மும்பாயில் நடந்த தீவிரவாதத் தாக்குதல்கள்

மும்பாயில் நடந்த தீவிரவாதத் தாக்குதல்கள் இந்தியாவில் இதுவரை நடந்த எந்தத் தாக்குதலையும் விடத் துணிவு மிக்கதும் கவனமாகத் திட்டமிடப்பட்டதும் எனப்படுகிறது. மூன்று நாட்கள் நீடித்த இந்தத் தாக்குதல்களிற் ""கொல்லப்பட்ட பயங்கரவாதிகளின்' பட்டியலைக் காட்டுவதுடன் இந்தியப் பாதுகாப்புப் பிரிவினரோ அரசாங்கமோ திருப்தி காண முடியாது. இது போல இன்னொன்று இனி நடக்குமா, நடக்காதா என்பதல்ல நம் முன்னுள்ள பிரச்சினை. இப்படி ஒன்று ஏன் நடந்தது? இதற்கு முன் நடந்தவை பற்றி இந்திய அரசாங்கம் என்ன செய்தது? சட்டமும் நீதியும் என்ன செய்தன? இவையே முக்கியமான கேள்விகள். இவற்றுக்கான விடைகளே எதிர்காலத்துக்கு வழி காட்டும்.

எடுத்த எடுப்பிலேயே அந்நிய ஆதரவுடன் நடந்த தாக்குதல் என்று பாகிஸ்தானை நோக்கிச் சுட்டுவிரலை நீட்டுவது எளிதானதும் வசதியானதுமாகும். ஆ?ல் இந்தத் தாக்குதலை இந்தியாவில் இன்று பெருகிவருகிற சமூக வன்முறைகளுடனும் பிற தாக்குதல்களுடனும் சேர்த்துப் பார்ப்போமா?ல் இந்திய அரசாங்கங்கள் இந்த நிகழ்வுகட்கு எவ்வளவு தூரம் பதில் கூற வேண்டியனவாக உள்ளன என்று விளங்கும்.

பயங்கரவாதம் வேறு, ஆயுதமேந்திய விடுதலைப் போராட்டம் வேறு, நாட்டின் பாதுகாப்புக்கான நடவடிக்கைகள் வேறு, அரச பயங்கரவாதம் வேறு, சமூக வன்முறையை மனிதர் விரும்புவதில்லை. ஆ?ல் வன்முறை சமூகத்தின் மீது சுமத்தப்படுகிறது. பல விதமான வன்முறைகள் உள்ளன. அவற்றில் ஒரு சில மட்டுமே நமக்கு வன்முறையாகக் காட்டப்படுகின்றன. மனிதரின் சில அடிப்படை உரிமைகளை மறுப்பது வன்முறையே. உணவு,நீர், மருந்து, உறைவிடம் என்பன மறுக்கப்படுவது எந்த ஆயுத வன்முறைக்கும் குறைவானதல்ல. வாழும் உரிமைகளையும் மனித விருத்தியையும் மறுக்க நேரடி வன்முறை பயன்படாதபோது அது பற்றிய மிரட்டல் பயன்படுகிறது. பரம்பரையாக ஊட்டப்பட்டு வந்த அச்ச உணர்வு பயன்படுகிறது. அமெரிக்க அடிமைகள் முதலாகச் சாதி ஒடுக்குமுறைக்கு உட்பட்டோர் வரை, ஓரங்கட்டப்பட்ட பழங்குடி மக்கள் முதல் பெண்கள் வரை தமது இருப்புப் பற்றிய அச்ச உணர்வாலேயே அடங்கிவாழ்ந்து வந்துள்ளனர். எனவே இந்த அச்சத்தை வெல்வது முக்கியமானது. இங்கே தான் அரசியல் தேவைப்படுகிறது. ஒடுக்கப்பட்டோருக்கு ஏதோ ஒரு நிலையில் போராடும் தேவை ஏற்படுகிறது. அவர்களது போராட்டம் சரியாக வெளிப்படுத்தப்படாத போது தான் தனிமனிதப் பயங்கரச் செயல்களும் கண்மூடித்தனமான வன்முறையும் கொண்ட பயங்கரவாதம் உருப்பெருகிறது.

பயங்கரவாதம் சமூகவிடுதலையைப் பெற்றுத்தராது. ஏனெனில் அது சமூக உடன்பாட்டுடன் மேற்கொள்ளப்படும் ஒரு நடவடிக்கையல்ல. எனினும் எந்த மக்களின் பேரால் அது மேற்கொள்ளப்படுகிறதோ அவர்கள் நடுவில் ஒரு பகுதியினரேனும் அதை ஏற்காவிட்டாலும் அதைக் கண்டிக்க மறுக்குமளவுக்கு அதன் நோக்கங்கட்கு அனுதாப மாயிருக்கின்றனர். அதன் நீண்டகால விளைவுகள் விடுதலைப் போராட்டத்துக்குப் பாதகமானவை என்று அவர்கள் உணருவதில்லை. சனநாயக முறையிலான ஒரு விடுதலை இயக்கமும் மக்கள் அரசியலும் மக்கள் போராட்டமும் இயலாத போது பயங்கரவாதம் உருவாகி வளருகிறது. மக்கள் அரசியலும் மக்கள் போராட்டமும் ஒரு புறம் தடுக்குமுறை அரசாலும் ஒடுக்குகிற பிரிவினராலும் சட்டப்படியும் சட்டவிரோதமாகவும் மதிக்கப்படுகின்றன. இன்னொரு புறம் சனநாயக உணர்வற்ற சிறு குழுக்களாலும் மறுக்கப்படுகின்றன. இவற்றை வெல்வதற்கான வழி மக்கள் தீவிரமாக அரசியலில் ஈடுபடுவதுதான். அது தான் சனநாயகத்தின் அடிப்படையும் ஆதாரமுமாகும்.

எந்தப் பயங்கரவாத நிகழ்வின் போதும் எங்கள் அனுதாபம் பாதிக்கப்பட்ட அப்பாவிச் சனங்களின் பக்கமே இருக்க முடியும். பயங்கரவாதம் கண்டிக்கப்பட வேண்டும் என்பதில் எங்களுக்குள் எந்தத் தயக்கமும் இருக்கக் கூடாது. ஆனால் ஒரு பயங்கரவாதச் செயலைச் செய்தவர்களைக் கண்டிக்கும்போது அதற்குக் காரணமாயிருந்த ஒடுக்குமுறையையும் ஒடுக்குமுறையாளர்களையும் நாம் மறந்துவிடலாகாது. அப் பயங்கரவாதத்தை ஒடுக்கப்பட்டோர் மௌனமாக அங்கீகரிக்கும்படி செய்த நிகழ்வுகளை மறந்து விடலாகாது. நமது கண்டனங்கள் ஒரு வகையான குற்றங்களை ஏற்பனவாகவும் இன்னொரு வகையானவற்றை கண்டிப்பனவாகவும் வேறொரு வகையானவற்றைக் கண்டுங்கானாதவையாகவும் அமையலாகாது.

இந்தியாவில் இந்த ஆண்டு பல்வேறு பயங்கரவாத நிகழ்வுகள் நடந்தேறியுள்ளன. ஒக்டோபர் முடிவில் அஸாமில் நடந்த ஒன்பது குண்டு வெடிப்புகள் 86 பேரைப் பலிவாங்கி 800 க்கும் மேற்பட்டோரைக் காயப்படுத்தியுள்ளன. அங்கு பழங்குடியினரின் போராளி அமைப்பும் அஸாமிய தேசியவாத அமைப்பும் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளன. அதை விட பங்களாதேஷ், மியான்மார் ஆகிய நாடுகள் பயங்கரவாதிகட்குப் புகலிடங்களாக உள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. இவற்றை இந்தியாவின் அயற்கொள்கையுடன் சேர்த்து நோக்கி?ல் இந்திய அரசாங்கம் பயங்கரவாத நடவடிக்கைகளைத் தனது பிராந்திய மேலாதிக்க நோக்கங்கட்குச் சாதகமாகவும் அண்டை நாடுகளில் இராணுவக் குறுக்கீட்டுக்கான ஒரு நியாயமாகவும் பயன்படுத்த வாய்ப்புண்டு. பயங்கரவாத எதிர்ப்புப் போர் என்ற போரில் அமெரிக்கா ஈராக்கிலும் ஆஃப்கானிஸ்தானிலும் நடத்துகிற கொலைவெறியாட்டம் ஒரு புறமிருக்க, அண்டை நாடுகளான சிரியாவிலும் பாகிஸ்தானிலும் தாக்குதல்களை நடத்தியுள்ளது. கொலம்பியப் படைகள் இவ்வருடம் பயங்கரவாதிகளைத் தாக்குகிற பேரில் ஈக்குவடோருக்குள் நுழைய அமெரிக்கா உதவி செய்துள்ளது. இவை போன்ற நிகழ்வுகட்கு இந்தியா மௌன அங்கீகாரம் வழங்கியுள்ளது. அமெரிக்காவின் பயங்கரவாத ஒழிப்புக்கும் இந்தியாவின் பயங்கரவாத ஒழிப்புக்குமிடையே அடிப்படையில் வேறுபாடு இல்லை என்றே தோன்றுகிறது.

இந்தியாவில் ஒரு பெரிய பயங்கரவாத இயக்கம் உள்ளது. அது முஸ்லிம் தீவிரவாத அமைப்பு எதுவுமே காஷ்மீர் விடுதலைப் போராளி அமைப்பு எதுவுமே அல்ல. இந்தியாவின் பாதுகாப்புக்கும் பெரும் மிரட்டலாக உள்ளதாக மன்மோகன் சிங் கூறுகிற மாஓவாதிகளும் அல்ல. இந்திய அரசாங்கம் மாஓவாதிகட்கு எதிராக உருவாகிய குண்டர் படைகளோ மாநில ஆளுங்கட்சிகளின் பின்?லுள்ள குண்டர் படைகளோ கூட அல்ல. இந்துத்வாவின் பயங்கரவாத அமைப்புக்களே இந்தியாவின் மிகப்பெரிய பயங்கரவாத அமைப்புக்கள். இந்த ஆண்டு மட்டும் மும்பாய் நகர் அமைந்துள்ள மாநிலமான மகாராஷ்டித்தில் இரண்டு பெரிய குண்டு வெடிப்புக்கள் நிகழ்ந்துள்ளன. செப்டெம்பர் மாதம் நடந்தது தொடர்பாக அமிர்தானந்த சுவாமி எனப்படும் ஒரு "துறவியும்' பாரதிய ஜனதா கட்சியின் பல வேறு அமைப்புகளிற் செயலூக்கமுள்ள ஒரு உறுப்பினரான ப்ரக்யபா சிங் தாக்கூர் எனும் பெண்ணும் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களை விட முக்கியமாக முஸ்லிம்கட்கு எதிரான வன்முறையைத் தூண்டிவிட்டவர்களுள் பாரதிய ஜனதா கட்சியின் தேசிய அரசியலில் முதன்மை நிலையிலுள்ள அத்வானியும் குஜராத் முதல்வர் நரேந்திர மோடியும் கவனிக்கத்தக்கோர் என்?ல் பாரதிய ஜனதாகட்சி ஒரு பயங்கரவாதக் கட்சியில்லாமல் வேறென்ன?

கோத்ரா புகையிரத நிலையத்தில் சபர்மதி கடுகதிப் புகையிரதத் தீ விபத்தை ஒரு முஸ்லிம் பயங்கரவாதச் சதி என்று பொய்சொல்லி அதை முன்வைத்து குஜராத்தில் ஒரு கொலைவெறியாட்டம் நடத்தி முடிக்கப்பட்டது. அதிற் சம்பந்தப்பட்ட பலரும் சட்டத்தின்பிடியிலிருந்து தப்பி விட்டனர். ஒரு முக்கியமான வழக்கு மட்டுமே விதிவிலக்கு. குஜராத் வன்முறைச் சம்பவங்கள் ஒவ்வொன்றுக்கும் ஆதரவாக நின்ற ஒரு குற்றவாளி மாநில முதல்வரென்?ல் அந்தப் பயங்கரவாதத்தை எதிர்த்து இந்தியா போராட வேண்டியுள்ளது என்று நாம் சிந்திக்க வேண்டும்.

ஒரிஸ்ஸாவில் ஒரு இந்து மதவெறிச் சாமியாரின் மக்கள் விரோத நடவடிக்கைகளைக் கண்டித்து எச்சரித்த பிறகும் அவர் தொடர்ந்தும் அவற்றில் ஈடுபட்டுவந்தார் என்று கூறி, மாஓவாதிகள் அவரைக் கொன்றனர். ஆ?ல் அப்பழி வேண்டுமென்றே கிறிஸ்தவர்கள் மீது சுமத்தப்பட்டுக் கோவில்களும் பாடசாலைகளும் மருத்துவமனைகளுங்கூடத் தீக்கிரையாக்கப்பட்டுள்ளன. இதைப் பற்றி மத்திய அரசு என்ன செய்திருக்கிறது?

இந்தியாவில் மதவெளி வெளியாகவே பரப்பப்பட்டு வருகிறது. அதன் விளைவாக மத அடிப்படையிலான சிறுபான்மையினர் தொடர்ந்தும் துன்புறுத்தப்படுகின்றனர். அதைப் பற்றி எந்த உறுதியான நடவடிக்கையையும் எடுக்காத ஒரு இந்திய அரசு குறிப்பிட்ட சில வகையான வன்முறைப் போராட்டங்கட்கு எதிராக மட்டும் போர்க்கொடி தூக்குகிறது. விடுதலைப் புலிகள் அமைப்பு இந்தியாவில் தடைசெய்யப்பட்டுள்ளது. ஆ?ல் விடுதலைப் புலிகள் செய்ததாகக் கூறப்படுகிற குற்றங்களை விடப் பெரிய குற்றங்களைச் செய்து வருகிற இந்துத்துவப் பயங்கரவாத அமைப்புக்களையும் அவற்றின் மீது தங்கியுள்ள ஒரு கட்சியையும் பற்றி இந்திய அரசு ஏன் எதுவுமே செய்யவில்லை.

மும்பாய்த்தாக்குதல்களை நடத்தியோர் அமெரிக்க, பிரித்தானியக் குடிமக்களைக் தேடித் தாக்க முற்பட்டதாயும் யூதர்கட்குரிய ஒரு கட்டிடத்தை தாக்கியுள்ளதாயும் அறிகி??ம் என்?ல், இந்திய அரசின் நடத்தையை விமர்சிக்கலாம். பயங்கரவாதத்தை மட்டும் விமர்சிப்பதால் பயங்கரவாதம் மேலும் வளரவே நாம் உதவுவோம்.


Comments