போர் நடைபெறும் களங்களில் போரியல் ஒழுங்கு முறைமைகள் எனப் பலநடைமுறைகளைப் போரில் ஈடுபடும் நாடுகள் மேற்கொள்வது நடைமுறை. சிறிலங்காவில் தமிழ் மக்கள் மீது இனவெறிப்போரை பல ஆண்டுகளாக நடத்திவரும் சிறிலங்கா இராணுவம் போர் நடைமுறைகள் பலவற்றையும் பல்வேறு சந்தர்பங்களிலும் மீறியுள்ளமை ஆதாரபூர்வமாக நிரூபிக்கப்பட்டிருக்கிறது.
சர்வதேசங்களில் தடைசெய்யப்பட்ட எரிகுண்டுகள், கொத்தணிக்குண்டுகள், அமுக்கவெடிகள், மிதிவெடிகள் என தடைசெய்யப்பட்ட ஆயுதங்களைப் பாவித்து யுத்த மரபுகளை மீறியுள்ளது சிறிலங்கா இராணுவம். போரில் மரணமடையும் போராளிகளை அவமரியாதை செய்வதிலும் அது தனது வக்ரபுத்தியைக் காட்டியது. அநுராதபுரத்தில் தாக்குதல் நிகழ்த்திய கரும்புலிப்போராளிகளின் உடல்களை நிர்வாணமாக்கிக் பொது மக்களுக்கு காட்சிப்படுத்தியது. இத்தகைய காட்சிப்படுத்தல்கள் மூலம் போராளிகளின் மனஉறுதியினைக் குன்றச் செய்யவதும், தமிழ்மக்களைப் பயங்கொள்ளச் செய்வதும் இராணுவத்தின் பிரதான உத்தியாக இருந்தது.
இந்த இராணுவத்தின் வக்கிர உச்சமாக, போரில் களப்பலியான பெண் போராளிகளை நிர்வாணப்படுத்திப் பாலியல் வக்கிரம் செய்த பின் அதை காட்சிப்பதிவு செய்து மகிழ்ந்திருக்கும் அதிர்ச்சித் தகவல் தெரியவந்திருக்கிறது. எமக்குக் கிடைக்கப்பெற்ற ஒரு வீடியோப் பதிவில் மனதை அதிரவைக்கும் அந்தக் கொடூரம் பதிவாகியிருப்பதைக் கண்டு அதிர்ந்து போனோம். பெண் போராளிகளை அவமரியாதை செய்யும் வகையில் அமைந்திருந்த அந்தக் காட்சிப்பதிவினை வெளியிட எமது மனச்சாட்சி இடந்தரவில்லை. ஆயினும் இந்தப் போரியற் குற்றத்தை உலகின் கண்களுக்கு வெளிக்கொணர வேண்டிய ஊடக தார்மீக அவசியம் கருதி அக்காட்சிப் படிமத்தில் சில படங்களைத் தணிக்கை செய்து வெளியிடுகின்றோம்.
இதனைக் கண்ணுற்ற பின், இப்போர்க்குற்றத்திற்காக சிறிலங்கா ஜனாதிபதி, இராணுவத் தளபதி, ஆகியோர் என்ன சொல்லப்போகின்றார்கள்?
இவர்களைச் சட்டத்தின் முன்னால் நிறுத்தப்போவது யார்?
அரசுசார்ந்து நின்று, ஜனநாயகம் பேசும் தமிழ் தலைமைகள் இதற்கு என்ன செய்வார்கள்?
இலங்கையின் ஒற்றையாட்சிக்குள் தமிழர்களை இணைந்து வாழுங்கள் என வலியுறுத்துபவர்களே! முதலில் இந்த அநீதிக்கு நீங்கள் என்ன செய்யப் போகின்றீர்கள்?
வீடியோக் காட்சியில் சிங்கள மொழியில் பேசப்படும் வசனங்களின் தணிக்கை செய்யப்பட்ட தமிழாக்கம்..
.............கரும்புலிகளை..............
முகத்தைக் காட்டு....ஹெல்மெட்டை கழட்டு
எங்கே ஜெயலத் .........காட்டு இவைகளையும் காட்டு
வீடியோவில் எடு உடைகளைக் கழட்டு
மற்றவர்களையும் கூப்பிடு.......

Comments