கிளிநொச்சி நகரை ஆக்கிரமித்தல் / கைப்பற்றுதல் தொடர்பில் சிறிலங்கா இராணு வத்தரப்பின் மதிப்பீட்டில் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதா? என்ற கேள்வியை எழுப்புவதற்கான சமிக்ஞைகள் சில வெளிப்பட்டுள்ளன. இதில் கிளிநொச்சிக் களமுனையில் கடந்த ஒரு வார காலத்தில் நிலவும் மோதல் தணிவு குறிப்பிடத்தக்கதாகவுள்ளது.
மகிந்த ராஜபக்ச அரசாங்கத்தைப் பொறுத்தும், சிறிலங்கா இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் சரத்பொன்சேகாவையும் பொறுத்தும் கிளிநொச்சியைக் கைப்பற்று வதற்கான ஃஆக்கிரமிப்பதற்கான கால நிர்ணய மாக நவம்பர் மாதத்தின் இறுதி கொள்ளப் பட்டிருந்தது. அதாவது தமிழீழத் தேசியத் தலைவர் வே. பிரபாகரன் அவர்களின் பிறந்த நாள் (26.11)க்கும், மாவீரர் நாள் (27.11)க்கும் முன்பதாக அன்றி அன்றைய தினங்களில் கிளிநொச்சி நகர் கைப்பற்றப்படுதல் வேண்டும். அன்றி நகருக்குள் புகுந்துவிடுதல் வேண்டும் என்பது அவர்களின் நோக்கமாக இருந்தது. இதற்கு அடிப்படையான காரணங்கள் இருக்கவே செய்தன.
01.தேசியத் தலைவர் வே. பிரபாகரன் அவர்களின் பிறந்த நாளன்று இயல்பாகவே தமிழ் மனங்களில் ஏற்படத்தக்கதான எழுச் சியை இல்லாது ஒழித்தல்.
02. மாவீரர் நாள் நிகழ்வுகளையும், தேசியத் தலைவர் வே. பிரபாகரன் அவர்களின் மாவீரர் நாள் உரையையும் குழப்பத்திற்குள் ளாக்குதல்.
தமிழர் தரப்பிற்கு இத்தகைய நெருக் கடிகளும், குழப்பங்களும் ஏற்படுத்தப்படு கையில் தமது தரப்பில் இரண்டு அனுகூலங்களை மகிந்த ராஜபக்சவும், இராணுவத் தளபதி சரத்பொன்சேகாவும் தனிப்பட்ட ரீதியில் எதிர்பார்த்திருந்தனர்.இதில் மகிந்தவின் எதிர்பார்ப்பானது கிளிநொச்சிக்குள் இராணுவம் புகுந்துவிட்டால், அச்செய்தியுடன் பாராளுமன்றத்தைக் கலைத்துப் பொதுத்தேர்தலை நடத்துவதாக இருந்தது. மங்கள சமரவீரவின் கருத்துப்படி டிசம்பர் 8ம் திகதி நாடாளுமன்றம் கலைக்கப்பட இருந்தது.
இதேசமயம், இராணுவத் தளபதிக்கோ, தனது அடுத்த பதவி நீடிப்பிற்கான வாய்ப்பை உறுதிப்படுத்திக் கொள்ளவும், அதனை நியாயப்படுத்திக்கொள்ளவும் கிளிநொச்சியை ஆக்கிரமித்தல் / கைப்பற்றுதல் என்பது அனுசரணையானதாக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், இது தொடர்பான முயற்சியில் சிறிலங்காப் படைத்தரப்பால் வெற்றிபெற்றுக் கொள்ள முடியவில்லை. மாறாக, குறிப்பிடத் தக்கதான இழப்பையே இராணுவம் சந்திக்க வேண்டியதாய் இருந்தது. அதிலும், குறிப்பாக உருத்திரபுரம், குஞ்சுப்பரந்தன் பகுதியில் கடந்த 23 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை மேற்கொண்ட மும்முனை நகர்வு முயற்சி படுதோல்வியில் முடிவடைந்தது.
இதில், 50 இற்கும் மேற்பட்ட சிறப்புப் படையினர் கொல்லப்பட்டதோடு, 100 இற்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். 20 இற்கு மேற் பட்ட படையினரின் சடலங்களையும் கைவிட்டு இராணுவம் திரும்ப வேண்டியதாயிற்று.
இப்பகுதியில் வாங்கிய அடியானது மாவீரர் தினத்திற்குள் கிளிநொச்சியைப் பிடித் தல், அன்றி உள்நுழைதல் என்பதைத் தடுத்த தோடு, கிளிநொச்சிக்குள் நுழைதல் எத்தகைய கடுமையான விடயமாக இருக் கும் என்பதையே உணர்த்து வதாகவே இருந்திருக்கும்.
ஆனால் சிறிலங்காப் படைத் தரப்பால் தமது கனவை வெளிப்படுத்தாமலும் இருக்க முடியவில்லை. (26.11.2008) கடந்த வியாழக்கிழமை ஊடகவியலாளரிடம் பேசிய சிறிலங்கா பாதுகாப்புத் துறை சம்பந்தமான பேச்சாளரும் அமைச்சருமான ஹெகலிய ரம்புக்வெல, கிளிநொச்சியை இராணுவம் எவ்வேளையிலும் கைப்பற்றலாம் எனத் தெரி வித்தார்.
கிளிநொச்சியில் இருந்து எவ்வளவு தூரத்தில் படையி னர் உள்ளனர் என ஊடகவிய லாளர் ஒருவர் கேட்டதற்கு நூறு இருநூறு மீற்றர்கள் எனக் கூறுவதைவிட இவ் ஊடகவியலாளர் மாநாடு முடிந்து நாம் திரும்பவதற்கு முன் கிளிநொச்சி படையினர் வசம் வந்துவிடும் என்றார்.
ஆனால், இவ்வாறு கிளிநொச்சியை நெருங்கி விட்டதாகவோ அதனைக் கைப்பற் றும் நிலையை எட்டிவிட்டதாகவோ சிறிலங்காத் தரப்புக் கூறுவது இது தான் முதற் தடவையல்ல. ஒக்ரோபர் மாதம் முதலாம் திகதி இராணுவத் தளபதி சரத்பொன்சேகாவும் கிளிநொச்சிக்கு இன்னமும் ஒன்றரைக் கிலோ மீற்றர்களே உள்ளதெனவும், விரைவில் கைப்பற்றிவிடுவோம் எனவும் கூறியிருந்தார்.
ஆனால் இன்னுமொரு தடவை கிளி நொச்சியைக் கைப்பற்றுதல் தொடர்பான தகவலை வெளியிட்டு தம்மைச் சிறுமைப் படுத்திக் கொள்ளவோ அவமானத்திற் குள்ளாக்கிக்கொள்ளவோ இராணுவத் தளபதி சரத்பொன்சேகா விரும்பவில்லைப்போல் தெரிகின்றது. இதன் காரணமாகவே யதார்த்தம் பற்றி எதுவும் சிந்திக்காது அரசவைக் கோமாளி போல் பேசத்தக்க அமைச்சர் ஹெகலிய ரம்புக்வெல ஊடாக இத்தகவலை அறிவிப்பு ஒன்றைச் செய்தது. தமிழர் மனங்களில் சலனத்தை ஏற்படுத்த முற்பட்டிருக்கக் கூடும்.இவ் அறிவிப்பு, ஒரு ஷகோமாளியால் விடுக் கப்பட்டதாயினும் சிங்களப் பேரினவாத சக்தி களிடம் இது நம்பிக்கைக்குரியதொன்றாகவே இருந்தது. அவ்வாறு இல்லாது விடில், கொழும்பு ஆங்கில ஏடு ஒன்று இரு தினங்களின் பின் கிளிநொச்சி இன்னமும் கைப்பற்றப் படவில்லை எனத் தலைப்புச் செய்தி வெளியிடப்படவேண்டி வந்திருக்காது.
ஆனால் இவ் அறிவிப்பு புஷ்வாணமாகிப் போன நிலையில், அடுத்து வந்த நாட்களில் கிளிநொச்சியைச் சூழவுள்ள களமுனையில் மோதல் தளர்வு நிலவியது என்றே கொள்ளலாம். இவ்வாறு கூறுவதன் மூலம் கிளிநொச்சி நகரைச் சூழ மோதல்களோ அன்றி எறிகணை வீச்சுக்களோ நிறுத்தப்பட்டுவிட்டதாகவோ, இராணுவம் தனது திட்டங்களைக் கைவிட்டு விட்டதாகவோ அர்த்தம் கொள்ளப்படுதல் தவறாகப்போய்விடும். இதற்குச் சிலவேளை சில நாட்கள் பெய்த கடும் மழைகூடக் காரண மாகலாம். இருப்பினும் இராணுவத் தரப்பின் சிந்தனைப்போக்கில் மாற்றம் ஏற்பட்டிருக்கலாம் என்பதற்கான சமிக்ஞைகள் தெரியவே செய்கின்றன.
கிளிநொச்சியைக் கைப்பற்றுதல் என்பது அதிக விலையுடன் சம்பந்தப்பட்டதானதொரு விடயமாகும். அத்தோடு இலகுவில் சாத்தியப் படாததொன்றாகவும் இருக்கமாட்டாது என்ப தும் ஏற்கெனவே சுட்டிக்காட்டப்பட்டதொரு விட யமே ஆகும்.
ஆனால், மகிந்த ராஜபக்ச அரசாங்கமும், படைத்தலைமையும் கிளிநொச்சிக்காக இதுவரை கொடுக்கப்பட்டவிலையை மூடி மறைத்துவிட்டனர் என்றே கொள்ளமுடியும். ஆனால், இத்தகையதொரு நிலைமை தொடர முடியாது என்பதைத் தற்போதைய நிகழ்வுகள் வெளிப்படுத்தியுள்ளன.இந்த வகையில், கிளிநொச்சிக்காகவும், பூநகரிக்காகவும் சிறிலங்கா கொடுத்த விலை என்ன? என்பதை ஓரளவிற்கு ஊகிக்கத்தக்க தானதும், மதிப்பிடத்தக்கதுமான தகவல்கள் தற்பொழுது வெளிவரத் தொடங்கியுள்ளன. இதற்கு முன்னாள் அமைச்சரும் சிறிலங்கா சுதந்திரக்கட்சியின் தலைவருமான மங்கள சமரவீரவினால் ஆரம்பிக்கப்பட்டதான பாதுகாப் புக் கண்காணிப்பகம்- என்னும் தகவல் மையம் முக்கிய பங்காற்றியுள்ளது எனின் மிகையானது.
மங்கள சமரவீரவின் பாதுகாப்புத் தகவல் மையம் கொழும்பையும் அதனைச் சூழவுள்ள துமான வைத்தியசாலையில் காயமடைந்து சிகிச்சை பெற்றுவரும் படையினர் தொடர்பாக வெளியிட்டுள்ள தகவலானது களமுனை எத்தனை கடினமானதும் எத்தகைய விலை கொடுப்பதாகவும் உள்ளது என்பதை நிரூபணம் செய்துள்ளது. மங்கள சமரவீரவின் தகவலின்படி ஜெயவர்த்தனபுர வைத்தியசாலையில் 160 பேரும், களுபோவல்லவில் 65 பேரும், ராகம வில் 90 பேரும், கொழும்பு தேசிய மருத்துவ மனையில் 250 பேரும,; படை மருத்துவ மனையில் 700 பேரும் அனுமதிக்கப் பட்டுள்ளதோடு அநுராதபுரம் மருத்துவமனை யில் 700 பேரும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதில் குறிப்பிடத்தக்க விடயம் என்ன வெனில் இராணுவ மருத்துவமனை, தேசிய மருத்துவமனை, கொழும்பு மருத்துவமனை என்பனவற்றில் சிகிச்சைக்காக அனுமதிக் கப்பட்டு சிகிச்சை பெறுவோர் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டவர்கள் என்பதாகும். அதாவது பாதிப்புக்களின் அடிப்படையிலேயே பெரிய மருத்துவமனைகளில் படையினர் அனுமதிக்கப்படுகின்றமை வழமையாகும்.
அடுத்ததாகப் புற நகரப்பகுதி வைத்திய சாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளோரும் - மோசமான காயங்களிற்கு உள்ளானவர்களே ஆகும். இத்தகையவைகள் இனித் தளம் திரும்புவதற்கான வாய்ப்புக்கள் மிக அரிதாகும். இவ்வாறாகப் படுகாயமடைந்த பலநூற்றுக் கணக்கான படையினர் பெரியதும், வசதிகள் அதிகம் கொண்டதுமான வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருக்கையில், களமுனை களுக்கு அண்மையாகவுள்ள, பின்புலமாக வுள்ள வைத்தியசாலைகளிலும் பெரும் எண்ணிக்கையான படையினர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இவை குறித்துத் தற்பொழுது வெளியாகும் தகவல்கள், கிளிநொச்சிக்கென சிறிலங்கா படைத்தரப்பு இதுவரையில் கொடுத்த விலை குறித்த மதிப்பீடு ஒன்றிற்கு வாய்ப்பளிப்பதாக வுள்ளது. சிலர் வாதிட முற்படலாம். காயமடைந்து வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவருப வர்கள் கிளிநொச்சிக்கான சமர்களில் மட்டும் காயமடைந்தவர்கள் அல்ல. பூநகரியிலும், வன்னேரியிலும், அக்கராயனிலும், கோணாவி லும், கிளாலியிலும் காயமடைந்தோரும் அதில் அடங்கலாம் என்று ஆனால், சிறிலங்கா இராணுவம் இன்று மாங்குளத்தில் இருந்து ஏ-9 பாதைக்குமேற்காகவுள்ள பூநகரி வரையி லான பகுதியிலும், யாழ்.குடாநாட்டில் முகமாலை தொடக்கம் நாகர்கோவில் வரைக்குமான பகுதியில் எங்கு காயப்படி னும் சரி, கொல்லப்படினும் சரி அது கிளி நொச்சிக்கெனக் கொடுக்கப்பட்ட விலையா கவே கொள்ளப்படத்தக்கதாகும்.
அதிலும், குறிப்பாகக் கடந்த மாதத்தில் பூநகரி, கோணாவில், குஞ்சுப்பரந்தன் பகுதிகளில் நடந்த மோதல்களில் சிறிலங் காப் படைத் தரப்பிற்கு ஏற்பட்டதான இழப்புக்கள் கிளிநொச்சி நகருக்குள் உள்நுழைய முற்படுவதோ, அன்றி கிளிநொச்சிக்குள் உள்நுழைந்து விட்டால் ஏற்படத்தக்கதான இழப்புக்களையோ கோடிட்டுக் காட்டத்தக்கவையாகும். அத் தோடு, அச்சண்டைகளில் வெற்றிபெற முடியுமா? வெற்றிபெறினும் அதற்காகக் கொடுக்கப்படும் விலை வெற்றியின் பெறு மானத்தைவிட அதிகமாகிவிடுமோ என்ற சந்தேகத்தைப் படைத்தரப்பில் ஏற்படுத்தி யிருத்தல்கூடும்.
ஆனால், சனாதிபதி மகிந்த ராஜபக்ச பாதுகாப்புத் துறையின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச இராணுவத்தளபதி சரத்பொன்சேகா போன்றவர்கள் - இவ் இழப்புக்களைக் கண்டு தமது திட்டங் களைக் கைவிடக் கூடியவர்கள் அல்ல. துருப்புக்களின் இழப்புக்கள் குறித்து எத்தகைய அக்கறையும் இன்றி யுத் தத்தை நடத்திச் செல்வதற்கு அவர்கள் தயங்கமாட்டார்கள் என்பதை அண்மைய அவர்களின் செயற்பாடுகளே வெளிப்படுத் தியுள்ளன. ஆனால், தமது எதிர்பார்ப்புக்கள், இலக்குகளை எதிர்பார்த்த ரீதியில் எட்டமுடி யாது போன நிலையில் அவர்கள் மாற்றுத் திட்டங்களையும் தந்திரோபாயங்களை யும் கையாள முற்பட்டுள்ளனர். இதில் முக்கியமானது முல்லைத்தீவு மாவட் டத்தில் கிழக்குப் பகுதியில் இராணுவம் நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தியுள்ள மையாகும்.
இந்நடவடிக்கைகளின் நோக்கம் முல்லைத்தீவு நகரையும் கிழக்குக் கரையோரத்தையும் கைப்பற்றுதல் என வெளிப்படுத்தப்பட்டுவரினும், விடுதலைப் புலிகளின் கவனத்தைக் கிளிநொச்சியில் இருந்து திருப்புவதற்கும் ஆனதாகும். சுருக்கமாகக் கூறின், விடுதலைப் புலிகளின் கவனம் ஒரு இடத்தில் இருக்கும் பட்சத்தில் விடுதலைப் புலிகளை எதிர்கொள்வது கடினமானது என்பதால் அவர்களின் கவனத்தை வேறு பகுதிக்கும் திருப்பும் முயற்சியாகும்.
முல்லைத்தீவு நோக்கியதான நகர் வானது சிறிலங்கா இராணுவத்தின் மூலோபாயத்தின் அடிப்படையிலானது எனக் கூறிக்கொள்ளத்தக்கதாயினும் கூடக் கிளிநொச்சி நோக்கிப் பெரும் முயற்சிகளையும் பெரும் பிரச்சாரத்தையும் மேற்கொண்டுவிட்டு முல்லைத்தீவு நோக்கியதான நடவடிக்கையில் ஈடுபடு வது யுத்த தந்திரோபாயத்தில் சிறிலங்கா இராணுவம் செய்து கொண்டுள்ள மாற் றமே ஆகும். ஏனெனில், பூநகரிக்கு முன்னதாகவே கிளிநொச்சியைக் கைப்பற்றுதல்ஃ ஆக்கிர மித்தல் என்ற திட்டம் இருந்த நிலையில் கிளிநொச்சி சாத்தியமற்றுப் போகவே பூநகரி நோக்கிய நகர்வு மேற்கொள்ளப் பட்டது. அதன் பின்னரும் கிளிநொச்சி நெருக்கடிமிக்கதானதொன்றாக இருக்கை யில் முல்லைத்தீவு நோக்கியதான நகர்வு மேற்கொள்ளப்படுகின்றது.ஆனால் முல்லைத்தீவு பூநகரியல்ல.
இதேசமயம் முல்லைத்தீவிற்காக கிளி நொச்சியோ, கிளிநொச்சிக்காக முல்லைத் தீவோ கைவிடப்படக் கூடியவையுமல்ல. ஆகையினால் சிறிலங்கா இராணுவம் அதிகவிலை கொடுக்கவேண்டியதான இரு களமுனைகளைத் திறந்துள்ளது என்றே கொள்ளமுடியும். இது சிறிலங்கா அரசியல் தலைமையினதும், இராணுவத் தலைமையினதும் மதிப்பீட்டையும் மீறியதானதாக நிச்சயம் இருக்கும் என உறுதிபடக் கூறலாம்.
- ஜெயராஜ்-
Comments