முல்லைத்தீவில் சிறிலங்கா வான்படை குண்டுத் தாக்குதல்: நான்கு அப்பாவி பொதுமக்கள் படுகொலை

முல்லைத்தீவில் உள்ள மக்கள் குடியிருப்புக்கள் மீது சிறிலங்கா வான்படை இன்று நடத்திய குண்டுத் தாக்குதலில் நான்கு அப்பாவி பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் மேலும் ஐந்து பேர் காயமடைந்துள்ளனர்.

முல்லைத்தீவு பகுதியில் இன்று பிற்பகல் 4:30 நிமிடமளவில் சிறிலங்கா வான்படையின் கிபீா் ரக வானூர்திகள் நடத்திய தாக்குதலில் முல்லைத்தீவு பலநோக்கு கூட்டுறவுச் சங்கத்தின் எரிபொருள் நிரப்பு நிலையம் மற்றும் அதனையண்டிய கட்டடங்கள் ஆகியன அழிந்துள்ளன.





இரண்டாவது தடவையாக பிற்பகல் 5:00 மணியளவில் சிலாவத்தை மக்கள் குடியிருப்புக்கள் மீது சிறிலங்கா வான்படை தொடரான தாக்குதலை நடத்தியுள்ளது.

இதில் பொதுமக்களின் வீடுகள் பல சேதமடைந்துள்ளன.

முதலாவது தாக்குதலில்

தயாபரன் (வயது 25)

நிசாந்தரூபன் (வயது 34)

கஜன் (வயது 24)

ராம்சீவன் (வயது 23)

ஆகியோர் கொல்லப்பட்டுள்ளனர்.





தனேஸ் (வயது 25)

மகேஸ்வரன் (வயது 45)

சிசியந்தன் (வயது 24)

ஜீவேந்திரன் (வயது 26)

அன்ரன் கமலதாஸ் (வயது 30)

ஆகியோர் காயமடைந்துள்ளனர்.

முல்லைத்தீவு மருத்துவமனைக்கு அருகில் உள்ளதால் மருத்துவமனையின் செயற்பாடுகள் பாதிக்கப்பட்டுள்ளன.







Comments