தமிழக மக்களால் அனுப்பப்பட்டுள்ள நிவாரணப் பொருட்கள் வன்னிக்கு கொண்டு சென்று சேர்க்கப்பட்டுள்ளன.
கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களின் அரச செயலக களஞ்சியங்களில் அவற்றினை இறக்கும் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன.
தமிழக முதல்வர் கலைஞர் மு.கருணாநிதியின் வேண்டுகோளினை அடுத்து தமிழக மக்கள் தாமாக முன்வந்து ஈழத் தமிழர்களுக்கு நிதியையும் நிவாரணப் பொருட்களையும் வழங்கினர்.
அவ்வாறு வழங்கப்பட்ட நிவாரணப் பொருட்களில் முதற்கட்ட பொருட்களே வன்னிக்கு எடுத்துச் செல்லப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Comments