தமிழினத்தை அழிக்க இந்தியா - பாகிஸ்தான் கூட்டணி

தமிழினத்தை அழிக்க இந்தியா - பாகிஸ்தான் கூட்டணியாக இணைந்து செயற்படுவதாக தமிழகத்தில் இருந்து குரல்கள் ஒலிக்கத் தொடங்கியுள்ளன. இது தொடர்பாக அறிக்கைகளும் துண்டுப் பிரசுரங்களும் தமிழ் நாட்டில் வெளியிடப்படுகின்றன.

அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, கிளிநொச்சியை புலிகள் வசமிருந்து கைப்பற்றுவதற்கான வழிவகைகளை ஆராய 7 நாடுகளின் இராணுவ அதிகாரிகள் கொழும்புவில் சந்திக்கிறார்கள். அதில் 7 நாடுகளில் இந்தியாவும் ஒன்று. தமிழக மக்களை கிள்ளுக்கீரையாக நினைக்கிறது மத்திய அரசு.

இப்போதாவது புரியுமா? இந்த தமிழனுக்கு யார் நமது எதிரி என்று! தமிழனை அழிக்க பரம எதிரிகளே ஒன்று சேருகிறார்கள் (மும்பை தாக்குதலுக்கு எதிராக இந்திய படைகள் இந்திய எல்லையில் நிறுத்த பட்டிருக்கின்றன) பாகிஸ்தான் முதல் எதிரியா? தமிழன் முதல் எதிரியா? என்றால் தமிழன்தான் முதல் எதிரி என்பது ஆதாரத்துடன் நிருபணமாகியிருக்கிறது.

இப்போதுதாவது புரிகிறாதா இந்திய தேசியம் தமிழனை தான் முதல் எதிரியாக எண்ணுகிறது என்று. இந்த தேசியத்தை பால்தாக்கரே பேசினால் தவறுகிடையாதாம். ஆனால் தமிழனை கொல்ல சிங்களவனுக்கு ஆயுதம் கொடுக்காதே என்றும் புலிகள் இயக்கத்தை பற்றி சீமான் பேசினால் அவரை கைது செய்கிறதுகலைஞர் அரசு. நாகாலாந்தில் தடை செய்யபட்ட இயக்கத்துடன் பிரதமரே பேச்சுவார்த்தை நடத்துகிறார். பிரதமரை எவர் கைது செய்வார்? இந்த இயக்கம் பல இந்திய இராணுவ வீரர்களை கொன்று குவித்துள்ளது.

ராஜீவ் காந்தி எவ்வளவு முக்கியமோ இராணுவ வீரர்களும் அவ்வளவு முக்கியம்தானே? தனியொரு மனிதனாக தமிழன் குரல் கொடுத்தால் தமிழன் கண்டிப்பாக இப்படியேயிருந்து அழியவேண்டியதுதான். மானமுள்ள தமிழா விழித்தெழு... நீ அழிந்து கொண்டிருக்கிறாய்... அதற்கு நீயே துணையும் போகிறாய்... என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



Comments