புதுக்குடியிருப்பில் சிறிலங்கா படையினர் எறிகணைத் தாக்குதல்: 5 அப்பாவி பொதுமக்கள் படுகொலை: 7 பேர் காயம்
முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள புதுக்குடியிருப்பு பகுதியில் உள்ள பொதுமக்கள் குடியிருப்பை நோக்கி சிறிலங்கா படையினர் நடத்திய எறிகணைத் தாக்குதலில் 5 அப்பாவி பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளதுடன் 7 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
புதுக்குடியிருப்பில் உள்ள கைவேலி, கோம்பாவில் மற்றும் விசுவமடு பகுதிகளில் உள்ள பொதுமக்கள் குடியிருப்புக்கள் மீது இன்று வெள்ளிக்கிழமை சிறிலங்கா படையினர் எறிகணைத் தாக்குதலை நடத்தினர்.
இதில் 5 பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளதுடன் 7 பேர் படுகாயமடைந்துள்ளனா்.
மோகனதாஸ் (வயது 25)
இராமநாதன் குமரன் (வயது 30)
தம்பையா யோகேஸ்வரன் (வயது 50)
யோகேஸ்வரன் கஜேந்தினி (வயது 14)
உள்ளிட்ட 5 பேர் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் ஒருவரின் பெயர் விவரம் இதுவரை கிடைக்கப்பெறவில்லை.
யோகேஸ்வரன் பிரசாத் (வயது 08)
பாபுகரன் ஜெயந்தினி (வயது 33)
ஞானரூபன் வசந்தகுமார் (வயது 30)
நந்தகுமார் தபோதினி (வயது 30)
உள்ளிட்ட 7 பேர் காயமடைந்துள்ளனர். மேலும் 3 பேரின் பெயர் விவரம் இதுவரை கிடைக்கப்பெறவில்லை.
காயமடைந்த அனைவரும் புதுக்குடியிருப்பு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
Comments