முல்லைத்தீவு கடற்பரப்பில் கடற்புலிகளால் 2 அதிவேக தாக்குதல் படகுகள் அழிப்பு

முல்லைத்தீவு கடற்பரப்பில் சிறிலங்கா கடற்படையினருக்கும் கடற்புலிகளுக்கும் இடையில் இன்று நடைபெற்ற கடுமையான கடற்சண்டையில் சிறிலங்கா கடற்படையின் "அரோ" வேகத்தாக்குதல் படகுகள் இரண்டு கடற்புலிகளால் தாக்கி மூழ்கடிக்கப்பட்டுள்ளன. முல்லைத்தீவு கடற்பரப்பில் இன்று வெள்ளிக்கிழமை முற்பகல் 10:00 மணியளவில் சிறிலங்கா கடற்படையின் 15 "அரோ" கொமாண்டோப் படகுகள், "டோரா" வேகத் தாக்குதல் பீரங்கிப் படகுகள் என்பன சுற்று நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த வேளை - அவர்கள் மீது கடற்புலிகளின் தாக்குதல் படகு அணி தாக்குதலை தொடுத்தது.

கடற்புலிகளின் இந்த கடல் வழி மறிப்புத் தாக்குதலில் - கடற்படையினரின் இரு "அரோ" படகுகள் தாக்கி மூழ்கடிக்கப்பட்டன.

கடற்புலிகளின் தாக்குதலுக்கு ஈடுகொடுக்க முடியாத நிலையில் சிறிலங்கா கடற்படையினர் பின்வாங்கிச் சென்றுவிட்டனர்.

எந்தவித இழப்புக்களும் இன்றி கடற்புலிகளின் தாக்குதல் அணி தளம் திரும்பியது.

இதேவேளையில், சுண்டிக்குளம் கடற்பரப்பில் இன்று அதிகாலை 3:00 மணியளவில் சிறிலங்கா கடற்படையினருடனான இன்னொரு மோதலில் இரண்டு கடற்கரும்புலிகள் வீரச்சாவடைந்துள்ளனர்.


Comments