புதுக்குடியிருப்பு மருத்துவமனை மற்றும் பொதுமக்கள் குடியிருப்புக்கள் மீது சிறிலங்கா படையினர் எறிகணைத் தாக்குதல்: 2 பேர் பலி; 9 பேர் படுகாயம்

முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள புதுக்குடியிருப்பு மருத்துவமனை மற்றும் பொதுமக்கள் குடியிருப்புக்கள் மீது சிறிலங்கா படையினர் எறிகணைத் தாக்குதல்களில் 2 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன் 9 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

புதுக்குடியிருப்பு மருத்துவமனை மீது இன்று செவ்வாய்க்கிழமை காலை 10:00 மணியளவில் சிறிலங்கா படையினர் எறிகணைத் தாக்குதல் நடத்தினர்.

இதில் புதுக்குடியிருப்பு ஆனந்தபுரத்தைச் சேர்ந்த விஜயரட்ணம் வத்சலா (வயது 38) என்பவர் கொல்லப்பட்டார்.

புதுக்குடியிருப்பு வேணாவிலைச் சேர்ந்த முருகையா மாரிமுத்து சிவலிங்கம் (வயது 61) மற்றும் புதுக்குடியிருப்பு கோம்பாவில் 2 ஆம் வட்டாரத்தைச் சேர்ந்த ஆனந்தகுமார் மனோன்மணி (வயது 26) ஆகியோர் உட்பட ஆறு பேர் காயமடைந்தனர். ஏனைய நான்கு பேரின் பெயர் விவரம் இதுவரை கிடைக்கப்பெறவில்லை.





புதுக்குடியிருப்பு மந்துவில் பொதுமக்கள் குடியிருப்புக்கள் மீது இன்று பிற்பகல் 12:30 நிமிடமளவில் சிறிலங்கா படையினர் நடத்திய எறிகணைத் தாக்குதலில் அப்பாவி பொதுமகன் கொல்லப்படுள்ளதுடன் 3 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

செல்வநாயகம் சீராளன் (வயது 28) என்பவர் கொல்லப்பட்டுள்ளார்.

கந்தையா சாந்தகுரு (வயது 56), கிருஸ்ணபிள்ளை விஜயன் (வயது 30) மற்றும் பரமகுரு பிரதீபன் (வயது 23) ஆகியோர் படுகாயமடைந்துள்ளனர்.


Comments