கொலைவெறியில் கொக்கரிக்கும் சரத்பொன் சேகாவே மன்னிப்புக்கேள்! மன்னிப்புக்கேள்!! - இந்திய அரசே! இந்திய அரசே! இலங்கைத் தூதரை வெளியேற்று!!


இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்து வரும் தமிழக அரசியல் கட்சி தலைவர்களை கோமாளிகள் என்றும், புலிகளிடம் பணம் பெற்றுக்கொண்டு அரசியல் செய்பவர்கள் என்றும் இழிவாக பேசிய இலங்கை ராணுவ தளபதி பொன் சேகாவின் பேச்சுக்கு கலைஞர், ராமதாஸ், வைகோ உட்பட பல்வேறு கட்சி தலைவர்களும் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள்.

கொலைவெறியில் கொக்கரிக்கும் சரத்பொன் சேகாவே மன்னிப்புக்கேள்! மன்னிப்புக்கேள்!! - இந்திய அரசே! இந்திய அரசே! இலங்கைத் தூதரை வெளியேற்று!!

சிறீலங்கா தரைப்படைத் தளபரி லெப்ரினன்ட் ஜெனரல் சரத் பொ‌ன்சேகா‌வை க‌ண்டி‌த்து ம.‌தி.மு.க. சா‌‌‌ர்‌பி‌ல் இ‌ன்று புதன்கிழமை செ‌ன்னை‌யி‌ல் உ‌ள்ள சிறிலங்கா துணைத் தூதரக‌ம் மு‌ன்பாக கண்டன ஆ‌‌ர்‌ப்பா‌ட்ட‌ம் நடைபெ‌ற்றது.






'தமிழக அரசியல் கோமாளிகள் சொல்வதை இந்திய அரசு கேட்காது' எ‌‌ன்ற சரத் பொன்சேகா‌வி‌ன் பே‌ச்சு‌க்கு இ‌ந்‌திய அரசு க‌டு‌ம் க‌ண்ட‌னம் தெ‌ரி‌‌வி‌க்க வே‌ண்டு‌ம், இலங்கை தூதரை இந்தியாவில் இருந்து வெளியேற்ற‌ வே‌ண்டு‌ம் எ‌ன்று கோ‌ரி டிச‌ம்ப‌ர் 10ஆ‌ம் நாள் சென்னையில் உ‌ள்ள துணைத் தூதரகம் முன்பு கறுப்புக்கொடி ஏ‌ந்‌தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் எ‌ன்று ம.‌தி.மு.க. பொது‌ச் செயல‌ர் வைகோ அறிவித்திருந்தார்.

இ‌த‌ற்கிணங்க படைத் தளபதி சரத் பொன்சேகாவின் பேச்சைக் கண்டித்து ம.தி.மு.க. சார்பில் இன்று ஆழ்வார்பேட்டை டி.டி.கே.சாலை‌யி‌ல் உள்ள சிறீலங்கா துணைத் தூதரகம் முன்பு ம‌.‌தி.மு.க. சா‌ர்‌பி‌ல் ஆர்ப்பாட்டம் நடைபெ‌ற்றது.

இ‌ந்த ஆ‌ர்‌ப்பா‌ட்ட‌த்‌தி‌ற்கு ம.தி.மு.க. பொதுச்செயலர் வைகோ தலைமை தாங்கியதுடன், சிறீலங்கா படைத் தளபதிக்கு எதிராக கண்டன முழக்கங்களை வைகோ எழு‌ப்‌பியதுடன், அவரைத் தொடர்ந்து தொண்டர்களும் முழக்கங்களை எழுப்பின‌ர்.

இ‌ந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழர் தேசிய இயக்க தலைவர் பழ.நெடுமாறன், இந்திய பொதுவுடமைக் கட்சியின் துணைச்செயலர் மகேந்திரன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கம், எழுத்தாளர் தியாகு உட்பட பலர் கல‌‌ந்து கொ‌ண்டன‌ர்.

தமிழசெய்திமையம்


Comments