இலங்கை அரசை கண்டிக்க வேண்டும் என்றால் அதற்கு அகராதியில் உள்ள மென் மையான சொற்களையும் பல வித அர்த்தங் கள் கொண்ட சொற்பதங்களையும் தேடிப்பிடித்து பயன்படுத்தி வந்த மேற்குலம் தற்போது வர்த்தக வரிச்சலுகையை இலங்கை அரசுக்கு வழங்குவதற்கு யாரும் எதிர்பார்க்காத கோணத்தில் இருந்து ஒரு புதிய நிபந்தனையை கொண்டு வந்ததுடன், அந்த நிபந்தனையை சாதகமாக்கி வரிச்சலுகையை 2011 ஆம் ஆண்டு வரை வழங்கியுமுள்ளது.
மனித உரிமை மீறல்கள் தொடர்பான விசாரணைகள் அரசுக்கு பாதகமானால் வரிச்சலுகை நிறுத்தப்படும் என்று இலங்கை அரசுக்கு சார்பான தனது கொள்ளைகளுக்கு விளக்கங்களை தேடிப்பிடித்து வரும் ஐரோப்பிய ஒன்றியம், சாட்சியங்கள் கிடைத்தால் விசாரணை விரைவில் நிறைவு பெறும் என கூறியுள்ளது. பகலில் உள்ள பசு மாடு இவர்களின் கண்ணுக்கு தெரியவில்லையாம். அதனால் இரவில் எருமை மாட்டை தேடி அலையப்போகின்றனர்.
இலங்கையில் நடைபெற்று வரும் விசார ணைகளின் தரம் என்ன? அதன் நம்பகத்தன்மை எவ்வளவு? அதன் காலநீட்சி என்ன? என்பவற்றை நாம் அறிய வேண்டும் என்றால் அதற்கு சிறந்த உதாரணமாக 2006 ஆம் ஆண்டு மூதூரில் தொண்டர் நிறுவன பணியாளர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட படுகொலையும் அதன் மீதான விசாரணைகளும் ஒரு சிறு உதாரணம். அதாவது இலங்கை அரசு மேற்கொண்டு வரும் அதிக செலவு மிக்க போரில் ஐரோப்பிய ஒன்றியம் தனது பங்கை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது என்பது தான் அவர்கள் மேற்கொண்ட இந்த சலுகை நீடிப்புக்கான ஒரு வரி செய்தி.உலகில் ஏற்பட்டுவரும் பொருளாதார நெருக்கடிகள் தென் ஆசிய பிராந்தியத்தை எதிர்வரும் ஆண்டுகளில் கடுமையாக பாதிக்கலாம் என்பது உலக வங்கியின் கணிப்பு.
இந்த பாதிப்புக்கள் இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேசம் போன்ற நாடுகளிலும் கடுமையானதாக இருக்கலாம் என்பதுடன் இலங்கையின் பொருளாதார வளர்ச்சி 4வீதம் ஆக வீழ்ச்சி காணலாம் என அது எச்சரிக்கையும் விடுத்துள்ளது. இலங்கையை பொறுத்தவரையில் நடை பெற்று வரும் போரானது நேரடியாக பொரு ளாதாரத்துடன் தொடர்பு கொண்டது.கடந்த கால படை நடவடிக்கைகளை விட தற்போதைய படை நடவடிக்கை விழுங்கி வரும் பொருளாதார செலவுகள் பல மடங்கு அதிகம். இராணுவம், களமுனைகளில் அதிகளவில் கொல்லப்படும் மற்றும் காயப்படும் படையினருக்கான செலவுகள், பயன்படுத்தப்படும் அதிகளவு வெடி பொருட்களுக்கான செலவுகள், தினமும் வான் தாக்குதலை நடத்தி வரும் விமானங்களின் பராமரிப்பு செலவுகள் என போரின் செலவுகள் மிக மிக அதிகம்.
எனவே ஐரோப்பிய ஒன்றியத்தின் வர்த்தக வரிச்சலுகை மீதான அழுத்தம் இலங்கை அரசுக்கு மேலதிக பொருளாதார அழுத்தங்களை ஏற்படுத்தும் என்பதனால் படை நடவடிக்øகயிலும், அரசின் போர்க் கொள்கைகளிலும் அது ஒரு தாக்கத்தை ஏற்படுத்தலாம் என கருதப்பட்டது. எனினும் தமிழ் மக்களின் மீதான போரை தணிப்பதற்கு விரும்பவில்லை என்ற கசப்பான உண்மையை மேற் குலகம் மீண்டும் ஒரு முறை அழுத்தமாக உணர்த்தியுள்ளது.மேலும் விடுதலைப்புலிகளை பலவீனப்படுத்த வேண்டும் என்ற குறிக்கோளுடன் அலையும் அமெரிக்கா தற்போது மேலும் ஒரு கருத்தை முன்வைத்துள்ளது. "ஒரு அரசியல் தீர்வை முன்வைப்பதன் மூலம் விடுதலைப்புலிகளை மேலும் பலவீனப்படுத்த முடியும் என" இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ரொபேட் ஓ பிளேக் கடந்த வியாழக்கிழமை கூறியுள்ளார்.
அரசியல் தீர்வை முன்வைப்பதன் மூலம் விடுதலைப்புலிகளை அவர் எவ்வாறு தனிமைப்படுத்த எண்ணியுள்ளார் என்பதை தற்போது அவர் ஏற்படுத்தி வரும் துணைஇராணுவ குழுக்களினுடனான உறவுகள் இலகுவாக உணர்த்தி நிற்கின்றன.இலங்கை அரசிற்கு மேற்குலகமும், பாகிஸ் தான், சீனா போன்ற நாடுகளும் கொடுத்து வரும் வலிமையான ஆதரவுகள் போரை தீவிரப்படுத்தி வருவதுடன் இலங்கை அரசு இந்தியாவை புறம்தள்ளவும் முனைந்துள்ளது.
இலங்கையின் இராணுவத்தளபதி லெப். ஜெனரல் சரத்பொன்சேகா தமிழக அரசியல் தலைவர் கள் தொடர்பாக தெரிவித்த கருத்தின் காரண மும் அதுவே.வன்னி மீதான படை நடவ டிக்கை உக்கிரமடைந்து வரும் அதே சமயம் பல நாடுகளின் போலியான முகத்தி ரைகளும் மெல்ல மெல்ல அகன்று வருகின்றன. ஆனால் ஒன்றுபட்டு வரும் தமிழ் இனம் என்ற எழுச் சிக்கு முன்னால் அவர்களின் அழுத்தங்கள் ஒன் றும் செய்துவிடப்போவ தில்லை.கடந்த மாதம் ஏற்பட்ட அசா தாரண பருவமழையுடன் வன்னி களமுனை ஒரு தேக்க நிலையை அடைந்த போதும், ஆங்காங்கே பல மோதல்களும் இடம்பெற்று வந்திருந்தன.
இராணுவத்தரப்பும் பல பகுதிகளை கைப்பற்றி வருவதாக தொடர்ந்து அறிவித்து வருகின்றது. புதிய படை அணி களும் களமிறக்கப்பட்டு வருகின் றன. அதன் இறுதி வரவாக நடவடிக்கை படையணி நான்கு அல் லது 64 ஆவது டிவிசனை குறிப் பிடலாம்.மூன்று பிரிகேட்டுக்களை கொண்ட இந்த படையணியானது முல்லைத்தீவு மாவட்டத்தில் நட வடிக்கையில் ஈடுபடும் நோக்கத்துடன் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த படையணியுடன் வன்னி படை நடவடிக்கைக்கு என இராணுவம் உருவாக்கியுள்ள படையணிகளின் எண்ணிக்கை 7 ஆக உயர்ந்துள்ளது. இந்த ஏழு படைய ணிகளும் சுமார் 50,000 படையினரை கொண் டுள்ளதாக இலங்கை இராணுவத்தளபதி லெப். ஜெனரல் சரத் பொன்சேகா தெரிவித் துள்ளதும் இங்கு குறிப் பிடத்தக்கது.
இவற்றிற்கு ஆதரவாக ஏனைய படையணிகளும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதும் நாம் அறிந்தவையே. இந்த ஏழு படையணிகளிலும் நான்கு பிரிகேட்டுக்களை கொண்ட 57 ஆவது படையணி அதிக படையினரை கொண்டதாகும். 57 ஆவது படையணியின் 4 ஆவது பிரிகேட் கொக்காவில் பகுதிகளில் நடவடிக்கையில் ஈடுபட்டு வரும் அதே சமயம் ஏனைய மூன்று பிரிகேட்டுக்களும் கிளிநொச்சியை நோக்கிய நகர்வுகளை கடந்த இரு மாதங்களுக்கு மேலாக முனைப்பாக்கி வருகின்றன.இந்த நடவடிக்கையில் 58 ஆவது படையணி கிளிநொச்சிக்கு வடமேற்குப்புறம் இருந்து உதவி நகர்வுகளை மேற்கொண்டு வரும் போதும் இந்த இரு படையணிகளும் கடுமையான இழப் புக்களை சந்தித்தும் வருகின்றன.
கிளிநொச்சி நோக்கிய நகர்வின் தொடர்ச்சியாக கடந்த புதன் கிழமை காலை 57 ஆவது படையணி யின் துருப்புக்கள் கிளி நொச்சி மாவட்டத்தில் உள்ள புதுமுறிப்பு நோக்கி இரு முனைகளால் மேற்கொண்ட நகர்வுகளுக்கு எதிராக விடுதலைப்புலிகள் கடுமையான தாக்குதல்களை நடத்தியுள்ளன. புதுமுறிப்பு அடம்பனுக்கு தெற்காக 5 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது.இந்த மோதல்களின் போது படைத்தரப்பு பல்குழல்உந்துகணை செலுத்திகள், எறிகணை வீச்சுக்கள் என சரமாரியான தாக்குதல்களை மேற்கொண்ட போதும் விடுதலைப்புலிகளின் சிறப்பு அணிகள் படையணிகளை வழிமறித்து தாக்கியுள் ளன. சுமார் ஐந்து மணிநேரம் நடைபெற்ற கடுமையான மோதல்களில் படைத்தரப்பு கடுமையான இழப்புக்களை சந்தித்துள்ளது. தமது தரப் பில் 23 பேர் கொல்லப்பட்டதாகவும், பலர் காணாமல் போயுள்ளதாகவும் 60 க்கு மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளதாகவும் படைத்தரப்பு தெரிவித்துள்ளது.
எனினும் 40 க்கு மேற்பட்ட இராணுவத்தினர் கொல்லப்பட்ட துடன், 75க்கு மேற்பட்ட படையினர் காயம டைந்துள்ள தாகவும், 12 படையினரின் உடல்களையும், ஆயுத தளவாடங்களையும் தாம் கைப்பற்றியுள்ளதா கவும் விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளனர். மேலும் கிளிநொச்சிக்கு தெற்காக முறிகண்டிக்கு வட மேற்குப்புறம் நடைபெற்ற மோதல்களில் 15 இராணுவத்தினர் கொல்லப்பட்டதுடன், 40 க்கு மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் அவர்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.
விடுதலைப்புலிகளுடன் வன்னிப் பகுதி யில் ஏற்பட்டுவரும் மோதல்களில் இராணுவம் கணிசமான இழப்புக்களை சந்தித்து வருகின்றது. விடுதலைப்புலிகளின் எறிகணைத்தõக்குதல்களினால் இராணுவம் கடுமையான பாதிப்புக்களை சந்தித்து வருவதாகவும், கடந்த கால மோதல்களில் விடுதலைப்புலிக ளின் எறிகணைத் தாக்குதல்களில் 16,000 படையினர் காயமடைந்துள்ளதாகவும் அண் மையில் ஊடகம் ஒன்றிற்கு வழங்கிய நேர் காணலில் இராணுவத்தளபதி தெரிவித்திருந் ததும் இங்கு குறிப்பிடத்தக்கது.எறிகணைகள் மட்டுமன்றி பொறிவெடிகள், மிதி வெடிகள் என்பனவும் படைத்தரப்புக்கு பாரிய சேதங்களை ஏற்படுத்தி வருகின்றன.
இராணுவம் அதிக சுடுவலுவுடனும், அதிக படைவலுவுடனும் வன்னி நடவடிக்கையை திட்டமிட்ட போதே விடுதலைப்புலிகளும் பாரிய இராணுவத்தின் உளவுரணை பொறி வெடிகளை கொண்டு தகர்த்துவிடும் உத்திகளை கடைப்பிடிக்க தீர்மானித்து விட்டதாகவே தோன்றுகின்றது.பொறிவெடிகள் இரு வழிகளில் படையினருக்கு நெருக்கடிகளை ஏற்படுத்தும். ஒன்று அவர்களின் நடவடிக்கைகளில் கால தாமதங்களை ஏற்படுத்தும், இரண்டாவது படையினரின் உளவுறுதியில் கடுமையான தாக்கங் களை அது ஏற்படுத்தலாம். வியட்நாம் போரின் போது அமெரிக்கா கூட்டணி படை அதிக சுடுவலு, படைவலு கொண்டு வியட்னாம் கிராமங்களை முற்றுகையிட்ட போது வியட்கொங் கெரில்லாக்கள் அதனை எதிர்கொள்ள தேர்ந்தெடுத்த ஆயுதம் பொறிவெடிகள் தான்.
சாதாரண மூங்கில் குச்சிகளில் இருந்து அமெரிக்க படையினரால் வானில் இருந்து கொட்டப்பட்டு வெடிக்காத நிலையில் காணப்பட்ட குண்டுகள் வரையிலும் எதிரிக்கான பொறி வெடிகளாகவும், மரணக்கிடங்குகளாகவும் மாற்றம் பெற்றிருந்தன. ஒட்டுமொத்த வியட்நாம் போரில் அமெரிக்க இராணுவம் 58 ஆயிரம் படையினரை இழந்ததுடன், பல இலட்சம் படையினர் காயமடைந்திருந்தனர். இந்த தொகைகளில், 15 வீத மரணங்களும், 17 வீத காயங்களும் பொறிவெடிகளினால் ஏற்பட்டதாகவே தெரிவிக்கப்படுகின்றது.வன்னி களமுனைகளை பொறுத்தவரையில் ஜொனி மிதிவெடிகள் அதிக சேதங்களை படைத்தரப்புக்கு ஏற்படுத்தி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டு பகுதிகளில் ஆயிரக்கணக்கில் தயாரிக்கப்பட்டுவரும் இந்த மிதிவெடிகள் சில சமயங்களில் 60 மி.மீ எறிகணைகளுடன் பொருத்தப்பட்டு தொடர் வெடிப்பதிர்வுகளையும் ஏற்படுத்துவதாக படைத்தரப்பு தெரிவித்துள்ளது.
தற்போதைய படை நடவடிக்கைகளில் 500 க்கு மேற்பட்ட படையினர் ஜொனி மிதி வெடிகளினால் கால்களை இழந்துள்ளதாக தெரிவித்துள்ள இராணுவத்தளபதி, வன்னியில் ஒவ்வொரு அங்குல நிலத்திலும் பொறிவெடிகளுடன் போராட வேண்டியு ள்ளதாக தெரிவித்துள்ளதும் இங்கு குறிப்பிடத்தக்கது.
இராணுவம் பல்வேறு விளம்பரங்கள் மூலம் பல ஆயி ரம் படையினரை சேர்க்க முற்பட்டு வருகின்ற போதும், களமுனைகளில் இருந்து தொடர்ச்சியாக பெருமள வான படையினர் அகற்றப் பட்டு வருவதாகவே படைத்தரப்பு தெரிவித்துள்ளது.இதனிடையே புலிகளிடமிருந்து கைப்பற்றப்பட்ட தமது பகுதிகளை தக்கவைப்பதில் இராணுவம் பாரிய நெருக்கடிகளை சந் தித்து வருவதாக தெரிவிக்கப் படுகின்றது. விடுதலைப் புலிகளின் சிறப்பு அணிகளின் ஊடுருவல்களை தடுக்கும் நோக்கத்துடன் தலா 10 பேர் அடங்கிய 60 வரையிலான இராணுவத்தின் சிறப்பு அணிகளை தொடர்ச்சியான சுற்றுக் காவல் நடவ டிக்கையில் தாம் ஈடுபடுத்தி வருவதாக படைத் தளபதி தெரிவித்துள்ளார். மேலும் கைப்பற்றப்பட்ட பகுதிகளை பாதுகாப்பதற்கு மேலும் 50 தொடக் கம் 60 பற்றாலியன் படையினர் தேவை என்ற கருத்துக்களும் தோன்றியுள்ளன.
வன்னிக் களமுனை மெல்ல மெல்ல தனது உக்கி ரத்தை காட்ட ஆரம்பித்துள்ளது. பல முனைகளை திறப்பதன் மூலம் வேகமாக பல கிராமங்களை கைப்பற்ற முனைந்த படைத்தரப்பு தற்போது அவற்றை தக்க வைப்பதற்கு அரும்பாடுபட்டு வருகின்றது. படை நட வடிக்கையை பொறுத்த வரையில் அதன் நீள அதிகரிப்பு நடவடிக்கையில் ஈடு பட்டுவரும் தரப்பிற்கு எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தலாம் என்பது போரியல் ஆய்வாளர்களின் கருத்துக்கள். இது வன்னி களமுனைக்கும் சரியாக பொருந்தக் கூடியதொன்றே.
- வேல்ஸிலிருந்து அருஷ் -

Comments