முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள புதுக்குடியிருப்பு பகுதியில் தமிழர் திருநாளான பொங்கல் நாளில் பொதுமக்கள் குடியிருப்புக்கள் மீது சிறிலங்கா படையினர் நடத்திய எறிகணைத் தாக்குதலில் 13 அப்பாவி பொதுமக்கள் காயமடைந்துள்ளனர்.
புதுக்குடியிருப்பு கைவேலி பகுதியில் உள்ள மக்கள் குடியிருப்புக்கள் மீது இன்று புதன்கிழமை பிற்பகல் 12:30 நிமிடமளவில் சிறிலங்கா படையினர் எறிகணைத் தாக்குதல் நடத்தினர்.
க.எலிபெத் (வயது 63)
ஞானம் (வயது 34)
த.தங்கச்செல்வன் (வயது 42)
கு.மோகன்குமார் (வயது 33)
சா.மஞ்சுளா (வயது 28)
தா. நாகரத்தினம் (வயது 46)
செ.சொக்கன் (வயது 34)
சி. தவமலர் (வயது 57)
ல.அமரேசன் (வயது 42)
சு.லக்சிகா (வயது 31)
செ.றொக்சன் (வயது 34)
சு.அருள்வரதன் (வயது 40)
செ.சிவஞானம் (வயது 39)
ஆகியோர் காயமடைந்த நிலையில் புதுக்குடியிருப்பு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
Comments