(2ம் இணைப்பு)வன்னியில் சிறிலங்கா படையினர் எறிகணைத் தாக்குதல்: கைக்குழந்தை உட்பட 6 அப்பாவி பொதுமக்கள் படுகொலை; 29 பேர் படுகாயம்

கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள வட்டக்கச்சி மற்றும் தருமபுரம் பகுதிகளில் சிறிலங்கா படையினர் நடத்திய எறிகணைத் தாக்குதல்களில் கைக்குழந்தை உட்பட 6 அப்பாவி பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் மேலும் 9 சிறுவர்கள் உட்பட 29 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

வட்டக்கச்சி பகுதியில் இடம்பெயர்ந்து சென்று கொண்டிருந்த பொதுமக்கள் மீது இன்று வியாழக்கிழமை காலை சிறிலங்கா படையினர் தொடர் எறிகணைத் தாக்குதலை நடத்தினர்.

இதில் 11 மாத கைக்குழந்தை உட்பட 3 அப்பாவி பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளதுடன் மேலும் 4 சிறுவர்கள் உட்பட 13 பேர் படுகாயமடைந்துள்ளனர்.





வட்டக்கச்சி மக்கள் குடியிருப்புக்களை இலக்கு வைத்து இன்று காலை சிறிலங்கா படையினர் தொடர் எறிகணைத் தாக்குதலை நடத்தினர்.

கல்மடு நகர் மக்கள் குடியிருப்புக்கள் மீது சிறிலங்கா படையினரின் எறிகணைகள் வீழ்ந்து வெடித்தன.

11 மாத குழந்தையான சுதாகரன் சுடர்நிலவன்

கே.பிரதீபா (வயது 20)

கமலா (வயது 56)

அகியோர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.

மா.ஜெகராச் (வயது 16)

அகவை (வயது 06)

அன்ரனி (வயது 16)

சசி (வயது 25)

அன்ரனி லக்சுமி (வயது 23)

கலிஸ்ரன் (வயது 15)

ரேவதி (வயது 36)

பச்சையம்மா (வயது 66)

விஜயன் உசா (வயது 30)

ரமேஸ் (வயது 22)

சுகந்தினி (வயது 38)

ஆகியோர் படுகாயமடைந்துள்ளனர். காயமடைந்த இருவரின் பெயர் விவரம் இதுவரை கிடைக்கப்பெறவில்லை.







தருமபுரம் மருத்துவமனைக்கு அருகான மக்கள் குடியிருப்புக்கள் மீது இன்று பிற்பகல் 1:00 மணியளவில் சிறிலங்கா படையினர் நடத்திய எறிகணைத் தாக்குதலில் 3 அப்பாவி பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் மேலும் 5 சிறுவர்கள் உட்பட 16 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

தருமபுரம் மருத்துவமனைக்கு அருகில் இடம்பெயர்ந்த மக்கள் குடியிருப்பை இலக்கு வைத்து சிறிலங்கா படையினர் நடத்திய எறிகணைத் தாக்குதலில் இடம்பெயர்ந்தவர்கள் தங்கியிருந்த வீட்டின் முன்பாக எறிகணை வீழ்ந்து வெடித்தது.

இப்பகுதிக்கு அருகில் தருமபுரம் மகாவித்தியாலயத்தில் இடம்பெயர்ந்த பாடசாலைகள் இயங்கிக்கொண்டிருந்த நிலையில் மாணவர்கள் அவலப்பட்டு சிதறி ஓடினர்.

பாடசாலைக்கு மிக அருகிலும் எறிகணைகள் வீழ்ந்து வெடித்துள்ளன.

பாலநாயகம் நாச்சிப்பிள்ளை (வயது 78)

யோகன் தர்சா (வயது 19)

காண்டீபன் ஆகியோர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.

முருகேசு சின்னராஜா (வயது 51)

குலவீரசிங்கம் குலதீசன் (வயது 27)

சின்னராஜா ஜெகதீசன் (வயது 16)

சர்வேஸ்வரன் கவிதா (வயது 35)

மதிவண்ணன் மிருனிசா (வயது 12)

இராமச்சந்திரன் துளசிகா (வயது 12)

இராமச்சந்திரன் குமணன் (வயது 30)

சுப்பிரமணியம் சிவபரன் (வயது 26)

கார்திகேசு விஜேசூரியா (வயது 27)

அருள்நேசராஜா அனுசன் (வயது 13)

ஜெயதர்சன் (வயது 15)

கணபதிப்பிள்ளை பூபாலசிங்கம் (வயது 67)

செல்லையா லீலாவதி (வயது 83)

மத்தியூஸ் அந்தோனியம்மா (வயது 62)

ஆகியோர் படுகாயமடைந்துள்ளனர். இருவரின் பெயர் விவரம் இதுவரை கிடைக்கப்பெறவில்லை.






வட்டக்கச்சி மக்கள் குடியிருப்புக்கள் மீது சிறிலங்கா படையினர் நேற்று நடத்திய எறிகணைத் தாக்குதல்களில் 3 அப்பாவி பொதுமக்கள் படுகாயமடைந்துள்ளனர்.

படுகாயமடைந்தவர்கள் தருமபுரம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும், சிறிலங்கா படையினரின் எறிகணைத் தாக்குதலால் இடம்பெயர்ந்து சென்று கொண்டிருந்த வேளையில் பதற்றத்தில் நீரில் விழுந்த ஒரு வயது குழந்தை பரிதாபகரமாக உயிரிழந்துள்ளது.

வட்டக்கச்சி பகுதியில் இருந்து இடம்பெயர்ந்து கொண்டிருந்த குடும்பம் ஒன்று தருமபுரம் வீதியில் பயணித்துக் கொண்டிருந்த போது சிறிலங்கா படையினரின் எறிகணைகள் வீழ்ந்து வெடித்தன.

இதனால் பதற்றமடைந்த அந்த ஒரு வயது குழந்தை நீரில் தவறி விழுந்து உயிரிழந்துள்ளது.

புதினம்



Comments