"இருட்டுமடு பகுதி மக்கள் பாதுகாப்பு வலயம்" மீதும் சிறிலங்கா படையினர் அகோர எறிகணைத் தாக்குதல்: சைவக்குரு உட்பட 5 பேர் பலி; 83 பேர் படுகாயம்

வன்னி மக்கள் பாதுகாப்பாய் போய் ஒதுங்குவதற்கு சிறிலங்கா அரசாங்கம் அறிவித்திருந்த இன்னொரு மக்கள் பாதுகாப்பு வலயமான "இருட்டுமடு மக்கள் பாதுகாப்பு வலயம்", தேராவில், மயில்வாகனம், வள்ளிபுனம், மற்றும் தேவிபுரம் பகுதிகள் மீது சிறிலங்கா படையினர் நடத்திய எறிகணைத் தாக்குதல்களில் 5 பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 83 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

கொல்லப்பட்டவர்களில் 10 வயது சிறுமியும் படுகாயமடைந்தவர்களில் 16 சிறுவர்களும் அடங்குவர்.

விசுவமடு மயில்வாகனபுரம் இடம்பெயர்ந்த மக்கள் குடியிருப்புக்கள் மீது இன்று காலை 6:00 மணியளவில் சிறிலங்கா படையினர் நடத்திய நடத்திய எறிகணைத் தாக்குதலில் சைவக்கோவில் குரு ஒருவர் கொல்லப்பட்டுள்ளதுடன் 4 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

கொல்லப்பட்டவர், சிவம் குருக்கள் (வயது 56) என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

இவரின் மகன்

குககரன் (வயது 17)

லெம்பேட் (வயது 46)

ரவிச்சந்திரன் (வயது 46)

மரியம்மா (வயது 36)

ஆகியோர் படுகாயமடைந்துள்ளனர்.

இவர்கள் அனைவரும் மூங்கிலாறில் இயங்கும் மல்லாவி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மூங்கிலாறில் இயங்கும் கிளிநொச்சி அரச செயலகச் சுற்றயலில் நேற்று இரவு 11:00 மணியளவில் சிறிலங்கா படையினர் நடத்திய எறிகணைத் தாக்குதலில் சிறுமி ஒருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 8 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

கொல்லப்பட்ட சிறுமி கே.நிரோசா (வயது 10) என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

கிராம அலுவலரான

ப.சபாரத்தினம் (வயது 48)

கேதீஸ்வரன் (வயது 51)

கே.துஸ்யந்தன் (வயது 07)

ஆ.பிரசாத் (வயது 14)

கா.தேவி (வயது 50)

இசையரசி (வயது 11)

இசைவாணி (வயது 10)

இசையரசன் (வயது 07)

ஆகியோர் படுகாயமடைந்துள்ளனர்.

இவர்கள் அனைவரும் மல்லாவி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் புதுக்குடியிருப்பு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.

உடையார்கட்டு பகுதி இருட்டுமடு இடம்பெயர்ந்தோர் பொதுமக்கள் குடியிருப்புக்கள் மீது இன்று காலை 10:45 நிமிடத்துக்கும் முற்பகல் 11:00 மணிக்கும் சிறிலங்கா படையினர் எறிகணைத் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இப்பகுதி சிறிலங்கா அரசாங்கத்தால் பாதுகாப்பு வலயம் என பிரகடனப்படுத்தப்பட்டிருந்த நிலையில் அவர்களின் படையினர் ஏவிய எறிகணைகள் வீழ்ந்து வெடித்துள்ளன.

இதில் முதியவர் ஒருவர் கொல்லப்பட்டுள்ளதுடன் 34 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

கொல்லப்பட்ட முதியவர் இதுவரை அடையாளம் காணப்படவில்லை.

புஸ்பவதி (வயது 65)

பெருமாள் குருக்கள் (வயது 71)

க.கௌசிதா (வயது 20)

க.பாலபாஸ்கரன் (வயது 42)

கனகாம்பிகை (வயது 30)

விஜய் (வயது 12)

விசித்திரா (வயது 10)

விதுசன் (வயது 04)

த.பிரியராசா (வயது 30)

ச.விக்கினராசா (வயது 52)

வி.செனமிதா (வயது 17)

கௌதமி (வயது 17)

கமலாம்பிகை (வயது 45)

யாழ்நிலவன் (வயது 09)

லக்சுமி (வயது 60)

நேயநாதன் (வயது 24)

கிரி (வயது 35)

வடிவழகன் (வயது 21)

மதிவாணன் (வயது 28)

தயாளினி (வயது 19)

புஸ்பாதேவி (வயது 65)

யோகலிங்கம் (வயது 42)

உத்தமணி (வயது 50)

யாழ்இன்பன் (வயது 19)

கிரிதரன் (வயது 26)

யாழ் அன்பன் (வயது 26)

லதீபன் (வயது 20)

சத்தியசொரூபன் (வயது 29)

ஈழவன் (வயது 19)

கிருபன் (வயது 12)

மதியழகன் (வயது 22)

தம்பிராசா (வயது 30)

பிரதீபன் (வயது 23)

அலெக்சன் (வயது 13)

ஆகியோர் படுகாயமடைந்தனர்.

இவர்கள் அனைவரும் உடையார்கட்டில் இயங்கிவரும் நட்டாங்கண்டல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

வள்ளிபுனம்-தேவிபுரம்-பகுதிகளில் இன்று சிறிலங்கா படையினர் நடத்திய எறிகணைத் தாக்குதலில் 2 பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 35 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

இவர்களின் உடலங்கள் புதுக்குடியிருப்பு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளன.

இதில் ஒருவர் துரைசிங்கம் பரந்தாமன் என அடையாளம் காணப்பட்டுள்ளார். மற்றையவர் இதுவரை அடையாளம் காணப்படவில்லை.

வீரபாகு கணபதிப்பிள்ளை (வயது 72)

நகுலேஸ்வரன் ஜெயக்குமாரி (வயது 40)

பாஸ்கரன் சாந்தகுமாரி (வயது 40)

வீரதீரன் தனுசாலினி (வயது 03)

ஆசைப்பிள்ளை டிலக்சி (வயது 11)

அனடருகரமின்சன் (வயது 08)

இ.பிரபாதேவி (வயது 50)

வி.பிரசாத் (வயது 16)

நிருசன் (வயது 12)

அருந்ததி (வயது 42)

அனுசா (வயது 03)

ஜெயக்குமாரி (வயது 40)

தனபாலன் (வயது 32)

பா.சாந்தகுமாரி (வயது 37)

தி.சோபனா (வயது 28)

தி.தமிழ்வேந்தன் (வயது 24)

கு.ஜெயக்குமாரி (வயது 30)

பா.ரதி (வயது 42)

ப.பற்றிக்சன் (வயது 29)

ஜெனிபட் (வயது 32)

செ.செல்வரூபன் (வயது 28)

கு.ஜெகதீஸ்வரன் (வயது 42)

நடராசா நரேந்திரன் (வயது 22)

ஜெகநாதன் சரஸ்வதி (வயது 47)

பரமலிங்கம் லோசினி (வயது 40)

கனகலிங்கம் மதுசா (வயது 14)

நல்லதம்பி பரமேஸ்வரன் (வயது 30)

அ.சசிக்குமார் (வயது 30)

நிதர்சன் (வயது 19)

கா.விசுவலிங்கம் (வயது 52)

நாகலிங்கம் நடராசா (வயது 56)

நடராசா நாகேந்திரன் (வயது 22)

நல்லம்மா (வயது 71)

உலகேஸ்வரி (வயது 50)

ப.குலராணி (வயது 50)

ஆகியோர் படுகாயமடைந்துள்ளனர்.

இவர்கள் அனைவரும் புதுக்குடியிருப்பு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

உடையார்கட்டுப் பகுதியில் இன்று மாலை 6:00 மணியளவில் சிறிலங்கா படையினர் நடத்திய எறிகணைத் தாக்குதலில் 2 பொதுமக்கள் படுகாயமடைந்துள்ளனர்.

பானுகோபன் (வயது 21)

போல் ரஜீவ் தமிழினி (வயது 23)

ஆகியோர் படுகாயமடைந்துள்ளனர்.

தொடர்புபட்ட செய்திகள்:

Ø முல்லைத்தீவு மருத்துவமனை மற்றும் "புதுக்குடியிருப்பு மக்கள் பாதுகாப்பு வலயம்" மீது சிறிலங்கா படையினர் இன்று அகோர பீரங்கித் தாக்குதல்: 22 பேர் பலி; 106 பேர் படுகாயம்

Ø வன்னியில் சிறிலங்கா அரங்கேற்றும் மெதுவான தமிழினப் படுகொலை: ஓரே வாரத்தில் 66 பேர் படுகொலை; 223 பேர் படுகாயம்




Comments