ஒரு நாட்டின் ஜனநாயக நடைமுறை தொடர்பாக ஊடகங்களுக்குள்ள சமூகப் பொறுப்பு குறித்து எப்போதும் பேசப்படுகிறது. மோதல்கள் இடம்பெறும் சமூகத்தில் அந்த சமூகப் பொறுப்பு கட்டாயமாக ஒரு அங்கமாக இருக்காவிட்டால் ஊடகங்களுக்குள்ள நான்காவது அரசு என்ற அதிகாரம் கேலிக்குரியதாகிவிடும்.
தற்போது இலங்கையிலுள்ள மக்கள் முகம் கொடுப்பது அந்த நான்காவது அரசின் மனிதாபிமான பார்வை மக்களை பாதுகாக்க அத்தியாவசியமாகியிருக்கும் இவ்வேளையிலாகும். இந்த அத்தியாவசியமான சமூகப் பொறுப்பை நிறைவேற்றும் ஊடகங்கள் மூலம் வெளிக்கொணரும் மனிதாபிமான பிரச்சினைகளின் சுபாவத்தை இனங் காண்பதே விமர்சிப்பு மூலம் எடுக்கப்படும் முயற்சியாகும்.
நாடு முழுவதும் கடும் மழை பெய்ததுடன் விஷேடமாக வட பகுதியில் கடும் அனர்த்தத்தை ஏற்படுத்தும் வகையில் பெய்த பலத்த மழை காரணமாக மூன்றரை இலட்சத்துக்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டது கடந்த வார மனிதாபிமானப் பிரச்சினையில் குறிப்பிடக்கூடியதாகும். 2008 நவம்பர் மாதம் 22 ஆம் திகதி சனிக்கிழமை முதல் 28 ஆம் திகதி வெள்ளிக்கிழமை வரையிலான ஏழு நாட்களுக்குள் நாளாந்த மற்றும் வாராந்த சிங்கள தமிழ் பத்திரிகைகளில் (59 பத்திரிகைகள்) கிட்டத்தட்ட 69509 சதுர சென்ரி மீற்றர் மனிதாபிமான தகவல்களை அறிக்கையிடுவதற்காக ஒதுக்கப்பட்டிருப்பதுடன் மக்களை மிக மோசமாகப் பாதித்த வெள்ளப்பெருக்கு தொடர்பான செய்திகளுக்காக இதில் 8774 சதுர சென்ரி மீற்றர் இடம் ஒதுக்கப்பட்டிருக்கிறது.
நாடு முழுவதும் கடும் மழை பெய்த போதும் இதில் மிக மோசமாக பாதிப்புக்கு முகம் கொடுத்தது வடக்குப் பகுதி மக்களே. கடந்த 30 வருட காலத்துக்குப் பின்னர் வடக்கில் மிகக் கடுமையான மழை பெய்தது கடந்த வாரத்திலாகும். யாழ்ப்பாணம் மற்றும் வன்னியில் ஏழு உயிர்களைக் காவு கொண்ட வெள்ளப் பெருக்கில் மிக மோசமாக பாதிப்புக்குள்ளானவர்கள் கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்ட மக்களாகும். காரணம் அவர்கள் அப்போது வழமையான வாழ்க்கை வாழவில்லை. அந்த மாவட்டங்களில் பெரும்பாலான மக்கள் கொடூர யுத்தம் காரணமாக உண்ண உணவின்றி அடிப்படை வசதிகளற்ற நிலையிலேயே இருந்தனர்.
கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களின் அரச அதிபர் அலுவலகத் தகவல்களின் படி கிளிநொச்சியில் 2,19878 மக்கள் தொகையில் 1,74979 பேரும், முல்லைத்தீவில் 2,59293 மக்கள் தொகையில் 1,97103 பேரும் (அக்டோபர் இறுதியில்) அச்சந்தர்ப்பத்தில் உள்ளுரிலேயே இடம்பெயர்ந்து பாடசாலைகள், ஆலயங்கள் அல்லது ஏனைய பொதுக் கட்டிடங்கள் மற்றும் தற்காலிகமாக அமைக்கப்பட்ட கூடாரங்களிலேயே வசித்து வந்தனர். கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள நான்கு அரச அதிபர் பிரிவுகளில் பூநகரி மற்றும் பச்சிலைப்பள்ளி பிரிவுகளில் மக்கள் முற்றும் முழுதாக இடம்பெயர்ந்திருந்ததுடன் கரச்சி உதவி அரச அதிபர்பிரிவில் அரைவாசி மக்கள் இடம்பெயர்ந்திருந்தனர். மோதல் இடம்பெ?த ஒரே பிரிவான கண்டாவளை பிரதேசத்தில் இடம்பெயர்ந்த 45000 குடும்பங்கள் தஞ்சமடைந்திருந்தன.
முல்லைத்தீவு மாவட்டத்தில் ஐந்து உதவி அரச அதிபர் பிரிவுகளில் இரண்டு பிரிவுகளில் யுத்தம் காரணமாக மக்கள் முற்றும் முழுவதுமாக இடம்பெயர்ந்திருந்தனர். இவ்வாறு இடம்பெயர்ந்தோர் உணவு, மருந்து, உடைகள் மற்றும் அடிப்படைத் தேவைகள் எதுவுமின்றி அல்லல்பட்டுக் கொண்டிருப்பதாக தமிழ் பத்திரிகைகள் செய்தி வெளியிட்டுக் கொண்டிருக்கும் போது, கொட்டித் தீர்த்த மழை காரணமாக இடம்பெயர்ந்தவர்களும் இடம்பெயராதோரும் சொந்த இடங்களில் வாழ்ந்தோரும் பெரிதும் பாதிக்கப்பட்டதை சொல்லித் தெரிய வேண்டியதில்லை. இந்தச் சந்தர்ப்பத்தில் ஓமந்தை சோதனைச் சாவடி மூடப்பட்டிருந்ததால் உணவுப் பொருட்களை அனுப்புவது தொடர்பான பிரச்சினையும் ஏற்பட்டிருந்ததாக செய்திகள் வெளியாகின.
இந்தியாவிலிருந்து அனுப்பப்பட்ட உணவுப் பொருட்களில் ஒரு பகுதி வார இறுதியில் வவுனியா வரை மட்டுமே எடுத்துச் செல்லப்பட்டிருந்தது. நிலைமை இவ்வாறிருக்கும் போது தொடர்ந்து பெய்த மழை காரணமாக முல்லைத்தீவு பிரசேதத்தில் 23236 குடும்பங்கள் பாதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. கிளிநொச்சி மாவட்டத்தில் 45000 குடும்பங்கள் வாழ்கின்றன. இருந்தும் யுத்தம் இடம்பெறும் இப்பிரதேசத்தில் மக்கள் முகம் கொடுக்கும் மிக மோசமான பாதிப்புகள் குறித்து மிகக் குறைந்தளவான செய்திகளே வெளிவந்தன.
கடும் மழையால் மக்கள் இடம்பெயர்ந்த செய்தி நான்கு தமிழ்த் தேசிய பத்திரிகைகளில் மூன்று தமிழ் பத்திரிகைகளில் முதன்முதலாக நவம்பர் 25 ஆம் திகதி வெளியானது. அது திருகோணமலை மாவட்டம் தொடர்பான செய்தியாகும். 26ஆம் திகதியும் நான்கு தமிழ் பத்திரிகைகளும் இந்தச் செய்தியை வெளியிட்டிருந்தன. மன்?ர், யாழ்ப்பாணம் மற்றும் கிழக்கு மாகாணத்தில் சில பிரதேசங்கள் பாதிக்கப்பட்டதாக செய்திகள் வெளியிடப்பட்டிருந்தன. வன்னியில் பெரும் வெள்ளப் பெருக்கு என்ற தலைப்பில் ஒரு செய்தி வெளியிடப்பட்டிருந்தது. இரண்டு நாட்களுக்குப் பின்னர் 27ஆம் திகதி இந்த வெள்ளப் பெருக்கு தொடர்பான செய்திகளை சிங்களப் பத்திரிகைகள் வெளியிட்டிருந்தன. முக்கிய நான்கு நாளாந்த பத்திரிகைகளில் மூன்றில் அன்று செய்திகள் வெளிவந்ததுடன் அப்போதே இடம்பெயர்ந்திருந்தவர்கள் மீது இயற்கை அனர்த்தமும் பாதிப்பை ஏற்படுத்தியது குறித்து எதுவும் தெரிவிக்கப்படவில்லை.
இடம்பெயர்ந்த மக்கள் மீண்டும் இடம்பெயர்ந்த செய்தி முதன் முதலாக 27ஆம் திகதியே தமிழ் பத்திரிகைகளில் வெளியிடப்பட்டிருந்தது. வீரகேசரி பத்திரிகை ஏழு புகைப்படங்களுடன் வன்னியில் வெள்ளப் பெருக்கின் கொடூரத்தை எடுத்து விளக்கியிருந்ததுடன் தினக்குரல் பத்திரிகை நான்கு புகைப்படங்கள் மூலம் யாழ்ப்பாண வெள்ள அனர்த்தத்தை விளக்கியிருந்தது. அரச வெளியீடான தினகரன் பத்திரிகை வன்னி பிரதேசம் குறித்து எதுவும் தெரிவிக்காமல் கடும் மழை குறித்து மட்டுமே செய்தி வெளியிட்டிருந்தது. வெள்ளத்தில் மூழ்கிய வன்னிப் பிரதேசத்தில் ஒரேயொரு புகைப்படத்தை வெளியிட்ட ஒரே சிங்களப் பத்திரிகை 28ஆம் திகதி லங்காதீப பத்திரிகையாகும்.
மூன்றரை லட்சத்துக்கும் அதிகமான மக்களை பாதிப்புக்குள்ளாக்கிய செய்திகளுக்கு வாரம் முழுவதும் 8774 சென்ரி மீற்றர் ஒதுக்கப்பட்டிருந்தது. இதில் 7678 சென்ரி மீற்றர்களில் தமிழ் பத்திரிகைகள் செய்தி வெளியிட்டிருந்தன. தமிழ் பத்திரிகைகளில் 3 தலைப்புச் செய்திகள், 2 ஆசிரிய தலையங்கங்கள், 10 முதற்பக்கச் செய்திகள் மற்றும் 11 புகைப்படங்களும் வெளியாகியிருந்தன. சிங்களப் பத்திரிகைகளில் 3 முதற்பக்கச் செய்திகள் ஒரு புகைப்படம் வெளியிடப்பட்டிருந்ததுடன் உள் பக்கங்களில் ஏனைய செய்திகள் வெளியிடப்பட்டிருந்தன. வெள்ளப்பெருக்கால் பாதிக்கப்பட்ட பிரதேசங்கள் பெரும்பாலும் தமிழ் மக்கள் வாழும் பிரதேசங்களாகும். இதிலும் அரச கட்டுப்பாட்டு பிரதேச தகவல்கள் ஓரளவு செய்திகள் வெளியிட்டிருந்த போதும் மீட்கப்படாத பிரதேசங்களைப் போல் யுத்தம் இடம்பெறும் வன்னிப் பிரதேச தகவல்களில் மிகக் குறைந்தளவு செய்திகளே வெளிவந்திருந்தன.
யுத்தம் காரணமாக முற்றும் முழுதாக நிர்வாக இயந்திரம் சீர்குலைந்துள்ள நிலையில் மாவட்டங்களிலுள்ள அதிகாரிகள் இடம்பெயர்ந்தோர் தொடர்பாக வவுனியாவிலுள்ள உப அலுவலகங்கள் மூலமாகவே நடவடிக்கைகளை மேற்கொள்கின்றனர். நாட்டின் சகல பகுதிகளிலும் இருக்கும் மக்களின் தகவல்களை ஒவ்வொருவரும் அறிந்துகொள்வது ஜனநாயக உரிமையாகும். மறுபுறம், பாதிக்கப்பட்ட மக்களுக்கு மனிதாபிமான உதவிகளை வழங்குவதற்காக சமூகத்தின் கவனத்தை ஈர்க்கவும், தீர்வுக்காக அதிகாரிகளை ஈடுபடச் செய்வதுமே ஊடகங்கள் மூலம் தகவல்களை வெளியிடுவதன் நோக்கமாகும்.

Comments