எப்படி வந்தார்கள்? எப்படி தாக்கினார்கள்

* மும்பைக்குள் ஊடுருவிய 15 ஆயுததாரிகளில் ஐவர் எங்கே போனார்கள்
இந்தியாவின் வர்த்தக தலைநகரமாக செல்வச் செழிப்புடன் விளங்கும் மும்பையில் உயிர்ச்தேங்கள் ஏற்படுவது ஒன்றும் புதிதல்ல. கடும்மழை, வெள்ளம், புயல் என்று இயற்கைப் பேரழிவுகள் ஆண்டுதோறும் இங்கு தலைகாட்டினாலும் குண்டுவெடிப்புஉயிர்ப்பலி சம்பவங்கள் கடந்த பதினைந்து ஆண்டுகளில் மூன்று தடவைகள் மும்பையை குலுக்கிவிட்டிருக்கிறது! 1993இல் 13 இடங்களில் ஏற்பட்ட குண்டு வெடிப்பில் 257 பேரும், 2003இல் இரு இடங்களில் 46 பேரும், 2006இல் ஏழு இடங்களில் 200 பேரும் ஏற்கனவே பலியாகி கடந்தவாரம் 12 இடங்களில் நடந்த துப்பாக்கிச்டு, எறிகுண்டு வீச்சில் 195 பேரும் பலியாகியுள்ளனர்.

மும்பையில் தாக்குதலை நேரில் பார்த்தவர்களினதும் தொலைக்காட்சியில் கண்கலங்கி இதயத்தைத் தொலைத்தவர்களினதும் உதிரத்தை உறையவைத்த அந்த மூவாயிரத்து அறுநூறு நிமிட திகில் அனுபவத்தின் பின்னணி மீது ஒரு பார்வை:

பாகிஸ்தானின் கராச்சி துறைமுகத்திலிருந்து கடந்த மாதம் இருபத்தொராம் திகதி புறப்பட்ட ஒரு ரக்குக் கப்பலில் பத்து இளைஞர்கள் ஏறுகின்றனர். இவர்கள் அனைவரும் பாகிஸ்தான் கட்டுப்பாட்டிலிருக்கும் காஷ்மீர், பஞ்?ப் மற்றும் கடல் பகுதியிலும் அணைக்கட்டுகளிலும் மூன்று மாதங்கள் கடற்போர், கமாண்டோ படைத்தாக்குதல் போன்ற துறைகளில் இராணுவப் பயிற்சி பெற்றவர்கள். இருபது முதல் இருபத்து ஐந்து வயதுக்குட்பட்ட தீவிரவாதிகள்.

ரக்குக் கப்பலில் "புரிந்துகொள்ளும் அடிப்படையில்' பயணம் மேற்கொண்ட இவர்கள், சிறிது தூரத்தில் ஒரு படகை பார்க்கின்றனர். அது ஒரு மீன்பிடிப் படகு. அதில் ?ல்ல திட்டமிட்டு கப்பலில் இருந்து மாறுகின்றனர். அந்தப் படகில் ஐந்து இந்திய மீனவர்கள் இருக்கின்றனர். ட டவென்று நான்கு மீனவர்களை ட்டுக் கொன்று உடல்களை கடலில் வீகின்றனர். ஒரு மீனவனின் வழிகாட்டலுடன் படகில் தொடர்கின்றனர்.

சிறிது தூரம் சென்றதும் அந்த மீனவனையும் கொன்று கடலில் போடுகின்றனர். படகு குஜராத் அருகே வந்துகொண்டிருக்கிறது. இந்திய கடலோர காவல்படையினரின் கழுகுக் கண்களில் படகு தென்பட்டதும் அதனை வழிமறித்து காவல்படை அதிகாரிகள் இருவர் ??தனை போடுகின்றனர். தீவிரவாதி ஒருவன் திடீரென ஒரு அதிகாரியை மடக்கி, கத்தியால் கழுத்தை அறுத்து கடலில் வீகின்?ன். மற்றைய அதிகாரியிடம் மும்பை செல்லும் கடல் வழியைக் கேட்கிறார்கள். அதே நேரம் மூன்று வி?ப்படகுகள் இவர்களது படகை நோக்கி வந்துகொண்டிருக்கின்றன. வி?ப் படகுகள் நெருங்கும் நேரத்தில் மற்றைய காவல்படை அதிகாரியும் கழுத்து அறுத்து கொலை?ய்யப்பட்டு அவர்கள் வந்த படகில் கிடத்தப்படுகி?ர். ஆயுதங்கள், வெடிமருந்துகள், கையெறிகுண்டுகள் வி?ப் படகுக்கு மாற்றப்பட்டு மும்பை புறப்படுகின்றனர்.

மும்பை தாஜ்ஹோட்டல் அரபிக் கடலில் இருந்து பார்த்தால் அரண்மனை போல் கம்பீரமான தோற்றத்தில் ஆடம்பரமாளிகையாக காட்சிதரும் தாஜ்; நூற்று ஐந்து ஆண்டு (1903) பழைமை கொண்டது. 565 படுக்கை அறைகள் உள்ளன.

மும்பைக்குள் நுழைந்து தந்திரமாக நடமாடிய அந்தப் பத்துப்பேரும் உயர் கல்வி பெறும் நோக்குடன் மும்பை வந்துள்ளோம் என்று "மாணவர்கள்' போர்வையில் பதிவு?ய்து தாஜ் ஹோட்டலின் 630ஆவது இலக்க அறையில் தங்குகின்றனர். இங்கு தங்கிய நான்கு நாட்களும் இரவு பகலாக பல புதிய உள்ளூர் நபர்களுடன் தித்திட்டம் தீட்டப்படுகிறது. மும்பை நகரின் முக்கிய ஹோட்டல்கள், தங்குமிடங்கள், ரயில் மற்றும் பொலிஸ் நிலையங்களின் வரைபடங்கள் கைமாறுகின்றன. பல நாட்களுக்கு பயன்படுத்தப்படும் உலர் உணவு வகைகள் ?மிக்கப்படுகின்றன. தாக்குதலுக்குள்ளாகும் ஒவ்வொரு இடத்தின் கட்டட அமைப்புகள், வழிவதிகள், மாற்றுப்பாதைகள் பற்றி அங்குலம், அங்குலமாக வரைபடங்கள் மூலமாக மேயப்படுகிறது. நேரம் குறிக்கப்பட்டு பொறுப்புகள் பகிர்ந்தளிக் கப்பட்டு தாக்குதல் திட்டம் பூர்த்தி பெறுகிறது.

26ஆம் திகதி புதன்கிழமை பொலிஸாருக்கு ??ந்தமான ஒரு குவாலிஸ் காரில் மூன்று உயர் பொலிஸ் அதிகாரிகளும் நான்கு பொலிஸாரும் ?ன்றுகொண்டிருக்கின்றனர். மும்பை நகரின் ஒரு மையப்பகுதியில் ?லை ஓர முள்ள மரத்தின் பின்?ல் மறைந்திருந்த இரண்டு தீவிரவாதிகள் அந்தப் பொலிஸ் கார் மீது தொடர் துப்பாக்கிப் பிரயோகம் ?ய்கின்றனர். கார் ஓரிடத்தில் போய் நின்றதும் தீவிரவாதிகள் இருவரும் ஓடிச் ?ன்று பார்க்கின்றனர். இரத்தவெள்ளம். ஏழு பேரினது உடல்களையும் வீதியில் வீசிவிட்டு காரை கடத்திச் செல்கின்றனர். போகும் வழியில் பாதாரிகள் மீது துப்பாக்கிச் டு, ஆங்காங்கே டலங்கள். இதனிடையே, காரின் ஒரு ரயர் வெடித்து நகரமுடியாமல் நிற்கிறது. தீவிரவாதிகள், அடுத்த வாகனம் தேடி ஓடி மறைய துப்பாக்கிச் ட்டில் காயமடைந்து மூச்? அடக்கி இறந்தவர் போல் நடித்து உயிர்தப்பிய ஒரு பொலிஸார், கட்டுப்பாட்டறைக்குத் தகவல் கொடுக்கிறார். பொலிஸார் உயர் ஆகியோர்கள். காரில் வந்த ஏனைய ஆறு பேரும் உயிரிழந்தனர்.

அன்றிரவு பத்து மணியளவில் மும்பை த்ரபதி சிவாஜி ரயில் நிலையத்தில் பயணிகள் மீது இரண்டு தீவிரவாதிகள் கண்மூடித்தனமாக துப்பாக்கிப் பிரயோகம் ?ய்கின்றனர். மரணபயத்தில் திடீரென தரையில் விழுந்து படுத்தவர்களில் யாரெல்லாம் தலையைத் தூக்கிப் பார்த்தார்களோ அவர்கள் தலைமீது குண்டுகள் ஊடுருவின. இதில் குழந்தைகள் ஏராளம். இங்கு மாண்டவர்கள் எண்ணிக்கை ஐம்பத்து ஐந்து. இதே இரவு; ஒபராய், நரிமன் இல்லம் உட்பட பதினொரு இடங்களில் பயங்கர தாக்குதல்களை தீவிரவாதிகள் தொடங்கினர்.

பத்து தீவிரவா திகளும் இரண்டு பேராகப் பிரிந்து தனிக்குழுவாக இந்திய இராணுவத்தினருடன் நேரடியாக விடிய விடிய மோதினர். ஹோட்டல் அறையில் தங்கியிருப்பதுபோல் நடித்து, அறையில் தீ வைத்தும், குண்டுகளை வெடிக்கச் ?ய்தும் இராணுவ நடவடிக்கைகளைத் தி? திருப்பினர். ஹோட்டல்களை தரைமட்டமாக்கி மாபெரும் உயிர்ச்தேத்தை ஏற்படுத்துவது அந்தப் பத்துப்பேரின் உயிர்த் துடிப்பாக இருந்தாலும்; இந்திய தேசிய பாதுகாப்பு படையினரின் தீவிர வேட்டை, மயோசிதம், துணிச்ல் தீவிரவாதிகளின் தித்திட்டத்தை முறியடித்தது. கடைசிநேரம்வரை மனித உயிர் குடித்த அஜ்மல் அமிர் இமான் (21 வயது) இராணுவத்தினரின் குண்டடிபட்டு இறந்தவன் போல நடித்தாலும் பொலிஸாரின் விழிப்பிலிருந்து தப்ப முடியவில்லை. பத்து தீவிரவாதிகளில் இவன் மட்டுமே உயிருடன் பிடிபட்டான். உண்மைகளையும் கக்கி?ன். (பொலிஸ் உயர் அதிகாரிகளையும், பாத ?ரிகளையும் ரயில் பிரயாணிகளையும் கொன்று குவித்து, தாஜ் ஹோட்டலில் நரபலி எடுத்தவன் அஜ்மல் தான்.)

""நான்காம் வகுப்புவரை படித்த எனக்கு, சின்ன வயதிலேயே தீவிரவாதத்தின் மீது பற்று ஏற்பட்டு, என்னை பயன்படுத்திக் கொண்டார்கள். பாகிஸ்தானில் பல இடங்களில் மூன்று மாத இராணுவப் பயிற்சி அளிக்கப்பட்டது. எங்கள் குழுவில் 35 பேர் இருந்தோம். இவர்களில் 15 பேர் மும்பை புறப்பட்டோம். எனது பொறுப்பில் 10 பேர் இருந்தனர். தாஜ் ஹோட்டலை முழுவதுமாகத் தகர்த்து குறைந்தது ஐயாயிரம் பொதுமக்களையாவது கொல்லுவதுதான் எங்கள் திட்டம். எங்களை, தொலைபேசி மூலமாக வழிநடத்திய தலைவர் அவ்வப்போது உத்தரவுகளை கொடுத்துக் கொண்டே இருப்பார். தாக்குதலை முடித்துவிட்டு கராச்சி திரும்ப திட்டமிட்டிருந்தோம். எனக்கு அளிக்கப்பட்ட பணியை ரியாக ?ய்து முடித்துவிட்டேன். எந்தவித வருத்தமும் எனக்கு இல்லை' என்று அஜ்மல் தெரிவித்துள்ளான்.

மும்பைக்குள் ஊடுருவிய 15 பேரில் மிகுதி ஐவர் அங்குதான் தங்கியிருப்பதாக பொலிஸார் கருதுவதால், பொதுமக்கள் பதற்றத்துடனேயே காணப்படுகின்றனர். தீவிரவாதிகளுக்கு அறைகள் பற்றிய தகவல்களை வெளியிட்டவர்களில் இரண்டு "கறுப்பு ஆடுகள்' தாஜில் வேலை பார்த்தவர்களாம்.

ஆக்ராவில் ஒரு தாஜ்மஹால்போல், மும்பையில் தாஜ்ஹோட்டல் கலைநுட்பங்களில் பெயர்பெற்றிருந்தது. 565 அறைகளில் நடந்த அறுபது மணிநேர ண்டையில் 529 அறைகள் தேமடைந்துள்ளன. பெரும்பாலானவர்கள், ?ப்பிட்டுக் கொண்டிருக்கையில் ட்டுக்கொல்லப்பட்டனர். அந்தச் ?ப்பாடு அறை முழுவதும் ஆண், பெண், குழந்தைகள் டலங்கள்தான். ஷேட், கால்ட்டை அணிந்திருந்த பல முஸ்லிம்பெண்கள் கொல்லப்பட, முக்காடு அணிந்திருந்த பல வெளிநாட்டுப் பெண்கள் உயிர்தப்பியிருந்தனர். மீண்டும் தாஜை நிமிர்த்த, ஐந்நூறுகோடி ரூபா தேவையுடன், கட்டிடம் முடிக்க ஒரு வருடம் வேண்டும்!

நடந்திருப்பது பத்துப்பேர் "ராஜ்யம்' அதுவும், பகல் இரவு கொடூரம் ! இவர்களின் அ?தாரண துணிச்ல், இந்தியப் பாதுகாப்புக்கே விடப்பட்ட நேரடிச் வாலாகும்! ரயில் நிலையத்தில் நின்று கொண்டு, பிரயாணிகளை இரண்டு பேர், குருவி டுவது போல் பொக்கியதும், காறில் ஏறிக்கொண்டு பாதாரிகளை கொன்று குவித் ததும், பெரிய ஹோட்டல்களின் பாதுகாப்பு அதிகாரிகளையும், மோப்ப நாயையும் அநா?யமாக ட்டுக்கொன்றதும் ?தாரண நிகழ்ச்சிகளா என்ன? மும்பையில் பார்க்கும் இடமெல்லாம் காட்சிதரும் பொலிஸார் அன்று எங்கு போ?ர்கள்? "ஓட்டை' அடிமட்டத்தில் அல்ல. இப்படியொரு பயங்கரம் மீண்டும் நிகழாதிருக்க இந்தியாவுக்கு நிலையான தினம் தினம் பாதுகாப்பு வருமுன் காப்போம் மட்டுமே துணைகொடுக்கும். அர இயந்திரம் வேகமாக ழல வேண்டும். இதற்கு, அரசியல் விளையாட்டும், தலைமாற்றமும், உயர்மட்ட பாதுகாப்பு அதிகாரிகளின் மெத்தனப் போக்கும் துணைபோயிருக்கிறது என்ற களங்கம் மீண்டும் வரக்கூடாது என்பதே இந்திய மக்களின் எதிர்பார்ப்பு.


Comments