அப்பாவிகளின் உயிர்களைக் காவு கொள்ளும் ஆயுதபானிகளின் அச்சுறுத்தல்கள்

கிழக்கு மாகாணம் முழுமையாக விடுவிக்கப்பட்டு அங்கு ஜனநாயக யெற்பாடுகளுக்கு முக்கியத்துவம் வழங்கப்பட்டுள்ளதாக அராங்கம் வெளியுலகில் பாரிய பிரார நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்ற போதிலும் அங்கு தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் வன்முறைச்ம்பவங்கள் படுகொலைச்ம்பவங்கள் என்பன பொதுமக்களை அச்த்தில் உறைய வைத்துள்ளது.

அப்பாவி மக்களின் உயிர்களைக் காவுகொள்ளும் ஆயுதபாணிகளின் அச்றுத்தல் நடவடிக்கைகளை தடுக்கும் எந்தவொரு ட்டரீதியான யெற்பாட்டையும் முன்னெடுக்கப்படாத நிலையில் அர படையினர் தொடர்ந்தும் மௌனம் ?திப்பது மட்டக்களப்பு அம்பாறை மாவட்ட பொதுமக்கள் மத்தியில் பெரும் ந்தேகங்களை தோற்றுவித்துள்ளன.

கடந்த இருவார காலப்பகுதியில் மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களில் 30 க்கும் மேற்பட்ட பொதுமக்கள் இனந்தெரியாத ஆயுதபாணிகளால் ஈவிரக்கமற்ற முறையில் படுகொலை ?ய்யப்பட்டுள்ளனர்.

ஒரே குடும்பத்தைச் ?ர்ந்த பலரும் ஆயுதபாணிகளின் ஈவிரக்கமற்ற படுகொலைச் ம்பவத்திற்குள்ளாக்கப்பட்டுள்ளனர். இதில் சிறுவர்கள் முதியவர்கள் உட்பட பலர் பழிவாங்கப்பட்டுள்ளனர்.

படுகொலைச் ம்பவங்கள் தொடர்ச்சியாக இடம்பெற்றுவரும் நிலையில் அதனை கட்டுப்படுத்துவதற்கான எந்தவொரு நடவடிக்கையும் முன்னெடுக்கப்படாத நிலையில் கடந்தவாரம் மட்டக்களப்பு மாவட்டத்தில் திடீரென்று உள்ளூர் ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டு தமிழ்ப்பிரதேங்களில் படையினர் பொலிஸார், விடே அதிரடிப்படையினர் தீவிர தேடுதல் நடவடிக்கைகளில் ஈடுபட்டனர்.

எவரும் எதிர்பார்க்காத நிலையில் திடீரென்று நடத்தப்பட்ட இந்த தேடுதல் நடவடிக்கைகளின் போது நூற்றுக்கும் மேற்பட்ட இளைஞர்கள் ந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு அவ்வப்பகுதி பொலிஸ் நிலையங்களுக்கு மேலதிக வி?ரணைகளுக்காக அழைத்துச் ?ல்லப்பட்டனர்.

இவ்வாறு சந்தேகத்தின் பேரில் வி?ரணைகளுக்கென்று அழைத்துச் செல்லப்பட்ட பலர் கடுமையான முறையில் தாக்கப்பட்டு தொடர்ந்தும் தடுத்துவைக்கப்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனைவிட தற்போது படையினருக்கு எதிரான தாக்குதல் ம்பவங்கள் முன்னைய காலங்களைப் போன்று கெரில்லா தாக்குதல் பாணியில் நடைபெற்று வருவதையும் அவதானிக்க முடிகின்றது.

கடந்த சிலதினங்களுக்கு முன்னர் களுவாஞ்சிக்குடி பொலிஸ் பிரிவிலுள்ள எருவில் பகுதியில் மோட்டார் ?க்கிள் பிரிவு கொமாண்டோ படையினர் மீது மேற்கொள்ளப்பட்ட கிளைமோர் தாக்குதலில் இரு படையினர் உயிரிழந்தனர்.

இச்ம்பவத்தையடுத்து அப்பகுதியில் பாரிய ற்றிவளைப்பு தேடுதல்கள் மேற்கொள்ளப்பட்டதுடன் பொதுமக்கள் மீதான கடுமையான தாக்குதல்களும் இடம்பெற்றுள்ளன.

இச்ம்பவத்திற்கு பின்னரான காலப்பகுதியில் களுவாஞ்சிக்கடி, களுதாவளை, தாழங்குடா, ஆரையம்பதி, ஒல்லிக்குளம், ஏறாவூர், ஆலையடிவேம்பு போன்ற பகுதிகளில் இரவு வேளைகளில் சென்ற ஆயுதபாணிகள் மேற்கொண்ட தாக்குதல் ம்பவங்களில் 30 க்கும் மேற்பட்டோர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.

இதனைவிட படையினரால் மேற்க்கொள்ளப்படும் பாரிய சுற்றிவளைப்பு தேடுதல் நடவடிக்கைகள் காரணமாக மட்டக்களப்பு மாவட்டத்தின் வாழ் பிரதேங்களின் இயல்பு நிலை மிகவும் மோமாக பாதிக்கப்பட்டு வருவதையும் காணக்கூடியதாகவுள்ளது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த ஒருவருட காலப்பகுதியில் மூன்று இந்துமத குருக்கள்மார் இனந்தெரியாத ஆயுதபாணிகளால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.

கிழக்கு மாகாணம் அரபடையினரால் முழுமையாக மீட்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டு ஜ?திபதி மகிந்த ராஜபக்ஷ தலைமையிலான அமைச்ர்கள் படை உயரதிகாரிகள் வாகரைப் பிரதேத்திற்கு சென்ற போது அங்கு ஜனாதிபதிக்கு மாலை அணிவித்து வரவேற்பதற்காக படையினரால் அழைத்துச் செல்லப்பட்ட இந்து மதகுரு ஒருவர் சில தினங்களில் அவரது வீட்டில் வைத்து இனந்தெரியாத ஆயுதபாணிகளால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

இறுதியாக கடந்த வாரம் மட்டக்களப்பு மாமாங்கம் முத்துமாரியம்மன் ஆலய குருக்கள் இனந்தெரியாத ஆயுதபாணிகளால் ட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.

சிறுவர்கள், வயோதிபர்கள், பெண்கள், மதகுருமார், அர சார்பற்ற தொண்டர் நிறுவன பிரதிநிதிகள் உட்பட பலர் கடந்த காலங்களில் கொல்லப்பட்டும் தொடர்ந்தும் அச்றுத்தப்படும் நிலைமை மேலோங்கிக் காணப்படுவதாகவே அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனைவிட மட்டக்களப்பு மாவட்டத்தின் படுவான்கரைப் பிரதேத்தில் கடந்த மார்ச் மாதப்பகுதியில் இடம்பெற்ற பாரிய இராணுவ நடவடிக்கைகளையடுத்து அப்பகுதியைச் சார்ந்த மார் ஒன்றரை இலட்த்துக்கும் மேற்பட்ட தமிழ் மக்கள் இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிகளுக்கு இடம்பெயர்ந்து பெரும் இன்னல்களை அனுபவித்த நிலையில் மார் மூன்று மாதகால இடைவெளியில் படிப்படியாக மீளக்குடியமர்த்தப்பட்டனர்.

மீளக்குடியேறும் மக்களுக்கு உரிய நிவாரணம், நஷ்டஈடுகள் வழங்கப்படுமென்று அரச தரப்பினரால் உறுதிமொழி வழங்கப்பட்டு வெளியுலகில் பாரிய பிரசாரம் அரசால் முன்னெடுக்கப்பட்டபோதும் மீளக்குடியேறிய மக்கள் தொடர்ந்தும் கைவிடப்பட்டு அநாதரவான நிலையிலேயேயுள்ளனர்.

படுவான்கரைப் பிரதேச மக்கள் விவசாயத்தையும் மீன்பிடித் தொழிலையும் கால்நடை வளர்ப்பையுமே முழுமையாக நம்பிவாழ்பவர்கள்.

அரசபடையினர் நிலப்பகுதியை கைப்பற்றிய பின்னர் பல பிரதேசங்கள் படைமுகாம்களாக மாற்றப்பட்டதையடுத்து இப்பகுதி மக்களின் ஜீவனோபாயத் தொழில்களான விவசாயம், கால்நடைவளர்ப்பு, மீன்பிடித் தொழில் என்பன முற்?க பாதிக்கப்பட்டுள்ளதாகவே அங்குள்ள மக்கள் தெரிவிக்கின்றனர்.

படைநடவடிக்கை காரணமாக பெரும்பாலான கால்நடைகள் அழிக்கப்பட்டும் காடுகளுக்கும் தப்பியோடிச் சென்றுள்ள நிலைமை காரணமாக கால்நடை வளர்ப்பில் ஈடுபட்டுள்ளோர் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதனைவிட உன்னிச்சைக்குளத்தை அண்மித்த பகுதியிலுள்ள மேச்சல் தரைநிலங்கள் படையினர் வசமுள்ள நிலையில் அப்பகுதியில் கால்நடை வளர்ப்புக்கும் தடைவிதிக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டங்களில் கடந்த மூன்று வருடங்களுக்கும் மேலாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகள் எவரும் கலந்துகொள்ள முடியாத நிலையில் மாவட்டத்தின் தமிழ்ப் பிரதேசங்கள் தொடர்ந்தும் புறக்கணிக்கப்பட்ட நிலையில் உள்ளமை கவனிக்கத்தக்கதோர் விடயமாகும்.

இதனைவிட போர் அனர்த்தங்களி?லும் கடல்கோல் அனர்த்தங்களி?லும் தமது சொந்த வாழ்விடங்களை இழந்துள்ள ஆயிரக்கணக்கான மக்கள் தற்போதும் நலன்புரிநிலையங்களில் அகதிகளாக வாழ்க்கை நடத்திக் கொண்டிருப்பதையும் காணக்கூடியதாகவுள்ளது.

இலங்கையில் ஆகக் கூடுதலான இளம் விதவைகளும் அநாதைச் சிறுவர்களும் மட்டக்களப்பு மாவட்டத்திலேயே உள்ளதாக தொண்டர் நிறுவனங்களின் அறிக்கைகள் மூலம் தெரியவருகிறது.

மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களில் சுமார் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இளம் விதவைகள் உள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் மூலம் அறியவருகிறது.

இளம் விதவைகளையும் அநாதைக் குழந்தைகளையும் ஆயிரக்கணக்கில் நிரப்பியுள்ள மட்டக்களப்பு மாவட்டத்தில் தற்போது தொடரும் கொலைச் சம்பவங்கள் மேலுமொரு பதற்றமான சூழ்நிலையை தோற்றுவித்துள்ளதையே காணக்கூடியதாகவுள்ளது.

அஜாதசத்ரு

Comments