கோத்தபாய ராஜபக்ச, சரத் பொன்சேகா ஆகியோருக்கு எதிராக அமெரிக்காவில் இனப்படுகொலை வழக்கு தாக்கல்



சிறிலங்கா பாதுகாப்பு ஆலோசகரும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் சகோதரருமான கோத்தபாய ராஜபக்ச, சிறிலங்கா இராணுவத் தளபதி சரத் பொன்சேகா ஆகியோருக்கு எதிராக அமெரிக்காவில் இனப்படுகொலை வழக்கு தாக்கல் செய்வதற்கான ஏற்பாடுகள் பூர்தியாகியுள்ளன.

அமெரிக்காவின் குடியுரிமை பெற்ற மற்றும் பச்சை விசா (கிறீன்கார்ட்) வதிவிட அனுமதியைக்கொண்ட இருவரும் தமிழ் மக்கள் மீது மேற்கொண்டுவரும் இனப்படுகொலைக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்படவுள்ளது.


இதற்கான ஆரம்பகட்ட வேலைகள் பூர்த்தியாகியுள்ளதாகவும் எதிர்வரும் ஜனவரி மாதம் ஆரம்பத்தில் வழக்கு தாக்கல் செய்யப்படும் என அமெரிக்க முன்னாள் வழக்கறிஞரும் அமெரிக்க தமிழ் அமைப்புகளின் ஆலோசகருமான புரூஸ் பெய்ன் தெரிவித்துள்ளார்.

இவர்கள் மீதான குற்றச்சாட்டுக்களை விளக்கும் 400ற்கும் மேற்பட்ட பக்கங்களைக்கொண்ட அறிக்கை தயாராகியுள்ளதாகவும் எதிர்வரும் மாதம் முதல் வாரம் அமெரிக்க நீதியமைச்சில் இவர்கள் மீதான வழக்கு தாக்கல் செய்யப்படும் என புரூஸ் பெய்ன் தெரிவித்துள்ளார்.


Comments