கிளிநொச்சி மாவட்ட மக்களுக்கு தமிழகத்தின் நிவாரணப் பொருட்கள்



தமிழக மக்களால் அனுப்பப்பட்டுள்ள நிவாரணப் பொருட்கள் இன்று வெள்ளிக்கிழமை கிளிநொச்சி மாவட்ட மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.

தமிழக மக்களால் உணவு மற்றும் உடைப்பொதிகள் அனுப்பப்பட்டுள்ள போதிலும் உணவுப் பொருட் பொதி மட்டுமே இன்று வழங்கப்பட்டது.

தமிழக உறவுகளின் உணர்வு மயப்பட்ட இந்த உதவியைப் பெறுவதில் மக்கள் மகிழ்வடைந்துள்ளனர்.




இன்றும் நாளையும் மட்டும் இந்தப் பொருட்கள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டதால் மக்கள் நெருக்கடிக்குள்ளாகின்ற அளவுக்கு திரண்டு வந்து பொருட்களை பெற்றனர்.

ஆயிரக்கணக்கில் மக்கள் திரண்டு வந்து அவதிப்பட்டுள்ளதை இன்று அவதானிக்கக்கூடியதாக இருந்தது. அந்தளவுக்கு மக்கள் கடும் நெருக்கடிக்குள்ளாகினர்.

தமிழக மக்கள் வழங்கிய தேவை கருதிய இந்த உதவிகளை பெறும்போது மக்கள் மகிழ்வடைந்தனர்.

தமிழக மக்களிடமிருந்து என பொதிகளில் ஒட்டப்பட்டிருந்த சொற்கள் தமிழகத்தின் உணர்வாக இருப்பதாக தெரிவித்த மக்கள், தமிழக மக்களுக்கு தமது நன்றிகளையும் தெரிவித்துள்ளனர்.

முல்லைத்தீவு மாவட்டத்துக்கு 8,000 உணவுப்பொதிகளும் 2,000 உடைப்பொதிகளும் வந்துள்ளன. இவை நாளை முதல் மக்களுக்கு வழங்கப்படவுள்ளன.


Comments