தருமபுரத்தில் மும்முனைகளில் முன்நகர்ந்த சிறிலங்கா படையினர் மீது தாக்குதல்: கவச பீரங்கி ஊர்தியை களத்தில் இறக்கினர் புலிகள்: 51 படையினர் பலி; 150 பேர் க


கிளிநொச்சி மாவட்டம் தருமபுரத்தில் இருந்து மும்முனைகளில் சிறிலங்கா படையினர் மேற்கொண்ட பாரிய முன்நகர்வுகளுக்கு எதிராக தமிழீழ விடுதலைப் புலிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில் 51 படையினர் கொல்லப்பட்டுள்ளதுடன் 150 பேர் காயமடைந்துள்ளனர். இம் மோதலின் போது தமது கவச பீரங்கி ஊர்தியையும் விடுதலைப் புலிகள் பாவித்துள்ளனர்.

இது தொடர்பாக தமிழீழ விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளதாவது:

தருமபுரம் பகுதியில் இருந்து இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை 12:00 மணியளவில் சிறிலங்கா படையினரின் சிறப்பு தாக்குதல் கொமாண்டோக்கள் கனரக சூட்டாதரவுடன் மும்முனைகளில் முன்நகர்ந்தனர்.

இவர்கள் மீது விடுதலைப் புலிகள் கடுமையான தாக்குதல் நடத்தினர். இன்று பிற்பகல் 2:00 மணியளவில் படையினரின் நகர்வுகள் யாவும் விடுதலைப் புலிகளால் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளன.


[படம்: விடுதலைப் புலிகள்]


[படம்: விடுதலைப் புலிகள்]


[படம்: விடுதலைப் புலிகள்]


[படம்: விடுதலைப் புலிகள்]

இம் மோதலின் போது கவச பீரங்கி ஊர்தியையும் விடுதலைப் புலிகள் பாவித்துள்ளனர்.

இதில் 51 படையினர் கொல்லப்பட்டுள்ளதுடன் 150 படையினர் காயமடைந்துள்ளனர்.

களமுனையில் பெருமளவிலான படையினரின் உடலங்களும் படையப் பொருட்களும் சிதறிக் கிடக்க காணப்படுகின்றன.

40 மில்லிமீற்றர் குண்டு செலுத்தி - 01
ஆர்பிடி எல்எம்ஜிக்கள் - 02
ஆர்பிஜி - 01
ரி-56-2 ரக துப்பாக்கிகள் - 02
ஆர்பிகே எல்எம்ஜி - 01

உள்ளிட்ட படையப் பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக விடுதலைப் புலிகள் மேலும் தெரிவித்துள்ளனர்.


[படம்: விடுதலைப் புலிகள்]




[படம்: விடுதலைப் புலிகள்]




[படம்: விடுதலைப் புலிகள்]



Comments