யேர்மனி கிறீபில்ட் நகரத்தில் கடந்த சனிக்கிழமை இளையோர்களும் கிறீபில்ட் மக்களும் இணைந்து முன்னெடுக்கப்பட்ட கவனயீர்ப்பு நிகழ்வு Green Party காரியாலயத்தில் முன்பாக நடைபெற்றது. அவ் வேளையில் Green Party அங்கத்தவர்களும் யேர்மனி மக்களும் ஆர்வத்துடன் சிறிலங்கா அரசு மேற்கொள்ளும் தமிழ்இன அழிப்பைப்பற்றி அறிந்து கொண்டனர்.
அத்துடன் ஐரோப்பிய பாராளுமன்ற உறுப்பினரை சந்தித்து கலந்துரையாடியதோடு இளையோர்களால் மேற்கொள்ளப்பட்ட கையெழுத்து வேட்டையையின் பிரதியையும் அவரிடம் வழங்கப்பட்டது. அத்துடன் திரு.பிறிட்றோவ் சுமிட் அவர்கள் இன்றைய தமிழ் மக்களின் அவலங்கள் குறித்து மேற்கொள்ளப்பட்ட கையெழுத்து வேட்டையில் அவரும் ஒப்பமிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
யேர்மனி காம் சிறி காமாட்சி அம்மன் ஆலையத்தில் தாயகத்தில் அல்லுறும் மக்களுக்கு ஆசிவேண்டி விசேட யாகமும் உண்ணாவிரதமும் 6.12.08 அன்று சனிக்கிழமை நடைபெற்றுள்ளது.
காலை 8மணியில் இருந்து மாலை 6 மணிவரை நடைபெற்றது இவ் உண்ணாவிரதத்திலும் விசேட யாகத்திலும் யேர்மன்வாழ் தமிழ்மக்கள் கலந்து கொண்டு தாயகத்தில் அல்லறும் மக்களுக்கு நமது அன்பினையும் ஆறுதலையும் அறிவித்தனர் காம்சிறி காமாட்சி அம்மன் ஆலைய நிர்வாகத்தினர் இக்கவனயீர்ப்பு நிகழ்வு ஒழுங்குபடுத்தப்பட்டிருந்தது
Comments