும் மிதிவெடிகளில் அதிகளவான படையினர் சிக்கி கொண்டனர். ஜொனி மிதி வெடிகள் வெடித்த போது கிளைமோர் குண்டுகளும், 60 மி.மீ எறிகணைகளும் தொடர் வெடிப்பதிர்வுக ளைக் கொடுத்தன.விடுதலைப்புலிகளின் மோட்டார் படையணிகளும், சினைப்பர் படையணிகளும் தமக்குரிய இலக்குகளை எடுத்துகொண்டன. களநிலைமை பாதகமடைவதை உணர்ந்து கொண்ட படையினர் காலை 9.30 மணியளவில் அவசர அவசரமாக பின்வாங்க ஆரம்பித்தனர்.

முன்னர் முகமாலை மற்றும் கிளாலி கள முனைகளில் பெற்றுக்கொண்ட அனுபவங் களே அவர்களை இந்த முடிவை எடுக்கத் தூண்டியது.எனினும் இந்த சமரில் 40 இராணுவத்தினர் கொல்லப்பட்டதாகவும், 160 இற்கு மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும், 8 படையின ரின் உடல்களையும், பெருமளவான ஆயுதங்க ளையும் கைப்பற்றியதாகவும் விடுதலைப்புலி கள் தெரிவித்திருந்தனர்.

ஆனால் தமது தரப் பில் 25 பேர் கொல்லப்பட்டதாகவும், 10 பேர் காணாமல் போயுள்ளதாகவும், 160 பேர் காய மடைந்துள்ளதாகவும், படையினர் தந்திரோபா யமாக பின்வாங்கிவிட்டதாகவும் படைத்தரப்பு தெரிவித்துள்ளது.வான்படை உலங்குவானூர்திகளில் காயமடைந்த படையினரை பலாலிக்கு எடுத்துச் சென்றதாகவும், பலாலி வீதி மக்களின் பாவனைக்கு தடைசெய்யப்பட்டு காயமடைந்த மற்றும் இறந்த படையினர் களமுனைகளில் இருந்து அகற்றப்பட்டதாகவும் யாழ். குடா நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த மோதல்களின் போது இராணுவம் விடுதலைப்புலிகளின் கட்டுப் பாட்டு பகுதியை நோக்கி செறிவான பீரங்கி சூடுகளை வழங்கிய போது விடுதலைப் புலிகளும் பதில் பீரங்கி தாக்கு தல்களை உசன் மற்றும் மிருசு வில் பகுதிகளில் உள்ள படையினரின் பின்தளங்களை நோக்கி நடத்தியுள்ளனர். பின்தளப்பகுதியில் வீழ்ந்து வெடித்த எறிகணைகளால் காயமடைந்த படையி னரை அகற்றும் நடவடிக்கைகள் பாரிய நெருக் கடியை சந்தித்ததாக படைத்தரப்பு தெரிவித்துள்ளது. கிளாலி பகுதியில் மோதல்கள் உக்கிர மடைந்த போது அதிகாலை 5.30 மணியள வில் 57 மற்றும் 58 ஆவது படையணிகள் கிளிநொச்சி நோக்கிய நகர்வை ஆரம்பித்திருந்தன.

"எல்" வடிவில் சுமார் 6 கி.மீ நீளத்திற்கு அமைந்திருந்த மண் அணையை உடைத்து பரந்தன் சந்தி நோக்கியும், கிளிநொச்சி நோக்கியும் முன்நகர்வது தான் அவர் களின் பிரதான இலக்கு.பல்குழல் உந்துகணை செலுத்தி கள், பீரங்கிகள், மோட்டார்கள் என் பவற்றின் மூலம் படைத்தரப்பு அதி உச்ச சூடுவலுவை பிரயோகித்த போதும் விடுதலைப்புலிகளின் சிறப்பு இலகுகாலாட்படை அணி கள் படையினரை சுற்றிவளைத்து தாக்குதலை ஆரம்பித்திருந்தனர். வான்படையின் தாக்குதல் உலங் குவானூர்திகளும் உதவிக்கு அழைக்கப்பட்டிருந்தன. விடு தலைப்புலிகளின் செறிவான மோட்டார் தாக்குதல்களில் சிங்க றெஜிமென்ட், ஸ்ரீலங்கா இலகுகாலாட்படை றெஜி மென்ட், கெமுனுவோச், கஜபா றெஜிமென்ட ஆகிய படை பற்றலியன்கள் சிக்கிக் கொண்டன.

நான்கு முனைகளில் சுமார் பிற்பகல் 4.00 மணிவரை நீடித்த இந்த சமரில் 130 இராணுவத்தினர் கொல்லப் பட்டதாகவும், 300 க்கும் மேற்பட்டோர் காயமடைந் துள்ளதாகவும், படையினரின் 28 சடலங்களையும் பெருமளவான ஆயுதங்களையும் தாம் கைப்பற்றியுள்ளதாகவும் விடுதலைப்புலிகளின் சமாதான செயலக பணிப்பாளர் சீ. புலித்தேவன் தெரிவித்திருந்தார். செவ்வாய்க்கிழமை மாலை 10 சடலங்களையும், பின்னர் 8 சடலங்களையும், புதன்கிழமை மேலும் 10 சடலங்களையும் விடு தலைப்புலிகள் கிளிநொச்சி முனையில் கைப் பற்றியிருந்தனர் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.மேலும் பல சடலங்கள் இரு தரப்பிற்கும் இடையிலான முன்னணி நிலைகளில் கிடப்பதாக தெரிவித்துள்ள விடுதலைப்புலிகள் கொல்லப்பட்ட படையினரில் சிறுவர்களும் அடங்கியுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

சிறுவர்கள் படையினரால் களமுனைகளில் பயன் படுத்தப்பட்டால் இராணுவம் படைவலுவை தக்கவைப்பதில் பாரிய நெருக்கடிகளை சந்தித் துள்ளதாகவே அர்த்தம் கொள்ள முடியும்.எனினும் படைத்தரப்பை மேற்கோள்காட்டி கொழும்பு பாதுகாப்பு இணையத்தளம் ஒன்று வெளியிட்ட தகவல்களின் படி கிளிநொச்சி களமுனையில் 80 இராணுவத்தினர் கொல்லப்பட்டதாக வும். 24 பேர் காணா மல் போயுள்ளதாகவும், 300 இற்கு மேற்பட் டோர் காயமடைந்துள்ள தாகவும் தெரிவித்துள் ளது. அதாவது இந்த இரு நாள் நடவடிக்கையில் 145 படையினர் கொல்லப்பட்டதாகவும் பல நூற்றுக்கணக்கான படையினர் காயமடைந்துள்ளதாகவும் அது தெரிவித்துள்ளது.

எனினும் இழப்புக்கள் மேலும் அதிகம் எனவும் எதிர்வரும் வாரங்களில் அவை வெளிக்கொண்டு வரப்படலாம் எனவும் சுயா தீன தகவல்கள் தெரிவித்துள் ளன.காயமடைந்த பெருமள வான படையினர் கொழும்பு, வவுனியா, அனுராதபுரம், பொலநறுவை, பலாலி மற்றும் திருமலை வைத்தியசாலைக ளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வும் தெரிவிக்கப்படுகின்றது. இதனிடையே விடுதலைப்புலிகளின் எறி கணை தாக்குதல்கள் மற்றும் பொறிவெடிகளி னால் காயமடைந்த படையினரை அகற்றும் நடவடிக்கைகள் நெருக்கடி களை சந்தித்து வருவதாக படை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

கடந்த வாரம் ஒலுமடு பகுதியில் இடம்பெற்ற படை நட வடிக்கையில் ஈடுபட்டிருந்த 20 ஆவது சிங்க றெஜிமென்ட படையணியின் பிரதிக் கட்டளைத் தளபதி மேஜர் பிரியந்த லியனகே ஜொனி மிதி வெடியில் சிக்கி காலை இழந்துள்ளதும் இங்கு குறிப்பிடத்தக்கது. படையினர் போர் டாங்கிகளையும், துருப்புக் காவிகளையும் பயன்படுத்தி வருகின்ற போதும் விக்டர் கவச எதிர்ப்பு படையினர் எந்த நேரமும் தமது தாக்குதல்களை ஆரம்பிக்கலாம் என்ற அச்சமும் ஏற்பட்டுள்ளது.

செவ்வாய்க்கிழமை நடைபெற்ற சமரில் 12 ஆவது சிங்க றெஜிமென்ட படையணி கிளி நொச்சி களமுனையிலும், 6 ஆவது கஜபா றெஜிமென்ட கிளாலி களமுனையிலும் அதிக சேதங்களை சந்தித்துள்ளது. கிளாலி பகுதியில் நடைபெற்ற மோதல்களில் அதிக சேதங்கள் எறிகணைகள் மற்றும் பொறிவெடிகளால் ஏற்பட்ட போதும் கிளிநொச்சியில் அதிக இழப்புக்கள் நேருக்கு நேராக மிக அண்மையாக நடைபெற்ற மோதல்களில் ஏற்பட்டுள்ளது.

இந்த மோதல்களில் சாள்ஸ் அன்ரனி, ஜெயந்தன், இம்ரான்பாண்டியன் சிறப்பு பிரி கேட் படையணிகள், மாலதி, சோதியா படை யணிகள் அகியவற்றின் கொம்பனிகளும், கேணல் கிட்டு பீரங்கி படையணி, லெப். கேணல் குட்டிச்சிறி மோட்டார் படையணி, லெப்.கேணல் பொன்னம்மான் கண்ணிவெடி பிரிவு, சினைப்பர் பிரிவு என்பனவும் ஒருங்கி ணைக்கப்பட்டிருந்தன. கிளாலி படை நடவடிக் கைக்கு எதிரான தாக்குதல்களை வடபோர் முனை தளபதி கேணல் லோரன்ஸ் வழிநடத்த, கிளிநொச்சி சமரினை கேணல் லக்ஸ்மன் மற் றும் லெப். கேணல் வேலவன் ஆகியோர் வழி நடத்தியிருந்தனர்.முழு நடவடிக்கையையும் கேணல் தீபன் ஒருங்கிணைத்திருந்தார்.

தற்போதைய வன்னி படை நடவடிக்கைக்கு எதிரான நடவடிக்கை யின் கட்டளை தளபதியாக கேணல் தீபன் அண்மையில் நியமிக்கப்பட்டிருந்ததும் இங்கு குறிப்பிடத்தக்கது. அவரே படையினரின் ஒட்டுமொத்த நடவடிக்கைகளையும் முறியடிப் பதற்கான சிறப்புத்தளபதி. விடுதலைப்புலிகள் தற்போது படை நடவடிக்கைக்கு எதிரான சமர் உத்திகளை தெளிவாக வடிவமைத்துள்ளனர். இந்த வாரம் மேற்கொண்ட எதிர்ச்சமரின் போது அவர்கள் தமது இலகுகாலாட் படை யணிகளையும், நேரடியற்ற சூட்டாதரவையும் மிகவும் நேர்த்தியாக ஒருங்கிணைத்திருந்தனர்.

இதனால் முக்கியமான மூன்று முன்னணி படையணிகள் பேரிழப்பை சந்தித்துள்ளன.விடுதலைப்புலிகளின் எதிர் சமர் உத்திகளை எதிர்கொள்ளும் நிலைக்கு இராணுவம் தயாரா கவில்லை என்பதை காணக்கூடியதாக உள் ளது. இந்த வார சமரில் விடுதலைப்புலிகள் ஒரே நேரத்தில் பல முனை நகர்வுகளை எதிர் கொண்டுள்ளனர். படை நகர்வுகள் பொதுவாக படைத்துறை அனுகூலங்களுடன் வடிவமைக் கப்படுவதுண்டு ஆனால் இலங்கையில் அது அரசியல் நோக்கங்களுக்காகவே பெரும்பாலும் திட்டமிடப்படுகின்றன.

இந்த வருட முடிவுக்குள் கிளிநொச்சியை கைப்பற்ற வேண்டும் என்ற அழுத்தம் படைத் தரப்புக்கு உண்டு. அரசு அடுத்த வருடம் ஒரு பொதுத்தேர்தலை நடத்த ஆசைப்படுகின்றது. ஆனால் காகிதத்தில் வரையப்படும் திட்டங்கள் களமுனைகளில் தோற்றுப் போகின்றன. செவ்வாய்க்கிழமை நடைபெற்ற படைநட வடிக்கையின் இழப்புக்களைத் தொடர்ந்து இலங்கை வான்படை விமானங்கள் கிளி நொச்சி நகரிலும் அதனை அண்டிய பகுதிக ளிலும் கடந்த புதன்கிழமை 5 தடவைகள் தாக்குதல்களை நடத்தியுள்ளன.

இதில் ஐந்து மாத குழந்தை உட்பட இரு பொதுமக்கள் கொல்லப்பட்டதுடன், 13 இற்கு மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக வன்னித் தகவல்கள் தெரிவிக்கின்றன.இதனிடையே மீண்டும் புதன்கிழமை புது முறிப்பு பகுதியில் முன்நகர்ந்த 57 ஆவது படையணியினருக்கு எதிராக விடுதலைப்புலி கள் மேற்கொண்ட தாக்குதலில் பல படையினர் கொல்லப்பட்டதாகவும், 12 இராணுவத்தினரின் சடலங்களையும், பெருமளவான கனரக ஆயுதங்களையும் தாம் கைப்பற்றியுள்ளதாகவும் விடுதலைப்புலிகள் தெரிவித்துள்ளனர்.அரசு களமுனை இழப்புக்கள் தொடர்பான தகவல்களை வெளியிடுவதை தவிர்த்து வருகின்றது. களமுனை தொடர்பான தகவல்கள் இருட்டடிப்பு செய்யப்படுவதனால் விடுதலைப்புலிகளை மஹிந்த ராஜபக்ஷ தலைமை யிலான அரசு விரைவில் முறியடித்துவிடும் என்ற தோற்றப்பாடு தென்னிலங்கையில் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இதனால் பொருளா தார பின்னடைவுகள், ஊழல்கள், வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு என்பன முற்றாக மறைந்து போயுள்ளன. இது தவிர தனது அரசியல் செல் வாக்கை உயர்த்தும் முயற்சிகளுக்கும் வன்னி களமுனையை தான் அரசு நம்பியுள்ளது.ஆனால் கைப்பற்றப்பட்ட ஆயுதங்கள் மற் றும் படையினரின் சடலங்கள் தொடர்பான புகைப்படங்கள் அனைத்துலகத்தின் தமிழ் ஊடகங்களால் உடனுக்குடன் வெளியிடப்படு வதனால் அரசு முற்று முழுதாக தகவல்களை மறைக்க முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள் ளது.

மரபு வழியிலான உத்திகளுடன் பெருமள வான படையினரை நகர்த்துவது பேராபத்தா னது என்பதை முன்னைய ஈழப்போர் சமர்க ளில் இருந்து படைத்தரப்பு உணர்ந்திருந்தது. எனவே தற்போது அது சிறப்பு படையணி களை நடவடிக்கையில் ஈடுபடுத்தி வருகின் றது. ஆனால் சிறப்பு படையணி களின் நடவடிக்கைகள் கூட முகமாலை, கிளாலி களமுனைகளிலும், கிளி நொச்சி களமுனையிலும் அதிக பலனை தரப் போவதில்லை என்பதை இந்த வாரம் நடை பெற்ற சமர் உணர்த்தியுள்ளத

-வேல்ஸிலிருந்து அருஷ்-

[நன்றி-வீரகேசரி வாரவெளியீடு (21.12.2008)]

Comments