மக்கள் பாதுகாப்பு வலயம்" மீது மீண்டும் பீரங்கித் தாக்குதல்: வன்னியில் இன்று 10 தமிழர்கள் படுகொலை; 26 சிறுவர்கள் உட்பட 114 பேர் படுகாயம்

வன்னிப்பகுதி மீது - பொதுமக்களை இலக்கு வைத்து - சிறிலங்கா படையினர் இன்று பரவலாக நடத்திய கடுமையான பீரங்கித் தாக்குதலில் 10 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன் 26 சிறுவர்கள் உட்பட 114 பேர் படுகாயமடைந்துள்ளனர். மக்கள் குடியிருப்புக்கள், மருத்துவமனைகள் என தாக்குதலுக்கு உள்ளான பல பகுதிகள் சிறிலங்கா அரசாங்கமே அறிவித்த "மக்கள் பாதுகாப்பு வலயங்கள்" என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

இன்று சனிக்கிழமை பிற்பகல் 4:00 மணியளவில் பொதுமக்கள் செறிவாக இடம்பெயர்ந்து கொண்டிருந்த - சிறிலங்கா அரசாங்கம் "மக்கள் பாதுகாப்பு வலயம்" என அறிவித்திருந்த - உடையார்கட்டு சந்தி பாடசாலையில் இயங்கும் கிளிநொச்சி மருத்துவமனையின் சிகிச்சை நிலையம் மீது சிறிலங்கா படைகள் கடும் பீரங்கித் தாக்குதலை நடத்தினர்.

இடம்பெயர்ந்து கொண்டிருந்த பொதுமக்களும், ஏற்கெனவே இடம்பெயர்ந்து வீதியோரத்தில் தங்கியிருந்த பொதுமக்களும் இந்த எறிகணைகளுக்கு இலக்காகினர்.





திடீரென - குறித்த இடத்தை நோக்கி சிறிலங்கா படையினர் ஏவிய 60-க்கும் அதிகமான எறிகணைகள் நகரையும் நகரை அண்டிய பகுதிகள் மீதும் வீழ்ந்து வெடித்தன. பொதுமக்கள் பாதுகாப்பு தேடிக்கொள்ளக்கூட அவகாசமில்லாத நிலையில் - அருளப்பு (வயது 70) உட்பட 03 பேர் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 12 சிறுவர்கள் உட்பட 37 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

த.ராகுலன் (வயது 33)

டிலக்சனா (வயது 07)

அருமைநாயகம் (வயது 51)

அ. புஸ்பராணி (வயது 53)

செ.போல்டிசன் (வயது 07)

மேரி கிறிஸ்தோபர் (வயது 42)

ந.தர்மலிங்கம் (வயது 61)

த.மகேஸ்வரி (வயது 42)

க.பாலேஸ்வரன் (வயது 44)

வே.இராஜேந்திரம் (வயது 60)

ச.இந்துஜன் (வயது 11)

நி.டிசைனி (வயது 07)

ஆ.தனபாலசிங்கம் (வயது 65)

சி.சின்னத்தம்பி (வயது 66)

ம.றஞ்சன் (வயது 45)

ச.சீனிவாசகம் (வயது 70)

ஜெ.தினுசன் (வயது 13)

செ.கனியன் (வயது 42)

சி.தங்கராசா (வயது 56)

சி.அரிகஜன் (வயது 15)

பொ.கணேசநாதன் (வயது 30)

சி.டினோ (வயது 09)

ச.ரவீந்திரன் (வயது 33)

மேரி அனிற்றா (வயது 19)

ஞா.தர்வின் (வயது 26)

சி.மகரூபன் (வயது 34)

பாலேஸ்வரி (வயது 28)

யோ.சிந்துஜன் (வயது 13)

யோ.விதுசன் (வயது 09)

கி.னுல்சா (வயது 09)

யோகராணி (வயது 46)

த.ரூபன் (வயது 16)

சறோஜாதேவி (வயது 44)

2 வயது குழந்தை டிசாந்

சசிகலா (வயது 26)

அஜந்தா (வயது 16)

10 வயது மதிக்கத்தக்க சிறுமி ஆகியோர் உட்பட 37 பேர் படுகாயமடைந்துள்ளனர்.





உடையார்கட்டு பிற்பகல் 5:10

சிறிலங்கா அரசாங்கம் இந்த பகுதியை "மக்கள் பாதுகாப்பு வலயம்" என அறிவித்ததால் இடம்பெயர்ந்த மக்கள் பாடசாலைகளிலும் பொது இடங்களிலும் செறிவாகத் தங்கியிருந்த போது - இன்று மாலை 5:10 நிமிடமளவில் உடையார்கட்டு வீதிக்கு கிழக்காக உள்ள பகுதியில் இடம்பெயர்ந்த பொதுமக்கள் வாழ்விடம் மீது சிறிலங்கா படையினர் மீண்டும் பீரங்கித் தாக்குதல் நடத்தினர்.

அத்துடன் சுதந்திரபுரம் பகுதி மக்கள் வாழ்விடம் மீதும் படையினர் எறிகணைத் தாக்குதலை நடத்தினர்.

இதில் இடம்பெயர்ந்த 4 பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 12 சிறுவர்கள் உட்பட 30 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

கொல்லப்பட்டவர்களில் டிமல் டொரினா (வயது 32) என்பவர் அடையாளம் காணப்பட்டுள்ளார்.

மகேந்திரன் (வயது 54)

ப.சாந்தி (வயது 36)

தே.சாந்தா (வயது 52)

ஆ.சாந்தி (வயது 38)

செ.விஜயராஜ் (வயது 18)

வீ.சசிக்குமார் (வயது 19)

ஆ.சுதர்சன் (வயது 14)

வின்செற் (வயது 32)

நா.மதிவதனி (வயது 37)

த.மகேஸ்வரி (வயது 42)

க.மேனகா (வயது 14)

ஜெ.சியாமினி (வயது 14)

பா.மேரிகௌசல்யா (வயது 13)

சி.அன்னலக்சுமி (வயது 25)

ந.புண்ணியவதி (வயது 42)

ப.சாந்தராஜ் (வயது 14)

ஆ.அனுசன் (வயது 11)

க.சிவநாதன் (வயது 47)

குழந்தை ச.மதுசன்

குழந்தை கொல்வின் மயூரா

டி.டிலக்ஸ் (வயது 09)

டி.டிலாஸ் (வயது 05)

டி.டிலக்சுமி (வயது 08)

2 வயது குழந்தை அ.டொல்பின்கான்

சூட்டி (வயது 25)

கோ.நடராசா (வயது 43)

மு.அமிர்தவல்லி (வயது 61)

நா.மோகராசா (வயது 28)

சு.மகேஸ்வரி (வயது 21)

ஆகியோர் காயமடைந்துள்ளனர்.





முல்லைத்தீவு - விசுவமடு - தேராவில்

முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள விசுவமடு - தேராவில் பகுதியில் இன்று காலை 10.00 மணிக்கு சிறிலங்கா படையினர் நடத்திய எறிகணைத் தாக்குதலில் 3 பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 30 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

இ.இந்திரன் (வயது 24)

க.கமலாதேவி (வயது 40)

75 வயது மதிக்கத்தக்க இன்னொருவர் ஆகியோர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.





முல்லைத்தீவு - வள்ளிபுனம்

முல்லைத்தீவு வள்ளிபுனத்தில் பொதுமருத்துவமனை இயங்கும் வளாகத்தின் மீது இன்று காலை 10:00 மணிக்கு சிறிலங்கா படையினர் நடத்திய கடும் பீரங்கித் தாக்குதலை இன்று நடத்தினர்.

நேற்று முன்நாளும் இதே போன்று சிறிலங்கா படையினர் எறிகணைத் தாக்குதலை நடத்தியிருந்த போது அந்த மருத்துவமனையை வேறு இடத்திற்கு மாற்றுவது தொடர்பாக மருத்துவமனை நிர்வாகம் முடிவெடுத்தது.

ஆனால், அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கம் பொது மருத்துவமனையை அதே இடத்தில் இயக்குவதற்கான உறுதிப்பாட்டினை சிறிலங்கா அரசாங்கத்திடம் இருந்து பெற்றுத் தருவதாக உறுதியளித்திருந்த சூழலில் மருத்துமனையில் சிறிலங்காப் படையினரின் தாக்குதல்களினால் படுகாயமடையும் பொதுமக்களுக்கான சிகிச்சை வழங்கும் பணிகள் நடைபெற்று வந்தன.

இந்நிலையில் இந்த மருத்துவமனை வளாகத்தின் மீது இன்று மீண்டும் நடத்தப்பட்ட தாக்குதலில் 2 பொதுமக்கள் படுகாயமடைந்துள்ளனர்.

க.நாகமணி (வயது 59)

சி.சந்திரராசா (வயது 26)

ஆகியோர் படுகாயமடைந்துள்ளனர்.

முல்லைத்தீவு - வலைஞர்மடம்

முல்லைத்தீவு வலைஞர்மடம் பகுதியில் இடம்பெயர்ந்தோர் குடியிருப்புக்கள் மீது சிறிலங்கா படையினர் இன்று பிற்பகல் 2:00 மணிக்கு நடத்திய கடுமையான எறிகணைத் தாக்குதலில் 5 சிறுவர்கள் உட்பட 8 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

வ.சிலம்பரசன் (வயது 13)

இ.திலக்சினி (வயது 21)

சி.கெங்கேஸ்வரி (வயது 29)

சு.ஜெஸ்வனி (வயது 16)

பெ.திவாகரன் (வயது 15)

செ.லோஜினி (வயது 11)

சி.சிவரஞ்சனி (வயது 22)

சு.சுவிந்தன் (வயது 12)

ஆகியோர் படுகாயமடைந்துள்ளனர்.

முல்லைத்தீவு - முள்ளிவாய்க்கால்

முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள முள்ளிவாய்க்கால் மக்கள் குடியிருப்புக்கள் மீது இன்று காலை 10:00 மணிக்கு சிறிலங்கா படையினர் நடத்திய எறிகணைத் தாக்குதலில் 3 பொதுமக்கள் படுகாயமடைந்துள்ளனர்.

ஏ.ஏபிரகாம் (வயது 47)

சி.இளஞ்சிங்கம் (வயது 38)

த.சுவர்ணன் (வயது 24)

ஆகியோர் படுகாயமடைந்துள்ளனர்.


Comments