களமுனையில் ஒழுங்கமைக்கப்பட்ட இடத்தில் சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணி நிர்வாகப் பொறுப்பாளர் பாவலன் தலைமையில் இந்த மதிப்பளிப்பு நிகழ்வு நடைபெற்றது.
இந்நிகழ்வில் பொதுச்சுடரை சமர் ஆய்வுப் பிரிவுப் பொறுப்பாளர் யோ.செ.யோகி ஏற்ற, மாவீரர் ஈகச்சுடரை கட்டளைத் தளபதி கேணல் பானு ஏற்றினார்.
சமர் ஆய்வுப் பிரிவுப் பொறுப்பாளர் யோ.செ.யோகி பொதுச்சுடர் ஏற்றுகின்றார் [படம்: புதினம்]
தளபதி கேணல் பானு மாவீரர் ஈகச்சுடரை ஏற்றுகின்றார் [படம்: புதினம்]
"புலிகளின் குரல்" நிறுவனப் பொறுப்பாளர் நா.தமிழன்பன் மலர்மாலையை சூட்டுகின்றார் [படம்: புதினம்]
மலர்மாலையை புலிகளின் குரல் நிறுவனப் பொறுப்பாளர் நா.தமிழன்பன் சூட்டினார்.
மலர்வணக்கத்தை சார்ள்ஸ் அன்ரனி சிறப்புப்படையணி சிறப்புத் தளபதி விமல் தொடக்கினார். இதனைத் தொடர்ந்து சமர் ஆய்வுப் பிரிவுப் பொறுப்பாளர் யோ.செ.யோகி சிறப்புரையாற்றினார்.
அவர் தனதுரையில் தெரிவித்துள்ளதாவது:
மன்னார்க் களங்களில் மிகச் சிறப்பாகச் செயற்பட்ட போராளிகளுக்கு தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களின் வாழ்த்தை தெரிவிக்கும் சமர் ஆய்வுப் பிரிவின் சான்றிதழ்கள் வழங்கப்படுகின்றன. அத்துடன் "சார்ள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணி" மற்றும் "புலனாய்வுத்துறை படையணி"களில் சிறப்பாக செயற்பட்ட போராளிகளுக்கும் சான்றிதழ்களும் பரிசுகளும் வழங்கி மதிப்பளிக்கப்படுகின்றது.
"சார்ள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணி" சிறப்புத் தளபதி விமல் மலர்வணக்கம் செய்கின்றார் [படம்: புதினம்]
[படம்: புதினம்]
தளபதி கேணல் பானு சிறப்புரையாற்றுகின்றார் [படம்: புதினம்]
எதிரிகளின் வல்வளைப்புக்களுக்கு எதிராக சிறப்பாகவும் தனியாகவும் குழுக்களை வழி நடத்தி களத்தில் பெரும் மாற்றங்களை ஏற்படுத்திய போராளிகள் மதிப்பளிக்கப்படுகின்றனர். இடர்மிகுந்த மன்னார் களமுனையில் இவர்களின் செயற்பாடு முதன்மையானது என்றார் அவர்.
இதனைத் தொடர்ந்து நா.தமிழன்பன், கட்டளைத் தளபதி கேணல் பானு ஆகியோரும் சிறப்புரையாற்றினர்.
[படம்: புதினம்]
[படம்: புதினம்]
[படம்: புதினம்]
மன்னார் களமுனையில் மிகச் சிறப்பாகச் செயற்பட்டோருக்கு தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களின் வாழ்த்தை தெரிவிக்கும் சமர் ஆய்வுப் பிரிவின் சான்றிதழ்களை யோ.செ.யோகி வழங்கினார்.
சிறப்பாகச் செயற்பட்ட போராளிகளுக்கான சமர் ஆய்வுப் பிரிவின் சான்றிதழ்களை கேணல் பானு, கட்டளைத் தளபதி கேணல் தீபன், நா.தமிழன்பன், விமல் ஆகியோர் வழங்கி மதிப்பளித்தனர்.
[படம்: புதினம்]
[படம்: புதினம்]
Comments