ஜனநாயகத்தின் பெயரால் ஸ்திரமாகும் சர்வாதிகாரம்


பாரதத்தின் ‘நியூ இந்தியன் எக்ஸ்பிறஸ்’ பத்திரி கைக்கு பேட்டியளித்துள்ள இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கிளிநொச்சியைச் சுற்றித் தற்போது நடைபெற்றுவரும் யுத்தம் குறித்தும் குறிப்பிட்டிருக் கின்றார்.

"கிளிநொச்சி வீழ்ச்சி இராணுவ வெற்றி என்பதை விட ஜனநாயக உரிமைகளை மீள ஏற்படுத்துவதற்கான ஆரம்பமாக அமையும்" - என்று வியாக்கியானம் அளித் திருக்கின்றார் அவர்.

தமிழர் தாயகத்தின் மையப் பிரதேசம் சிங்களப் படைகளின் - சிங்களத் தலைமையின் - கைகளில் வீழ்ச் சியுறுவது ஜனநாயக உரிமைகளை மீள நிலைநாட்டு வதற்கான ஆரம்பம் என்று இலங்கை அரசத் தலைவர் குறிப்பிடுகின்றார்.

அவர் கூறும் ஜனநாயகம் எது என்பதுதான் இன்றைய முக்கிய பிரச்சினையாகும். அவர் குறிப்பிடும் ஜனநாய கத்தின் ஆழ அகலங்களை - அர்த்த பரிமாணங்களை - புரிந்துகொண்டால், ஜனநாயகத்தின் பெயரால் அரங் கேற்றப்படும் பேரினவாத அடக்குமுறையையும் இன வாத சர்வாதிகாரத்தையும் இலகுவாகப் புரிந்துகொள்ள முடியும்.
சிறுபான்மையினரான தமிழர்களை பெரும்பான்மை யினரான பௌத்த - சிங்களப் பேரினவாதிகள் அடக்கி, ஒடுக்கி, மேலாதிக்கம் செலுத்துவதற்கு வாய்ப்பாக அமைந்த சொல்லாடலே ‘ஜனநாயகம்’ என்ற தந்திரோ பாயமாகும்.

‘பெரும்பான்மையினரின் தீர்மானமே முடிவு’ என்ற ஜனநாயகத்தின் மாண்புமிக்க கோட்பாட்டுத் தத்துவத்தை அடிப்படையாக வைத்துக்கொண்டே - அதை சாதகமாகப் பயன்படுத்தியே - கடந்த ஆறு தசாப்த காலமாக சுதந்திர(?) இலங்கையில் சிறுபான்மைத் தமிழர்கள் திட்டமிடப்பட்ட முறையில் பேரினவாதிகளின் இன ஒடுக்குமுறைக்கு உள்ளாக்கப்பட்டார்கள் என்பது வெளிப்படையான உண்மை.

ஜனநாயக விழுமியத்தின் உன்னதத் தன்மை என்ற கருத்துருவத்தின் தோற்றப்பாட்டுக்குப் பின்னால், அந்தப் பொய்யான முகமூடிக்குப் பின்னால், பௌத்த - சிங்களப் பேரினவாத அரசுகள் ஆறு தசாப்த காலமாக தமிழினத்துக்கு எதிராகப் புரிந்துவரும் அநீதிகள், அராஜ கங்கள், அடக்குமுறைகள் அனேகம்.

இந்தக் கொடூரங்களை மூடிமறைத்து, உலகத்தின் கவனத்தை தவறான பாதையில் திசைதிருப்பும் யுக்தி யாகவே ‘ஜனநாயகம்’ என்ற பூடகமான சொல்லாடலை தென்னிலங்கை வசமாகப் பயன்படுத்தி வருகின்றது.

இலங்கையைப் பொறுத்தவரை - பௌத்த, சிங்கள அரசுகளால் நடைமுறைப்படுத்தப்படும் ஜனநாயகம் என்பது தமிழ் மக்களின் கருத்தில், நிதர்சனத்திற்கு மாறான வெறும் மாயாஜால வார்த்தைப் பிரயோகமே. அந்தப் போலியான கருத்துவத் திரைக்குப் பின்னால் மறைந்துநின்று இன அடக்குமுறைச் செயற்பாடுகளைக் கட்டவிழ்த்துவிட்டிருக்கும் தென்னிலங்கை, அந்த அத்துமீறல்களை எல்லாம் சர்வதேசத்தின் முன்னால் நியாயப்படுத்துவதற்காக ஜனநாயக நாடகத்தை ஆடு கின்றது.

தனியான இனம், தனியான தாயகம், சுயநிர்ணய உரிமை ஆகிய பண்பியல்புகளைக் கொண்ட ஒரு தேசமாகவும், தேசியமாகவும் விளங்கும் ஈழத்தமிழர் தரப்பை, எண்ணிக்கையில் அதிகம் என்ற தனது வலிமையை வைத்துக்கொண்டு, ஆக்கிரமித்து அடக்கி ஆள்வதற் கும், அத்தரப்பு மீது தனது அதிகாரத்தைச் செலுத்துவ தற்கும் சிங்களம் கையில் எடுத்திருக்கும் கருவியே "ஜனநாயகம்" என்ற சொல்லாடலாகும்.

தனது அதிகார மேலாண்மையையும், கருத்து நிலை மேலாதிக்கத்தையும் நிலை நிறுத்துவதற்கான உபகர ணமாக ஜனநாயகம் என்ற உயரிய பண்பியல்பை சிங் களம் நுட்பமாகப் பயன்படுத்துகின்றது.

தமிழர் தரப்பின் சம்பந்தமோ, உடன்பாடோ, இசைவோ இன்றி சிங்களத்தின் ஒருதலைப்பட்சமான தீர்மானத் திற்கு அமைய இலங்கைத் தீவில் நடைமுறைக்குக் கொண்டுவரப்பட்ட அரசமைப்புகளை வைத்துக்கொண்டு - தமிழர்கள் மீது சிங்களத்தினால் வல்வந்தமாகத் திணிக் கப்பட்ட யாப்புக்களின் அடிப்படையில் - முன்னெடுக் கப்படும் அதிகாரச் செயற்பாடுகள் தார்மீக ரீதியில் தமிழர்களைக் கட்டுப்படுத்தா. அத்தகைய சட்ட ஏற்பா டுகளின் கீழ் "ஜனநாயகத்தின் பெயரால்" தான் நடத்தும் நாடகங்களை உலகம் நம்பவேண்டும் என சிங்களம் எதிர்பார்ப்பதும் அபத்தமாகும்.

"அநீதியான முடிவு என்றாலும் பெரும்பான்மையி னரின் தீர்மானமே இறுதித் தீர்ப்பு" என்ற ஜனநாய கத்தின் ஓட்டையை வைத்துக்கொண்டு தென்னிலங் கைப் பேரினவாதம் புரிந்த அராஜகத்தின் வரலாற்றுப் பெறுபேறே ஈழத்தமிழினத்தின் ஆயுதம் தாங்கிய விடு தலைப் போராட்டமாகும்.

அதை அடக்கும் அடக்குமுறை நடவடிக்கையை நியாயப்படுத்தவும் அதே ஜனநாயகமே தென்னிலங் கைக்குப் பயன்படுவது விந்தைதான்.
ஜனநாயகத்தின் மாண்பு ஓர் எல்லை வரையே. அதற்கு அப்பால் ‘எண்ணிக்கையை விட எண்ணம் பெரிது’ என்ற உயரிய மார்க்கத்தையும் நாம் கவனத்தில் கொள்ளவேண்டும். நீதி, நியாயத்தை உள்வாங்காத ஜனநாயகமும் - பேரினவாதமும் - ஒரு வகையில் சர்வா திகாரமே.

இந்தவகையில் பார்த்தால் கிளிநொச்சியின் உத்தேச வீழ்ச்சி, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கூறுவதுபோல ‘ஜனநாயகத்தை மீள நிலைநாட்டுவதன் ஆரம்பம்’ ஆக அல்லாமல் ‘சர்வாதிகாரத்தை நிலைநிறுத்தும் ஜனநா யகக் கேலிக்கூத்தாகவும் ’ அமையலாம்.


Comments