இலங்கையின் இனக்குழுமச் சதுரங்கம் அடுத்த காய் நகர்த்தல்கள் யாவை?

* கருணாநிதி-மன்மோகன் சிங்-ராஜபக்ஷ

கிளிநொச்சியை நோக்கிய அரசுப் படை நடத்துகையின் வெற்றி விபரங்கள் பற்றி தென் இலங்கைக்குச் சொல்லப்பட்டவை இந்தியாவில் பலத்த சலசலப்பை ஏற்படுத்தி அத?ல் பிரtப் முகர்ஜி இலங்கைக்கு அனுப்பப்படுவார் என்ற மன்மோகன் சிங் கூற்று இந்தப் பிரச்சினையில் முக்கிய கட்டமாக அமைந்துள்ளது.

இலங்கையின் தேசிய முன்னணி என்ற ஜே.வி.பி, ஹெல உறுமய கூட்டு சனிக்கிழமை அன்று வெளியிட்ட அறிக்கை எதிர்பார்த்தபடி இந்தியாவைத் தாக்குகின்றது. இலங்கைஇந்திய சதுரங்கத்தில் காய்நகர்த்தல்கள் ஒரு மிகவும் சிக்கலான நிலையை ஏற்படுத்தியுள்ளது.

அரசு அல்லது அரசாங்க நிலைப் பிரச்சினைகளை ஆராய்பவர்கள் ஒரு முக்கிய உண்மையை வலியுறுத்துவார்கள். அதாவது, உள்ளகத் தேவைகளை அவற்றின் வழியாக வரும் அபிலாசைகளும் நிர்ப்பந்தங்களுமே வெளியுறவுக் கொள்கைகளைத் தீர்மானிக்கிறது என்பதே அந்த உண்மையாகும்.

அப்படிப் பார்க்கும் போது பிரபாகரன், கருtநிதி, மன்மோகன்சிங் ஆகியோருடைய தற்போதைய நிலைப்பாடுகள் பற்றிய ஒரு பார்வை அவசியமாகிறது. பிரபாகரனின் தமிழகம்இந்தியா பற்றிய நோக்குத் திசை திருப்பம் பற்றி சென்ற ஞாயிறு ஆராயப்பட்டுள்ளது. இலங்கை தமிழக தமிழ் உறவுகள் பற்றிய அடிநிலை உண்மை என்னவெனில் இலங்கைத் தமிழர்கள் தமிழர்கள் என்பதற்காகத் தாக்கப்படும் பொழுது அங்கு ஓர் உணர்வு அலைவீசும். இது திருச்சிக்கு கீழ் வரும் தென் தமிழகப் பகுதியிலேயே மிக அதிகமாகக் காணப்படும்.

இன்னொரு முக்கிய யதார்த்தம் முற்றிலும் தமிழக நிலைப்பட்டனவாக பிராந்தியக் கட்சிகள் ஒவ்வொன்றும் தமது நிலைப்பாட்டை வலுப்படுத்துவதற்கும் ஆதரவைப் பெருக்குவதற்கும் இலங்கைத் தமிழ் விடயம் பற்றி பேசுவது அவசியமாகும். உண்மையில் இந்தப் பிரச்சினையை முதன் முதலில் கிளப்பியது இந்தியக் கம்யூனிஸக் கட்சிதான். அதுவும் த.பாண்டியன் மூலமாகவே அது வந்துள்ளது. பாண்டியன் விடுதலைப் புலிகளின் நண்பன் என்று என்றுமே கூறிவிட முடியாது. (ஏனென்?ல் ராஜீவ்காந்தி கொலையின் போது சம்பவ இடத்தில் அருகில் நின்றவர்.) ஆ?ல் இலங்கைத் தமிழ் மக்கள் பற்றிய நிலைப்பாடு பற்றி வரும்போது அக்கட்சிக்கும் அதன் முக்கியத்தவர்களான நல்லகண்ணு, பாண்டியன், மகேந்திரன் ஆகியோருக்கு மிகத் தெளிவான விளக்கம் உண்டு. அது மாத்திரம் அல்ல சி.பி.ஐ. இந்தியத் தேசியக் கட்சிகளில் ஒன்று.

பாண்டியன் உக்கிரமாகக் கிளப்பிய பிரச்சினையை கருtநிதி தொடர்ந்து பேச வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. "உலகத் தமிழ் தலைவன்' என்றுதான் பெயர் சூட்டப்படுவதில் கருtநிதிக்கு நிறைந்த விருப்பமும் திருப்தியும் உண்டு. எனவேதான் அவர் தொடர்ந்து நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியதாயிற்று.

வைகோ, ஜெயலலிதா, ராமதாஸ் போன்??ரிடத்தில் இருந்து எடுத்து தன் கைக்குள் கொண்டுவர வேண்டிய தேவை கருtநிதிக்கு இருந்ததுஇருக்கிறது. ஏனெனில், அது சரியாகச் செய்யப்படாதுவிட்டால் மு.கா.ஸ்டாலின் தலைவராவதில் காலதாமதமும், சிக்கலும் ஏற்படும். ஆ?ல், இந்த விடயத்தில் உள்ள மிக முக்கிய அம்சம் என்னவென்?ல் கருtநிதி பிரதானமாகத் தற்காப்பிற்காகவே இந்த நிலைப்பாட்டை மேற்கொண்டார். எனினும் அதுவே சாமானிய தமிழர்களின் உணர்வாகவும் இருந்தது. அத?ல் இந்த நிலைப்பாட்டை அரசியல் சாணக்கியம் என்று எவரும் பகிரங்கமாகச் சொல்ல முடிவதில்லை. ஆ?ல், பல கட்சிகளால் பங்குபற்றவும் முடியவில்லை. தமிழகத்தில் ஒரு சர்வகட்சி ஒருமிப்பைக் காணத் தவறியதால் கருtநிதி இதனை டில்லி வரை கொண்டு செல்ல வேண்டிய தேவை ஏற்பட்டது.

அதுமாத்திரமன்றி பொதுவில் கருtநிதியின் அனுதாபிகள் என்று சொல்லமுடியாத தமிழக காங்கிரஸ் பிரிவினர் (தங்கபாலு தலைமை) இலங்கைத் தமிழ் மக்களுக்காகப் பெரிதும் வாதிட்டனர். இத?லேயே டில்லிப் பயணம் மேற்கொள்ளப்பட்டது. மன்மோகன்சிங்கைப் பொறுத்தவரையில் தனக்கென ஒரு நிலைப்பாட்டை எடுப்பதிலும் பார்க்க சோனியா காந்திக்காக அவரின் சாருனருக்கு ஆதரவான நிலைப்பாட்டையே எடுக்க வேண்டி யதாயிற்று. சோனியா காந்தி விடுதலைப் புலிகளின் அனுதாபியாக இருக்கவே முடியாது. இருந்தும் தங்கபாலு முதலியோர் அந்த நிலைப்பாட்டை எடுத்த பின்னர் தமிழகத்தில் காங்கிரஸின் நிலைமையை வலுப்படுத்துவதற்காக கிளிநொச்சி விடயம் பற்றி இந்த நிலைப்பாட்டை எடுக்க வேண்டியது அவசியமாயிற்று. எனவேதான் மன்மோகன் சிங் முதலில் இலங்கைத் தமிழர் பிரச்சினை தனக்குக் கவலை அளிப்பதாகச் சொன்?ர். ஆ?ல், டெல்லியில் தேசிய அரசு அதனையே மீண்டும் மீண்டும் சொல்லிக் கொண்டு இருக்க முடியாது. ஏனெனில் ஏற்கனவே கூறியபடி கருtநிதிக்கு 40 லோக்சபா உறுப்பினர்கள் உள்ளனர். எனவேதான் மன்மோகன்சிங் யுத்த நிறுத்தம் பற்றிப் பேசுவதற்கு இலங்கைக்கு ஒருவரை அனுப்ப ஒத்துக்கொள்ள வேண்டியதாயிற்று. பிரtப் முகர்ஜி வெளியுறவு அமைச்சர். இந்த விடயத்தில் இந்தியா, பாகிஸ்தான், சீ? போன்ற நாடுகளின் நிலைப்பாட்டையும் கருத்திற் கொண்டே தீர்மானம் எடுக்க வேண்டியதாயிற்று. வெளியுறவு அமைச்சர் அந்தஸ்துக்கு கீழ்ப்பட்ட ஒருவரையும் அனுப்ப முடியாது. ஆ?ல், இலங்கை அரசாங்கம் இதற்கு எவ்வாறு இடம் கொடுக்கும். சிங்களத்துவக் கட்சிகள் இதனை இந்தியத் தலையீடாகவே கருதும். அந்தக் குரல் நேற்றே ஒலிக்கத் தொடங்கிவிட்டது. இந்த நேரத்தில் தமிழ் நிலைப்பட்ட அடுத்த காய்நகர்த்தல்கள் யாவை? அல்லது எவையாக இருக்க முடியும்?

இந்த வேளையிலேயே யாழ்ப்பாணத்தில் 50 வருட காலம் இல்லாத பெருமழை பெய்து அழிவுகள் ஏற்பட்டது. காங்கேசன்துறை, பருத்தித்துறைக்கு நேரே அனுப்பப்பட இருந்த இந்திய உதவிகளை கொழும்பு மூலமாகவே அனுப்ப வேண்டும் என்று இலங்கை அரசாங்கம் வற்புறுத்திற்று. தாங்கள் லொறிக் கணக்காகப் பொருட்களை அனுப்பி மானுஷ்யப்படை எடுப்பின் இலக்கினை காப்பாற்றிக் கொள்கி??ம் என்று அரசாங்கம் ஒருபுறத்தில் கூற மறுபுறத்தில் சர்வதேசிய செஞ்சிலுவைச் சங்கம் அப்பகுதிக்கான உணவின் அத்தியாவசியத்தைப் பெரிதும் வற்புறுத்தியது.

விடுதலைப் புலிகளின் அதிகாரப் பிரதேசம் என்று சொல்லப்படுபவற்றுள் எல்லாக் காலத்திலும் அரசாங்கத்தின் உணவு மற்றைய மானிய வழங்கல்கள் நடைபெற்றே வந்தன. இந்த விடயத்திலேயே விடுதலைப் புலிகள் நில மேலாண்மைக்கும், பிறநாடுகளில் உள்ள விடுதலை இயக்க நிலமேலாண்மைக்கும் உள்ள வேறுபாடு தெரிகிறது. (கிழக்கு கொங்கோவில் உணவுத் தட்டுப்பாடு ஏற்பட்டு ஐக்கிய நாடுகள் நிறுவனங்களே முன்நின்று நிவாரணங்களைப் பரிபாலித்தது. ஆ?ல், கொங்கோ வேறு இலங்கை வேறு) இங்கு அரசாங்கத்துக்குள்ள மிகப் பெரிய இக்கட்டு சிங்கள மக்கள் விருப்பத்திற்கேற்ப நடப்பதாகக் கூறி சர்வதேசிகளுக்குள் மாட்டுப்பட்டுக் கொண்டிருப்பதுதான். இன்னுமொரு மிக முக்கிய குறிப்பைக் கூற வேண்டும். பிரtப் முகர்ஜி வந்துதான் இந்திய நிலைப்பாட்டைக் கூற வேண்டிய அவசியமில்லை. இந்திய உயர் ஸ்தானிகர் ஆலோக் பிரசாத் இந்திய நலன் விடயத்தில் மிக மிகக் கண்டிப்பாக உள்ளவர் என்பதை ஏற்கனவே அறிவோம்.

அடிப்படைச் சிக்கல் என்னவென்?ல், இலங்கையில் இன்று இருப்பது ஒரு தேசிய பிரச்சினை என்பதை இலங்கையின் அரசாங்கம் ஏற்றுக்கொள்ளத் தயங்குகின்றது. அந்தத் தேசியப் பிரச்சினைக்கான ஒரு நியாயமான, நிதானமான அரசியல் தீர்வு இல்லாமல் எதையும் தீர்த்துவிட முடியாது. இலங்கைச் சதுரங்க ஆட்டம் தொடர்ந்து சிக்கல் பட்டுக்கொண்டே இருக்கும்.

-பீஷ்மர்-


Comments