கிளிநொச்சி நகரைக் கைப்பற்றுவதற்காகக் கடந்த 16ம் திகதி மேற்கொள்ளப்பட்ட பாரிய படைநடவடிக்கை தோல்வியில் முடிவடைந் ததையடுத்து, அவசரமாகக் கூட்டப்பட்ட பாது காப்புச்சபைக் கூட்டத்தில் இராணுவத்தினரின் உயிரிழப்புக்களைக் குறைப்பது குறித்து ஆராயப்பட்டது. மகிந்த ராஜபக்ச அரசாங்கம் பதவிக் காலத்தில் இராணுவத்தின் உயிரிழப்புக் குறித்து பரீசிலிக்கப்பட்ட கூட்டம் இதுவென்றே கொள்ளுதல் வேண்டும். ஏனெனில் மகிந்த ராஜபக்சவும் அவரது சகோதரரான பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்சவும், இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் சரத்பொன்சேகாவும் எவ்வேளையிலும் இராணுவத்தினரின் உயிரிழப்புக்கள் பற்றிச் சிந்திப்பவர்களாக இருந்ததில்லை.
ஆனால், கிளிநொச்சியில் 16ஆம், 17ஆம் திகதியில் ஏற்பட்ட இழப்புக்கள் மிக அதிகமாக இருந்தன. அத்தோடு நடவடிக்கையும் தோல்வி யில் முடிவடைந்துள்ளது. கடந்த 16ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட படை நடவடிக்கையானது பெரும் முன்னேற்பாட்டுடன் பெரியளவிலான ஏற்பாட்டுடன் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையாகும். கொழும்புப் பாதுகாப்புத்துறைச் செய்தியாளர்களின் தகவலின்படி நான்கு டிவிசன்களைச் சேர்ந்த 7000 வரையிலான துருப்பினர் இதில் ஈடுபடுத்தப்பட்டனர்.
இதேசமயம், சிறிலங்கா வான்படைத் தாக்குதலுக்கு மூன்று நாட்களுக்கு முன்னதாகவே தொடர்ச்சியான வான்தாக்குதலை நடத்தத் தொடங்கியிருந்தன. அத்தோடு சிறிலங்கா கவசப்படைப்பிரிவும், ஆட்லறி மற்றும் பல்குழல் எறிகணைச் செலுத்திகளும் முழு அளவிலான பயன்பாட்டிற்கெனத் தயார்ப்படுத்தப் பட்டிருந்தன. இதேவேளை, இத்தாக்குதலில் வெற்றி நிச்சயம் என்பதும் சிறிலங்கா அரசதரப்பில் உறுதியாக நம்பப்பட்டது. இதனால், இத்தாக்கு தல் குறித்த தகவல் வெளியில் கசியவிடப் பட்டதினால் பல வெளிநாட்டுச் செய்தியாளர் களும் கொழும்பில் கூடியிருந்தனர். இத்தகையதொரு நிலையில் கிளாலி, முக மாலை முன்னரங்க நிலைகளில் இருந்து - இரணைமடு வரையிலான முன்னரங்க நிலைகள் வரையில் - ஆறு முனைகளில் தாக்குதல்கள் தொடங்கப்பட்டன. இத்தாக்குதல்களில் சிறிலங் காவின் முன்னணிப் படையணிகளான 53, 56, 57, 58 ஆவது படையணிகள் பங்கேற்றன.
அதிகாலையில், வௌ;வேறு நேரங்களில் ஆரம்பித்த இந்நடவடிக்கையை அடுத்து மூண்ட மோதல் அடுத்த நாள் மாலை வரை நீடித்தது. அதாவது இப்படை நடவடிக்கைக்கு எதிராக 17 ஆம் திகதி வரை விடுதலைப் புலிகள் முறிய டிப்புத் தாக்குதலை மேற்கொண்டிருந்தனர். இராணுவம் மேற்கொண்ட ஆறுமுனைத் தாக்குதலில் - கிளாலி உட்பட - சில முனைகள் 16ஆம் திகதி அன்றே முறியடிக்கப்பட்டது. அதேவேளை சில முனைகளில் மறுநாள் முறிய டிக்கப்பட்டது. இதில், கைவிட்டுப் போயிருந்த இரண்டரைக் கிலோமீற்றர் நீளமான முன்னரங்க நிலையும், பின்னர் 20ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை மேற்கொள்ளப்பட்ட தாக்கு தல் மூலம் விடுதலைப்புலிகளால் கைப்பற்றப் பட்டது.
இதில், 16ஆம் திகதி அன்றே தாக்குதல் திட்டம் தோல்வியில் முடிவடைந்துவிட்டமை சிறிலங்காத் தரப்பில் உறுதி செய்யப்பட்டதாக இருந்தது. சுருக்கமாகச் சொல்லப்போனால் கிளிநொச்சியில் மேற்கொள்ளப்பட்ட இப்பாரிய படைநடவடிக்கை குறித்துச் சிறிலங்காப் படைத்தரப்பில் இருந்து தகவல் எதுவும் வெளியிடப் படவில்லை. ஆனால், அதிகரித்த உயிரிழப்பு நடவடிக்கையில் ஏற்பட்ட தோல்வி காரணமாக அவசர அவசரமாகப் பாதுகாப்புச் சபையும் கூட்டப்பட்டது. இவ்வாறு பாதுகாப்புச்சபை கூட்டப்பட்டு படைநடவடிக்கை தோல்வி குறித்தும், படையினருக்கு ஏற்பட்ட இழப்புக் குறித்தும் ஆராய்ந்த மைக்கு இரு முக்கியமான காரணிகள் இருந் தன.
01.வன்னியில் படைநடவடிக்கை ஆரம்பிக்கப்பட்ட பின்னர் ஒரு நடவடிக்கையில் அதிகமான படையினர் கொல்லப்பட்டமை, காயமடைந்தமை.
02.கிளிநொச்சிக்காகக் கொடுக்கப்பட்ட விலை அதாவது படையினரின் இழப்பு அதிகரித்ததொன்றாக மாறியுள்ளமை.
கடந்த ஆண்டின் ஆரம்பத்தில் மன்னாரில் ஆரம்பிக்கப்பட்ட வன்னி மீதான படை நடவடிக் கையில் இதுவரை சிறிலங்கா இராணுவம் ஒரே நாளில் அதிக விலை கொடுத்தது அன்றே ஆகும். அதாவது கிளிநொச்சி நகர் மீதான இந்நடவடிக்கையிலேயே ஆகும். கிளிநொச்சி நகரைக் கைப்பற்றுவதற்கான சமரில் சிறிலங்கா இராணுவம் கடந்த மூன்று மாதங்களுக்கு மேலாகவே விலை கொடுத்து வரினும், கடந்த 16ஆம் திகதியும், 17ஆம் திகதியும் கொடுத்த விலையானது மிக அதிக மாகும்.
இவ் இழப்புக்கள் குறித்து விடுதலைப் புலிகள் தரப்பில் இருந்து 170 வரையிலான படையினர் கொல்லப்பட்டதாகவும், 400 வரையி லான படையினர் காயமடைந்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளபோதும், கொழும்பை மையமாகக் கொண்டியங்கும் இணையத்தளங் கள் மற்றும் ஊடகங்களில் வெளியாகும் தகவல்கள் இழப்பு அதிகமானவை என்று தெரிவிக்கின்றன. இம் மோதல்களில் படையினரின் 400 சடலங்கள் கொழும்பிலுள்ள மலர்ச்சாலை ஒன்றிற்கு வந்ததாக ஓர் இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது. அவ்வாறானால், காணாமற் போன படையினரையும் சேர்த்துப் படையின ருக்கு ஏற்பட்ட இழப்பு எந்தளவு என்ற கேள்வி எழுகின்றது.
சுருக்கமாகக் கூறப்போனால், அன்றைய நாள் சிறிலங்கா இராணுவத்தினருக்கு ஷஷகறுப் புச் செவ்வாய்||, ஷஷமிக மோசமான நாள்|| எனப் படைத்துறை வட்டாரங்களிலும் ஆய்வாளர் களாலும் குறிப்பிடும் நிலையே காணப்படு கின்றது. அந்தளவிற்கு இப்படை நடவடிக்கை இராணுவத் தரப்பிற்கு இழப்பைக் கொடுத்திருந் தது.இதன் வெளிப்பாடே இந்நடவடிக்கை குறித்து - தகவல் வெளியிட வேண்டியதான நிர்ப்பந்தம் ஏற்பட்டதும், விடுதலைப்புலிகள் அலை அலையாக வந்து தாக்கினர்; மழைபோல் எறிகணையைப் பொழிந்தனர்; பருவமழை படையினருக்குப் பாதகமானதாகிவிட்டது போன்றதான காரணிகள் தெரிவிக்கப்பட வேண்டியன ஆகின.
இரண்டாவதாக, கிளிநொச்சி நகரைக் கைப்பற்றுவதற்கான நடவடிக்கைகளில் சிறிலங்காப் படைத்தரப்பு இதுவரை கொடுத் துள்ள விலை குறித்து ஆராயவேண்டியதான நிர்ப்பந்தத்தையும் இத்தாக்குதலில் ஏற்பட்ட இழப்பு ஏற்படுத்திவிட்டது. கிளிநொச்சி நகருக் கான தாக்குதல்களைச் சிறிலங்கா இராணுவம் ஆரம்பித்த பின்னர் -வன்னேரி, அக்கராயன், முறிகண்டி, கோணாவில், புதுமுறிப்புப் போன்ற இடங்களில் அதற்குக் குறிப்பிடத்தக்கதான இழப்பு ஏற்பட்டிருப்பினும் - அவற்றின் பெரும் பகுதி சிறிலங்காப் படைத்தரப்பால் வெளியிடப்படாது மறைக்கப்பட்டதோடு, அவை குறித்த தாக்கமும் உணரப்படாமலே இருந்தது.
ஆனால் ஒரே நாளில் ஏற்பட்ட மூன்று இலக்க இழப்பானது அவர்களை உயிரிழப்புக் குறித்து - ஆராயவேண்டியதான நிர்ப்பந்தத்தை ஏற்படுத்தியிருந்தது. அத்தோடு, இவ் இழப்புக் குறித்துத் தகவல்கள் வெளிவராது தடுத்தல் சாத்தியப்படமாட்டாது என்ற நிலையும் இவ்விட யம் குறித்து ஆராய வேண்டியதானதொரு நிர்ப்பந்தத்தைக் கொடுத்தது. சிறிலங்காவின் சனாதிபதி மகிந்த ராஜபக்ச வும் இதுவரை படைத்தலைமையால் தெரிவிக் கப்பட்ட தகவல்களைப் பூரணமாக நம்பியிருந் தாரோ அன்றி கிளிநொச்சிக்கான விலையாக இதற்கு முன்னெடுக்கப்பட்டவை ஏற்றுக்கொள் ளத்தக்கதான விலை என எண்ணியிருந்தாரோ தெரியவில்லை. ஆனால் கடந்த 16 ஆம் திகதி கொடுக்கப்பட்ட விலையானது அவருக்குச் சீற்றத்தைக் கொடுத்திருந்தது என்பதை அவரது பேச்சே வெளிப்படுத்தியிருந்தது.
இவ்வாறு அவருக்குச் சீற்றம் ஏற்பட்ட மைக்கு இராணுவத்திற்கு ஏற்பட்ட அதிகளவு உயிரிழப்புடன் கிளிநொச்சியில் இவ்வாண்டு இறுதிக்குள் அவர் எதிர்பார்த்திருந்த வெற்றி கிடைக்கப் பெறாமல் போகலாம் என்ற அபிப் பிராயமும் காரணமாக இருந்திருத்தல் வேண் டும். கிளிநொச்சியை இவ்வாண்டு இறுதிக்குள் வெற்றிகொண்டு விடலாம்ஃ கொள்ள வேண்டும் என்ற நிர்ப்பந்தத்தில் மகிந்த உள்ளார் என்றே அரசியல், இராஜதந்திர வட்டாரங்களில் கருதப் படுகின்றது. உள்@ர் அரசியல் நிலவரத்தைப் பொறுத்து, வடமேல் மற்றும் மத்தியமாகாண சபைகள் கலைக்கப்பட்டு வேட்புமனுத் தாக்கல் செய்யப்பட்டு வருகையில் கிளிநொச்சி வெற்றிகொள்ளப்படின் அது தமது தேர்தல் வெற்றிக்குச் சாதகமானதாக அமையும் என அவரால் எதிர்பார்க்கப்படுகின்றது.
அடுத்ததாக இவ் ஆண்டின் இறுதிக்குள் அதாவது டிசம்பர் 31 ஆம் திகதிக்குள் யுத்தம் தொடர்பாகச் சிறிலங்கா அரசதரப்பால் உறுதி யான தீர்;மானங்கள் மேற்கொள்ளப்படுதல் அவசி யமானதொன்றாக இருப்பதாக இராஜதந்திர வட்டாரங்களில் பேசப்படுவதாகவுள்ளது. அதாவது, இக்காலப்பகுதிக்குள் கிளி நொச்சியைக் கைப்பற்றிக்கொள்வதன் மூலம் சிறிலங்கா அரசு இராணுவ ரீதியில் தனது நிலையை உறுதிப்படுத்திக்கொள்ள முடியும் எனவும், சில அரசியல் இராஜதந்திர நடவடிக் கைகளுக்கு அதனால் வெற்றிகரமாக முகம் கொடுக்க முடியும் எனவும் எதிர்பார்க்கப் பட்டதாகவும் கூறப்படுகின்றது.இத்தகைய நோக்கங்களின் அடிப்படையில் மேற் கொள்ளப்பட்டதான கிளிநொச்சி நோக்கியதான பாரிய படை நடவடிக்கையானது தோல்வியில் முடிவடைந்தமை மட்டு மல்ல, அதில் ஏற்பட்ட இழப்பானது பெரியதாக இருந்தமையே சனாதிபதி மகிந்த ராஜபக்சவிற்குப் பெரும் சீற்றத்தை ஏற்படுத்தியது. இத்தகையதொரு நிலையில் தான் விடுதலைப் புலிகள் தொடர்ந்து தாக்குதல் நடத்தினால், புலிகள் இயக்கத்தைத் தடைசெய்வேன்; விடுதலைப் புலிகளின் வரலாற்றை இல் லாது ஒழிப்பேன்; யுத்த நிறுத்தம் என்ற பேச்சிற்கே இட மில்லை என்பன போன்றதான சனாதிபதி மகிந்த ராஜபக்ச சீற்றத்திற்குக் காரணமாகும்.
சுருக்கமாகச் சொல்லப்போனால் கிளிநொச்சிக்கெனக் கொடுக்கப்பட்ட விலையானது - ஒருபுறத்தில் சிறிலங்கா சனாதிபதிக்குச் சீற்றத்தை ஏற்படுத்தும் அளவிற்கு அதிகரித்த தொன்றாகவும், மற்றொரு புறத்தில், படைத்தரப்பின் இழப்பை எவ்வாறு குறைத்தல் என்பது குறித்து ஆராய வேண்டியதான நிர்ப்பந்தத்தைச் சிறிலங்காப் படைத் தலைமைக்கு ஏற்படுத்தி யுள்ளது என்பதையே வெளிப்படுத்தி நிற்கின்றது. இந்நிலையானது சிறிலங்கா இராணுவத் தளபதி லெப். ஜெனரல் சரத்பொன்சேகாவின் தந்திரோபாயத்திற்கும், எதிர் பார்ப்பிற்கும் மாறுபட்டதான அதாவது முரண்பாடானதொரு அம்சம் எனக் கொள்ளுதல் தவறாகமாட்டாது. அதாவது விடு தலைப்புலிகள் பத்துப்பேரை நாளாந்தம் கொல்வதன் மூலம் தமிழ் மக்களின் போராட்டத்தினைப் பலவீனப்படுத்திவிடலாம் என்ற அவரது கோட்பாட்டிற்கு- இராணுவத்தினரின் நாளாந்த இழப்பு படைத்தரப்பைப் பலவீனப்படுத்திவிடுமோ என்ற நிலையை உருவாக்கியுள்ளது.
வேறொரு வகையில் கூறினால், கிளிநொச்சியைக் கைப் பற்றினாலோ அன்றி கைப்பற்றாமல் போனாலோ எதுவாகி னும் சரி கிளிநொச்சியின் பெயரில் இராணுவத்தால் கொடுக்கப் பட்ட விலை அதிகமாகிவிட்டது என்பதே இன்றைய நிலையாகும். அது மட்டுமன்றி விடுதலைப்புலிகள் தற்பொழுது தமது அனுபவம் மிக்கதானதும், நன்கு பயிற்சி பெற்றதுமான படையணிகளைக் களத்தில் இறக்கியிருப்பதாக இராணுவ ஆய்வாளர்களின் கவனத்திலுள்ள சிறிலங்காப்படை அதிகாரிகளை மேற்கோள் காட்டித் தகவல் வெளியிட்டுள்ளனர்.
மேலும், களமுனையில் விடுதலைப்புலிகள் தற்பொழுது அதிகரித்த அளவில் எறிகணைகளைப் பயன்படுத்துவதாகவும் - இதனால் படையினர் பெருமளவு சேதத்தைச் சந்திக்க வேண்டியதான நிலை உருவாகியிருப்பதாகவும் களமுனையை அடிப்படையாகக் கொண்ட தகவல்கள் உள்ளன. இந்நிலையானது, கிளிநொச்சிக்காக சிறிலங்காப் படையினர் மேலும் விலைகொடுக்க வேண்டியதாக இருக்கும் என்பதையே உறுதி செய்யவதானதாக உள்ளது - இதனை நிரூபணம் செய்வதாகக் கடந்த திங்கட்கிழமை கிளிநொச்சி நோக்கியதான படை நகர்வும் அமைந்திருந்தது.
ஐந்து முனைகளில் மேற்கொள்ளப்பட்ட இப்படைநடவடிக்கைகளில் நூறிற்கு மேற்பட்ட படையினர் கொல்லப்பட்டதோடு, ஐந்து முனைகளில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை பலமுனைகளில் முறியடிக்கவும் பட்டது. இந்நிலையானது மேலும், மேலும் கிளிநொச்சிக்காகக் கொடுக்கப்படும் விலையை அதிகரித்துச் செல்வதாகவே இருக்கும். ஒருவகையில் பார்க்கப்போனால் கிளிநொச்சி நகர் மீதான நடவடிக்கை தற்பொழுது புலிவாலைப் பிடித்த கதையாகிவிட்டது. ஏனெனில் கிளிநொச்சியைக் கைப்பற்றத் தொடர்ந்து முனைந்தால் கொடுக்கும் விலை மேலும் அதிகமாகும். அதேவேளை கிளி நொச்சியைக் கைப்பற்றும் முயற்சியைக் கைவிட் டாலும் கொடுத்த விலை அதிகமாகவே இருக்கும்.
- ஜெயராஜ்-
Comments