விமானப்படையால் புலிகளுக்கு ஏற்படுத்தக் கூடிய உச்சக் கட்ட இழப்பு எவ்வளவு ?

வன்னியில் இலங்கை விமானப்படை கிளஸ்டர் குண்டுகளை வீசித் தாக்குதல் நடத்தத் தொடங்கியிருக்கிறது.

அண்மையில் ரஷ்யாவுக்குச் சென்றிருந்த பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஸ தலைமையிலான பாதுகாப்பு அதிகாரிகள் குழு வாங்கி வந்ததே இந்தக் கிளஸ்டர் குண்டுகள்.


இதற்கு முன்னர் இலங்கை விமானப்படையின் ஜெட் போர் விமானங்கள் எம்.கே-83 குண்டுகளையும், பதுங்கு குழிகளை அழிக்கின்ற லேசர் வழிகாட்டல் ஏவுகணைகளையுமே பயன்படுத்தி வந்தன.

இப்போது விமானப்படை ரஷ்யாவிடம் இருந்து இரண்டு புதிய வகைக் குண்டுகளை கொள்வனவு செய்திருக்கிறது. அவற்றில் ஒன்று தான் கிளஸ்டர் குண்டு.

தற்போது உலகில் உள்ள அபாயகரமான ஆயுதங்களின் வரிசையில் அணுவாயுதங்கள், இரசாயன ஆயுதங்களுக்கு அடுத்தபடியாக கொடூரமான போராயுதங்களின் பட்டியலில் இந்த கிளஸ்டர் குண்டுகள் இடம் பெற்றிருக்கின்றன.

இலங்கை விமானப்படை முன்னர் சிறியளவிலான கிளஸ்டர் குண்டுகளை பயன்படுத்தி வந்திருக்கின்றது.

ஆனால் இப்போது பயன்படுத்த ஆரம்பித்திருக்கின்ற கிளஸ்டர் குண்டுகள் மிகப் பாரியவை. மிகப் பயங்கரமானவை. பாரிய அழிவுகளை ஏற்படுத்தக் கூடியவை.

இரண்டாம் உலகப் போரின் போது ஜேர்மனிதான் கிளஸ்டர் குண்டுகளை முதன்முதலில் பயன்படுத்த ஆரம்பித்தது.

1940 இல் ‘பட்டர்பிளை’ எனப்படும் இரண்டு இறாத்தல் கிளஸ்டர் குண்டுகளை இராணுவ மற்றும் பொதுமக்கள் இலக்குகள் மீது ஜேர்மனி வீசியது.
இதன்பின்னர் அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகள் இதனைத் தயாரிக்கத் தொடங்கின. இப்போது உலகில் 34 நாடுகள் கிளஸ்டர் குண்டுகளை உற்பத்தி செய்கின்றன.

கிளஸ்டர் குண்டுகளைப் பயன்படுத்துகின்ற 23 நாடுகளில் இலங்கையும் ஒன்றாகும். அண்மையில் தான் கிளஸ்டர் குண்டுகளின் உற்பத்தியை, விற்பனையை, பயன்பாட்டைத் தடைசெய்யும் உடன்பாடு ஒஸ்லோவில் கைச்சாத்தானது.

இந்த உடன்பாட்டில் சுமார் 100 நாடுகள் கைச்சாத்திட்டிருக்கின்ற போதும் இலங்கை அதற்கு உடன்படவில்லை.

அமெரிக்கா, ரஷ்யா, இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ் போன்ற பல நாடுகள் இந்த உடன்பாட்டில் கைச்சாத்திடாமல் இருக்கின்றன.

கிளஸ்டர் குண்டுகளை இலங்கை விமானப்படை பொதுமக்கள் இலக்குகள் மீது பயன்படுத்த ஆரம்பித்திருப்பதானது பரந்தளவிலான சேதங்களை ஏற்படுத்தும் நோக்கம் கொண்டது.

இத்தகைய குண்டுகள் போர்முனையில் துருப்புகளை பெருமளவில் கொல்கின்ற வகையிலோ, விமான ஓடுபாதை, தொலைத்தொடர்பு கட்டமைப்பு, மின்சாரக் கட்டமைப்பு, ஆயுதத் தொழிற்சாலைகள், போன்ற பிரமாண்டமான இலக்குகளைத் தாக்குவதற்கே பயன்படுத்தப் படுகின்றன.

அத்துடன் கண்ணிவெடிகளை அகற்றுகின்ற பிரதான ஆயுதமாகவும் இது பயன்படுத்தப்பட்டு வருகிறது.

பரந்தளவிலான பிரதேசத்தில் பெருமளவு வெடிப்புகளை நிகழ்த்துவதன் மூலம் அதிக சேதங்களை ஏற்படுத்தக் கூடியதென்பதால், இந்தக் குண்டுகள் பிரமாண்டமான இலக்குகள் மீது பயன்படுத்தப் படுவதுண்டு.

பரந்தளவில் சேதங்களை உருவாக்குகின்ற இந்தக் குண்டுகளை விமானப்படை பயன்படுத்தி இருப்பது, புலிகளிள் தளங்கள் மீதோ அல்லது போர்முனையிலோ அல்ல.

மக்கள் குடியிருப்பு மீதே அதுவும் இரவு வேளையில் தாக்குதல் நடாத்தப் பட்டிருக்கிறது.

ஓன்றுக்கு மூன்று தடவைகள் இந்தத் தாக்குதல்கள் நடாத்தப் பட்டிருக்கின்றன.

16 குண்டுகள் உழவனூர் குடியிருப்பில் வீசப்பட்டிருக்கின்றன. ஒரு தடவை வேண்டுமானால் குறி தப்பியதாக சமாளிக்கலாம்.

ஆனால் மூன்று தடவைகள் நடத்தப்பட்ட குண்டுத் தாக்குதல்கள் இது திட்டமிட்ட தாக்குதல் என்பதையே வெளிப்படுத்துகின்றது.

அதுவும் தாக்குதல் இலக்குத் தொடர்பாக ஆளில்லா வேவு விமானத்தைப் பயன்படுத்தி உறுதிப்படுத்திக் கொண்டே அடுத்தடுத்த தாக்குதல்கள் நடத்தப் பட்டிருக்கின்றன.

இந்தத் தாக்குதல்களில் இருந்து, விமானப்படை எதிர்வரும் நாட்களில் இத்தகைய குண்டுகளைப் பயன்படுத்திப் பொதுமக்களை அதிகளவில் கொல்லும் முயற்சியில் இறங்கலாம் என்று தெரிய வருகிறது.

அண்மைக் காலப் போர்களில் குறிப்பிட்ட சில நாடுகளே இந்த கிளஸ்டர் குண்டுகளைப் பயன்படுத்தி இருக்கின்றன.

செச்சின்ய போரின் போதும், அண்மையில் ஜோர்ஜியாவிலும் ரஷ்யா இந்த கிளஸ்டர் குண்டுகளைப் பயன்படுத்தி பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்தியிருந்தது.

அதுபோன்றே யூகோஸ்லாவியாவில் நேட்டோ படைகளும், ஆப்பானிஸ்தானில் அமெரிக்காவும், லெபனானில் இஸ்ரேலும் அண்மைக் காலத்தில் கிளஸ்டர் குண்டுகளைப் பயன்படுத்தி இருக்கின்றன.

இதற்குப் பின்னர் இலங்கையே இந்தக் குண்டுகளைப் பயன்படுத்த ஆரம்பித்திருக்கிறது.

ரஷ்யத் தயாரிப்பான gdt -500 ரகத்தைச் சேர்ந்த கிளஸ்டர் குண்டுகளையே விமானப்படை வன்னியில் பயன்படுத்தியதாகத் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.

அதேவேளை முன்னதாக சில தகவல்கள் ழுனுயுடீ-500 எனப்படும் குண்டுகள் பயன்படுத்தப் பட்டதாக வெளியாகியிருந்தன.

ரஷ்ய மொழியில் அமைந்திருந்த இந்தக் குண்டின் பெயரை மொழி பெயர்ப்பதில் ஏற்பட்ட குழப்பத்தினால் தான்; குண்டின் பெயர் மாறுபட்டதாக சிலர் கருதுகின்றனர்.

ஆனால் இந்த இரண்டு வகையான குண்டுகளுமே விமானப்படையின் மிக்-27 விமானங்கள் மூலம் வன்னியில் வீசப்பட்டு வருவது குறிப்பிடத் தக்கது.
சில வாரங்;களுக்கு முன்னர் தான் விமானப்படை இந்தக் குண்டுகளை வன்னியில் பயன்படுத்த ஆரம்பித்தது.

மாங்குளம் காட்டுப் பகுதியில் உள்ள புலிகளின் தளங்கள் மற்றும் முகாம்களை இலக்கு வைத்து, ழுனுயுடீ-500 ரகத்தைச் சேர்ந்த எரிகுண்டு வகை கிளஸ்டர்களை விமானப்படை வீசியிருந்தது.

மாங்குளத்தில் விமானப்படை எரிகுண்டு தாக்குதல்களை நடத்த ஆரம்பித்திருப்பதாக செய்திகள் வெளிவந்ததை பார்த்திருப்பீர்கள். அது தான் இது.
மணிக்கு 500 தொடக்கம் 1100 கி.மீ வேகத்தில் 200 மீ முதல் 1000 மீ வரையில் தாழப்பறந்து இந்த எரிகுண்டுகளை வீச வேண்டும்.

90 அங்குல நீளமும், 19.7 அங்குல விட்டமும் கொண்ட இந்தக் குண்டுகள் 1146 இறாத்தல் (520கிலோ) எடை கொண்டவை.

இதில் 425 இறாத்தல் எடையுள்ள ஏரோசோல் வாயு என்ற உயர்சக்தி எரிபொருள் நிரப்பப் பட்டிருக்கிறது. இது வீழ்ந்து வெடிக்கின்ற 30 மீற்றர் சுற்றளவுப் பிரதேசத்தை சாம்பல் மேடாக்கிவிடும்.

இதுவே புலிகளின் முகாம்கள், தளங்கள் மீது அண்மைக் காலமாக வீசப்பட்டு வந்தது. இதை வீசிய பின்னர் பாரிய நெருப்பு பற்றிக் கொள்ளும். அதைப் படம் பிடித்தே புலிகளின் ஆயுதக் களஞ்சியம் தாக்கப்பட்டதாக விமானப்படை கூறிவந்தது.

ஆனால் உழவனூரில் விமானப்படை பயன்படுத்தி இருக்கின்ற குண்டு ரஷ்யாவினால் அதிகளவில் இரகசியமாகப் பாதுகாக்கப்பட்டு வந்த ரகத்தைச் சேர்ந்ததொன்றாகும்.

இந்தக் குண்டு பற்றிய தகவல்களை ரஷ்யா பெரியளவில் வெளியிடாமல் பாதுகாத்து வந்தது.

ழுகுயுடீ-500 எனப்படும் இந்தக் குண்டு 515 கிலோ (1135 இறாத்தல்) எடை கொண்டது. இதில் 507 இறாத்தல் உயர்சக்தி வெடிமருந்து அடைக்கப் பட்டுள்ளது.

இந்தக் குண்டை தாழப் பறந்தும் வீசலாம். அதிக உயரத்தில் இருந்தும் வீசலாம். அதாவது 165 அடி வரைக்கும் தாழப் பறந்து வீசவும், 33,000 அடி வரை உயரப் பறந்து கொண்டேயும் வீசக் கூடியதாக இருக்கும்.

490 கி.மீ தொடக்கம் 1225 கி.மீ வேகத்தில் பறந்து கொண்டே இந்த வகைக் குண்டுகளை வீச முடியும்.

துருப்பு எதிர்ப்பு, கண்ணிவெடிகளை அகற்றுதல், விமான நிலையங்களில் தரித்திருக்கின்ற விமானங்களை அழிப்பது, கட்டடப் பகுதிகள், ரயில் சந்திப்புகள் போன்ற கனமான இலக்குகளை அழிக்கவே இந்தக் குண்;டுகளை ரஷ்யா தயாரித்திருக்கிறது.

சிறி லங்கா விமானப்படைமுதன் முதலில் சியாமா செற்றி விமானங்கள் மூலம் 1985 இல் 50 கிலோ எடையுள்ள குண்டுகளை வீசத் தொடங்கியது.
இப்போது 520 கிலோ எடையுள்ள கிளஸ்டர் குண்டுகளை வீசுகின்ற நிலை வரைக்கும் சென்றிருக்கிறது.

விமானப்படையால் புலிகளுக்கு ஏற்படுத்தக் கூடிய உச்சக் கட்ட இழப்பு எவ்வளவு என்பது இப்போது தெரிய வந்திருக்கிறது.

புலிகளுக்கு அழிவுகளை ஏற்படுத்த இப்போது பயன்படுத்தப்படும் குண்டுகள் போதாது என்ற நிலையில் தான் அரசாங்கம் கிளஸ்டர் வகையைச் சேர்ந்த புதிய வகைக் குண்டுகளை வாங்கிக் கொடுத்திருக்கிறது.

உழவனூரில் இந்தக் குண்டுவீச்சு நடத்தப்பட்ட போது பொதுமக்கள் உறக்கத்தில் இருந்ததால் அதிக இழப்புகள் ஏற்பட்டன.

ஆனால் பதுங்கு குழிகளில் இருந்திருந்தால் இழப்புகள் கணிசமாக் குறைந்திருக்கும்.

காரணம் இந்தக் குண்டுகள் பரந்த பிரதேசத்தை தாக்குகின்ற போதிலும் சிறியளவிலான வெடிப்புகளேயே ஏற்படுத்தும். ஆதலால் தரைக்குக் கீழ் ஆழமான சேதங்களை ஏற்படுத்தக் கூடியவையல்ல.

அதேவேளை தரைக்கு சற்று மேலாக வெடிக்கின்ற குண்டுகளையும் விமானப்படை பயன்படுத்தி வருகிறது.

கிளைமோர் போன்று பரந்தளவில் அதிக சேதங்களை சிதறு துண்டங்களை விசுறுகின்ற குண்டுகளை விமானப்படை ஏவுவதால் வெளியான பிரதேசத்தில் இருப்போருக்கு சேதங்கள் அதிகமாக ஏற்படும்.

செஞ்சோலை மீதான தாக்குதலுக்கு விமானப்படை பயன்படுத்தியிருந்தது அத்தகைய குண்டுகளைத் தான்.

இந்தக் குண்டு வீச்சுகள் அனைத்துமே விமானப்படையால் முன்னரங்க நிலைகளில் உள்ள போராளிகள் மீது நடத்த முடியாதவை.

காரணம் அநேகமான போர்முனைகளில் புலிகளுக்கும் படையினருக்கும் இடையிலான தூரம் மிகமிக குறைவாகவே இருக்கின்றது.

புலிகளின் பின்னணி தளங்கள் மற்றும் பொதுமக்கள் இலக்குகளே விமானப்படையின் தாக்குதலுக்கு உள்ளாகும்.

எனவே விமானப்படை எத்தகைய கிளஸ்டர் குண்டுகளை கொண்டு வந்து தாக்குதல் நடத்தினாலும் போர்முனையில் படைத்தரப்புக்கு திருப்பங்களை ஏற்படுத்தவோ சாதகமான சூழலை ஏற்படுத்தவோ முடியாது.

கடும் விமானத் தாக்குதலால் புலிகள் பின்வாங்கியதான சம்பவம் எங்குமே நடக்கவில்லை. அந்தளவுக்கு விமானத் தாக்குதல் நடத்துகின்ற திறன் இப்போது விமானப்படையிடம் இல்லை.

குறிப்பாகச் சொல்லப் போனால் 1990 களில் விமானப்படையின் சியாமா செற்றி, புக்காரா போன்ற தாக்குதல் விமானங்கள் போர்முனையில் உள்ள புலிகளுக்கு கொடுத்த நெருக்கடியைக் கூட இப்போது விமானப்படையால் கொடுக்க முடியவில்லை.

நவீன விமானங்கள், குண்டுகளைக் கொண்டு வந்து குவித்திருக்கின்ற போதும் விமானப்படையின் தாக்குதல் திறன் குறைந்தேயிருக்கிறது.

இதனால் விமானப்படையை எத்தகைய நவீன மயப்படுத்திய ஆயுதங்களைப் பயன்படுத்தினாலும்; அது புலிகளின் போர்க்கள நடவடிக்கைகளுக்குப் பாதிப்பை ஏற்படுத்தாது என்பதே யதார்த்தம்.

நிலவரத்துக்காக
களமுனையிலிருந்து கபிலன்

Comments