மீண்டும் - மூன்றே நிமிடங்களை ஒதுக்கி சிறிலங்காவுக்கான வரிச்சலுகையை இரத்துச்செய்யுமாறு ஐரோப்பிய ஒன்றியத்தைக் கோருவோம்

இங்கே கொடுக்கப்பட்டிருக்கும் (link) இணைப்பை அழுத்தி அதன் பின்னர் உங்கள் பெயரையும், முகவரியையும் கொடுக்கப்பட்ட இடங்களில் நிரப்புங்கள். பின்பு, "Send E-mail" ஐ அழுத்தினால் உங்கள் கடிதம் ஐரோப்பிய ஒன்றியத்தின் ஆணையரை உடனடியாகச் சென்றடையும்.

http://www.congressweb.com/cweb4/index.cfm?orgcode=PEARL&hotissue=31

நீங்கள் அனுப்பகின்ற இந்த கடிதத்தின் தமிழ் மொழியாக்கம் கீழே தரப்பட்டிருக்கின்றது.

நன்றி

அன்புடையீர் உரிய அதிகாரியின் பெயர் இங்கு சேர்க்கப்படும்

சிறிலங்கா அரசு தொடர்ந்து மேற்கொண்டு வரும் மனித உரிமை மீறல்களைத் தங்களது கவனத்திற்கு கொண்டு வரவும், இதனை மேற்கொண்டு தாங்கள் சிறிலங்காவுக்கு வழங்கி வரும் ஜி.எஸ்.பி. ப்ள்ஸ் வரிச் சலுகையை நீக்குமாறும் கோரியும் மீண்டும் இதனை எழுதுகின்றேன்.

இலங்கை அரசானது சமீப காலமாக நாட்டின் வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் பெரும் படையெடுப்புக்களை மேற்கொள்கின்றது. இதனால் மூன்று லட்சத்திற்கும் அதிகமான மக்கள் மரண அச்சத்தின் காரணமாக தங்களது வாழ்விடங்களை விட்டு வெளியேற்றியுள்ளனர்.

சிறிலங்கா அரசோ இந்த மக்களின் அடிப்படைத் தேவையைப் பூர்த்தி செய்யாது விட்டது மட்டுமன்றி, நாட்டின் வடக்கு பகுதிகளில் பணியாற்றி கொண்டிருந்த அரசு-சாரா தொண்டு நிறுவனங்களை அப்பகுதியை விட்டு வெளியேறுமாறும் உத்திரவிட்டு விட்டது.

வடக்கில் இடம்பெயர்ந்து பல இன்னல்களுக்கு இடையே வாழும் இம் மக்களை கண்டு உலக உணவு திட்டத்தின் [World Food Program] பணியாளரான 'பீட்டர் கேம்பல்" தாம் சோமாலியாவிற்கு அடுத்து இவ்வளவு இன்னல்கள் கொண்ட சூழ்நிலையை இங்குதான் என்று கூறியுள்ளார்.

நியூயோர்க்கை தலைமையகமாக கொண்டு இயங்கும் 'இன அழிப்பு தடுப்புத் திட்டம்" [Genocide Prevention Project] சமீபத்தில் வெளியிட்ட அறிக்கை ஒன்றில் சிறிலங்காவில் பாரிய அளவிலான இனப் படுகொலைகள் நடப்பதற்கு சாத்தியக் கூறுகள் மிக அதிகம் என கூறி, இலங்கையை 'சிவப்பு எச்சரிக்கை" பட்டியலில் வைத்துள்ளது.

ஜி.எஸ்.பி. ப்ளஸ் சலுகையைப் பெற ஐரோப்பிய ஒன்றியத்தால் நிர்ணயிக்கப்பட்ட அடிப்படை அரசியல் உரிமை, மனித உரிமை மற்றும் தொழிலாளர் நலன்கள் உட்பட 23 அம்சங்கள் பேணப்பட்டிருக்க வேண்டும். ஆனால் சிறிலங்கா அரசாங்கமோ மனித உரிமைகளைப் பேணத் தவறிவிட்டது.

இலங்கையின் வடக்கு பகுதியை நவம்பர் மாதம் 25 ஆம் நாள் தாக்கிய 'நிசா" புயலானது 60,000 முதல் 70,000 வரையிலான மக்களை இடம்பெயரச் செய்தது.

இலங்கை அரசாங்கமோ இடம்பெயர்ந்து வாழும் மக்களுக்கு எந்த ஒரு உதவியும் கிடைக்கக் கூடாது என்ற நோக்கில் உதவி நிறுவனங்களின் முத்திரைகள் அற்ற கூடாரப் பொருட்களையே கொண்டு செல்ல அனுமதித்தது.

உலக மனித உரிமை கண்காணிப்புக் கழகத்தின் ஜர்ரஅயn சுiபாவள றுயவஉhஸ ஆசிய பிராந்தியத் தலைவரான 'பிராட் ஆடம்ஸ்" கூறுகையில் 'வன்னியில் ஆயிரக்கணக்கான மக்கள் தங்குவதற்கு அடிப்படை வசதிகள் கூட இன்றி உதவி வேண்டி அவதியுறும் வேளையில், தமது உயிர்க்காக்கும் உதவிப் பணியினைத் தடைசெய்வதை இலங்கை அரசாங்கம் கைவிடவேண்டும்' என்று தெரிவித்துள்ளார்.

பாரிய அளவிலான இன அழிப்பு நடைபெறக் கூடிய சாத்தியம் உள்ள நாடு என்ற வகையில், உலகத்தில் உள்ள அனைத்து மனித உரிமைக் கண்காணிப்பு அமைப்புகளும் இலங்கையை உற்று நோக்கிக் கொண்டிருக்கையில் இலங்கையின் மனித உரிமைப் பேணலைப் பற்றி அக்டோபர் 18, 2008 இல் ஆய்வை மேற்கொண்ட ஐரோப்பிய ஒன்றியம் டிசம்பர் 9, 2008 அன்று ஜி.எஸ்.பி. ப்ள்ஸ் சலுகையை புதுப்பித்தது எமக்கு ஐரோப்பிய ஒன்றியத்தினது ஆய்வின் மீதும் அதன் நம்பகத்தன்மை மீதும் கேள்வியை எழுப்புகின்றது.

இலங்கையில் மனித உரிமை மீறல்களானது இவ்வாண்டு முழுவதும் மோசமடைந்த வண்ணமே உள்ளது. குறிப்பாக ஐரோப்பிய ஒன்றியத்தினால் ஆய்வு மேற்கொள்ளப்பட்ட காலத்திலும் அது ஆமாசமடைந்தே காணப்பட்டது என்பதனையும் சுட்டிக்காட்ட விரும்புகின்றேன். நான் இங்கு வேண்டுவது என்னவென்றால், ஐரோப்பிய ஒன்றியம் சிறிலங்காவின் மனித உரிமை மீறல்களை நன்கு ஆராய்ந்து தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதும், ஆசியக் கண்டத்தின் அடுத்த இன அழிப்புக்கு பொருளாதார ரீதியில் உதவ வேண்டாம் என்பதும், சிறிலங்காவுக்கு தாங்கள் அளித்து வரும் ஜி.எஸ்.பி. ப்ள்ஸ் சலுகையை நீக்க வேண்டும் என்பதுமாகும்.

பணிவுடன்,

தங்களது பெயர் இங்கு சேர்க்கப்படும்.
http://www.congressweb.com/cweb4/index.cfm?orgcode=PEARL&hotissue=31


Comments