அனைத்துலக மனித உரிமைகள் நாளில் நோர்வேவாழ் தமிழ் மக்களால் மாபெரும் கவனயீர்ப்பு நடவடிக்கை ஒன்று மேற்கொள்ளப்பட இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நாளை உலகின் 60வது மனித உரிமைகள் நாள் கொண்டாடப்படவுள்ள நிலையில், தமிழ் மக்கள் மீதான சிறீலங்கா அரசின் இனவழிப்பைக் கண்டித்தும், கொத்தணிக் குண்டு பாவனையை அனைத்துலகின் கவனத்திற்குக் கொண்டு செல்லும் வகையிலும் இந்த கவனயீர்ப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
நாளை புதன்கிழமை மாலை 6:00 மணியளவில் Rafto Fredssenter முன்பாக நடைபெறவுள்ள இந்தப் போராட்டத்தில் நோர்வேஜிய மக்களும் கலந்துகொள்ள இருப்பதால், தமிழ் மக்கள் பெருமளவில் கலந்துகொண்டு தமது தாயக மக்களின் அவலத்தை வெளிப்படுத்த வேண்டும் என அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக, ஐரோப்பிய தொலைக்காட்சியின் நோர்வே செய்தியாளர் தெரிவிக்கின்றார்.
நோர்வேயின் போருட் (FORUT), நோர்வே மக்கள் சபை (Norwegian People’s Aid) போன்ற மனிதநேய தொண்டு அமைப்புக்களிற்கு அழுத்தம் கொடுத்து தமிழர் தாயகத்தில் இருந்து வெளியேற்ற சிறீலங்கா அரசு தீர்மானித்துள்ளதையும் நோர்வேஜி மக்களிற்கு இதன்போது எடுத்துரைக்க முடியும் எனவும் எமது செய்தியாளர் சுட்டிக்காட்டுகின்றார்.
தமிழர் தாயகத்தில் பணியாற்றிவந்த அனைத்துலக மனிதநேய அமைப்புகளின் ஒன்றான நோர்வேஜிய மக்கள் சபை (Norwegian People's Aid) நாட்டைவிட்டு வெளியேற இருப்பதாக உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.
இது பற்றிய அறிவிப்பை இந்த மனிதநேய அமைப்பின் பொதுச்செயலர் பீற்றர் எய்டி (Petter Eide) இன்று செவ்வாய்க்கிழமை வெளியிட்டிருப்பதாக, கொழும்புச் செய்தியாளர் அறியத் தந்துள்ளார்.

இது பற்றிய அறிவிப்பை இந்த மனிதநேய அமைப்பின் பொதுச்செயலர் பீற்றர் எய்டி (Petter Eide) வெளியிட்டிருப்பதாக, ஐரோப்பிய தொலைக்காட்சியின் கொழும்புச் செய்தியாளர் அறியத் தந்துள்ளார்.
2009ஆம் ஆண்டு தமது பணிகள் அனைத்தும் முடிவுக்கு வருவதால், தமது அமைப்பு இலங்கையில் இருந்து வெளியேறும் முடிவை தமது தலைமையகம் இந்த வருட ஆரம்பத்தில் எடுத்திருந்ததாக அவர் கூறினார்.
கிழக்கில் அம்பாறையில் 640 வீடுகளைக்கட்டி அவற்றுக்கான நீர் வசதிகளை ஏற்படுத்தும் திட்டம் அடுத்த வருடம் நிறைவுக்கு வருகின்றது.
வடக்கில் கண்ணிவெடி அகற்றும் பணிகள் பாரிய நெருக்கடிகள் காரணமாக கடந்த ஒரு வருடமாக இடை நிறுத்தப்பட்டுள்ளன.
மேலும் 10 மாவட்டங்களில் முன்னெடுக்கப்பட்ட பணிகளும் நிறைவுக்கு வருகின்றன.
இவ்வாறான காரணங்களால் தாம் இந்த முடிவை எமுத்திருப்பதாக, நோர்வேஜிய மக்கள் சபையின் பொதுச்செயலர் பீற்றர் எய்டி (Petter Eide) தெரிவித்தார்.
இருப்பினும் சிறீலங்கா அரசின் அழுத்தம் காரணமாகவே நோர்வேஜிய மக்கள் சபை இந்த முடிவை எடுத்திருப்பதாக, எமது கொழும்புச் செய்தியாளர் சுட்டிக்காட்டுகின்றார்.
நோர்வேயின் போருட் (FORUT), நோர்வே மக்கள் சபை (Norwegian People’s Aid), நெதர்லாந்தின் சோஆ (ZOA) போன்ற அமைப்புக்களையே நாட்டைவிட்டு வெளியேற்ற அரசு முனைந்து வருவதாக, ஐரோப்பிய தொலைக்காட்சி கடந்த நவம்பர் 30ஆம் நாள் செய்தி வெளியிட்டிருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது.

Comments