இந்தியா பற்றிய மயக்கங்கள்

இந்தியா பற்றிய மயக்கங்கள் நம்மிடைய கலையவிடாமல் தடுப் பதில் நமது அரசியல் தலைவர்கள் முதலாக அறிஞர் பெருமக்கள் எனப்படுவாரும் பத்திரிகைகளில் அரசியல் ஆய்வுக் கட்டுரைகளை எழுதி வருகிறவர்களும்வரை பலரும் தீவிரமாகவே உள்ளனர்.

எனவேதான் சில விடயங்களைப் பற்றித் திரும்பத் திரும்ப நினைவூட்ட வேண்டிய தவை நம்மிற் சிலருக்கேனும் உள்ளது. இந்தியக் குறுக்கீட்டை எதிர்க்கிற எவரும் சீன ஆதரவாளராகவோ பாகிஸ்தானின் நண்பராகவோ வேறெந்த நாட்டினதும் நலனை வலியுறுத்தும் ஒருவராகவோ இருக்க வேண்டியதில்லை. இந்தியக் குறுக்கீட்டை எதிர்க்கிற எவரும் எல்லா அந்நிய நாடுகளினதுங் குறுக்கீட்டையும் எதிர்க்கிறவராக இல்லாது போனால் இந்தியக் குறுக்கீடு பற்றிய அவரது நிலைப்பாடு நியாயமற்றதாகிவிடும்.

இவ்விடயத்தில் இந்தியாவை விமர்சித்துக் கொண்ட இந்தியாவின் தவறான அணுகுமுறையைச் சீனாவினதும் பாகிஸ் தானினதும் நோக்கங்கள் எனக் கூறப்படுகிறவற்றின் அடிப்படையில் விளக்கவும் நியாயப்படுத்தவும் சிலர் வெகுவாக முயல்வதைக் காணலாம். இது முன்கூறிய நோயின் இன்னொரு வகை.

கம்யூனிஸ்ற்றுக்கான ரஷ்ய முகவர்கள் என்றும் சீன முகவர்கள் என்றும் வசைபாடிய காலம் கடந்துவிட்டது. எனினும், எந்தவொரு கம்யூனிஸ்ற்றும் இந்த நாட்டின் எந்தப் பிரச்சினையையும் தீர்க்க ரஷ்யா குறுக்கிட வேண்டுமென்றா சீனா குறுக்கிடவேண்டும் என்றா சொன்னதில்லை.

அப்படிச் சொல்லியிருப்பார்களானால் அது அவர்கள் இந்த நாட்டின் மக்களுக்குக் கேடு நினைத்தவர்களாயிருப்பர். ஒவ்வொரு சமூக விடுதலை எழுச்சியினின்றும் கற்க வேண்டும் என்றும் வெற்றி பெற்ற எழுச்சிகளையடுத்துச் சமூக நிதியை நிலைநாட்டிய நாடுகளினின்று கற்க வேண்டும் என்றும் பயனுள்ள நடைமுறைகளைப் பின்பற்ற வேண்டும் என்றும் சொல்வது சரியானதும் தவையானதுமாகும்.

யாரிடமும் இருந்து கற்க மாட்டாம் என்று சொல்கிற மூடர்கள் இருக்கிறார்கள். அவர்களால் மக்களுக்கோ நாட்டுக்கோ ஒரு நன்மையும் இல்லை.

இந்தியக் குறுக்கீடு என்று சொல்லுகிற போது நம் மனதில் இருப்பது இந்திய அரசின் குறுக்கீடுதான். அது இந்தியாவில் ஆட்சிப் பொறுப்பில் இருப்பது எந்தக் கட்சி என்றோ என்னவிதமான கூட்டணியா என்பது பற்றியதல்ல. இந்திய அரசு என்பது இந்தியாவின் பெரும் முதலாளிகளுடைய நலன்களையும் பெருங் காணிச் சொந்தக்காரர்களுடைய நலன்களையும் பணி நிற்கிற ஒரு சமூக அமைப்பின் காவலனாகச் செயற்படுகிற ஒரு நிறுவனம். பொலிஸ், நீதிமன்றம், இராணுவம், அரச நிறுவன அமைப்புகளும் பல்வறு அதிகாரிகளும் ஆலாசகர்களும் அதன் பகுதிகள். அங்க ஒவ்வொருவரும் தனி மனிதர்களாகத் தாற்றமளித்தாலும் அவர்களால் தனிமனிதர் களாகச் சிறு எல்லைகட்கு உட்பட்ட செயற்பட இயலும். அவ்வாறு செயற்பட்டுச் சில சீர்திருத்தங்கட்கு உதவியவர்கள் உள்ளனர்அவர்கள் நல்லவர்கள் அதற் கப்பால் அடிப்படையான சமூக அமைப்பை மாற்ற அவர்களுக்கு வலிமை இல்லை.

சமூகத்திலிருந்து எழும் நெருக்கு வாரங்களே அப்படிப்பட்ட சீர்திருத்தங் களுக்கான தவையையும் அவற்றை நடைமுறைப்படுத்துவதற்கான வாய்ப்பை யும் வழங்குகின்றன. சில சமயங்களில் செல்வாக்குள்ள சிறுபான்மையினரால் சமூக நீதிக்கான சீர்திருத்த நடவடிக்கைகளை நிறைவற்றாமற் தடுக்க இயலும். உதாரணமாக, பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீடு பற்றி மண்டல் ஆணைக் குழு முன்வைத்த பரிந்துரைகள் உயர் சாதியினராலும் வசதிபடைத்த வர்க்கத்தினராலும் எதிர்க்கப்பண்ண ஒருவர் தீங்கிழைத்ததையடுத்து அப்படித்தான் கிடப்பில் போடப்பட்டன. ஒவ்வாத அதிகாரத்தில் உள்ளவர்களால் சட்டத்திற்கு உட்பட்டும் வேண்டிய போது சட்டத்தை மீறியும் தமது நலன்களைப் பாதுகாப்பதற்கான வல்லமை இருந்து வந்துள்ளது.

எனவதான், சமூக நீதிக்காகப் போராடுகின்றவர்கள் இருக்கிற சமூக அமைப்பின் சட்டங்கட்கு உட்பட்டு வெல்லக்கூடியவை எவை என்பது பற்றித் தெளிவாக இருக்க வேண்டும். அவ்வாறு வெல்ல இயலாதவற்றைச் சட்ட ரீதியான பாராட்டங்கள் மூலம் புதிய சட்டங்களை ஆக்கி வெல்ல இயலுமா என்று ஆராய வேண்டும். அதன் பாக்கில் சட்டத்திற்கு வெளிய நின்று போராடவேண்டியவை எவை என்று விளங்கும். இருக்கிற ஆட்சி அமைப்பைத் தூக்கி எறியாமல் இந்தியாவின் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எதிர்காலம் இல்லை என்ற உண்மை அப்பாது தெளிவாகும். அதைச் செய்யப் போராடுகிறவர்கள் பயங்கரவாதிகளாக்கப்படுகின்றனர். சட்டத்தை மீறாமல் சமூக ரீதியை வென்றெடுக்க இயலாது என்ற நிலையிலய மக்கள் சட்டவிராதமாகப் பாராடுகின்றனர். அப்பாது அரசு வன்முறையைப் பாவிக்கிறது. அதிகார வர்க்கமும் வன்முறையைப் பாவிக்கிறது. எனவ, உரிமைப் போராட்டமும் வன்முறையைப் பாவிக்க நேருகிறது.

பல சமயங்களில் ஒடுக்குமுறையாளர்கள் தாக்கும் வரை மக்கள் காத்திருக்க இயலாது. அவர்கள் எதற்கும் ஆயத்தமாக இருக்க வண்டியுள்ளது. அதைக் காரணங்காட்டியும் அரச வன்முறைக்கு எதிரான பதிலடிகளைக் காரணங்காட்டியும் எல்லாவிதமான எதிர்ப்புகளையும் அரசு பயங்கரவாதம் என்று முத்திரை குத்த இயலும். என்றாலும் எல்லாவிதமான வன்முறைகளும் பயங்கரவாதமாகக் கொள்ளப்படுவதில்லை. பொலிஸ், இராணுவ வன்முறைகள் மட்டுமன்றி இந்துத்துவ வன்முறை இதுவரை பயங்கரவாதமாக அறிவிக்கப்படவில்லை. ஆகமிஞ்சித் தனிமனிதர்கள் தண்டிக்கப்படுகின்றனர ஒழிய அவர்களுக்குப் பின்னாலுள்ள பயங்கரவாத மதவெறி அமைப்புகளில் எதுவும பயங்கரவாத அமைப்பு என்று தடைசெய்யப்படவில்லை. இந்தப் பின்னணியிலய இந்திய அரசு பயங்கரவாத அமைப்புகள் என்று தடைசெய்துள்ள அமைப்புகளைக் கருத வேண்டியுள்ளது.

அவை ஏன் அவ்வாறு தடைசெய்யப்பட்டுள்ளன என்று கவனிக்க வண்டியுள்ளது. சத்திஸ்கார் மாநிலத்தில் பழங்குடியினரிடைய மாஓவாதிகள் செல்வாக்கு வளர்ந்து வருவதைத் தடுக்க 2004 முதல் ஸல்வா ஜுடும் என்கிற பயங்கரவாத அமைப்பு இந்திய அரசால் ஊட்டி வளர்க்கப்பட்டுள்ளது. பொதுவாக,அபிவிருத்தி என்ற பரால் பழங்குடியினரின் பொருளாதாரமும் சமூக இருப்பும் பெரும் மிரட்டலுக்கும் அழிவுக்கும் முகங்கொடுக்க நேர்ந்துள்ளது. அதன் பயனாக மற்கு வங்காளக் கிராமங்களை அந்நியருக்கு வழங்குகிற முயற்சியை (நந்தி கிராமம்) எதிர்த்து மக்கள் போராடியுள்ளனர். இந்தியப் பெரு முதலாளி டாட்டாவை நுழையவிடாது (சிங்கூர்)மக்கள் போராடி யிருக்கிறார்கள். போராடி வென்றிருக்கிறார்கள். அவர்களது போராட்டங் கேட்கும் பயங்கரவாத முத் திரை குத்தப்பட்டது. மிக அண்மையில் அத மாநிலத்தில் ஒரு பழங்குடிப் பிரதேசத்தில் (லால்கர்ஹ்) இந்தியப் பொலிஸையும் "அபிவிருத்திக் காரர்களையும்' நுழையவிடாமல் மக்கள் தடைசெய்துள்ளார்கள். இது ஒரு புதிய போராட்டமுறை. இந்த மக்கள் இயக்கத்திற்கும் மாஓவாதிகள் என்று முத்திரை குத்தப்பட்டுள்ளது. பொலிஸார் விசாரித்த பாது ஒரு பழங்குடிப் பெண்மணி "அப்படியானால் நாங்கள் எல்லாரும மாஓவாதிகள் தான்' என்று பதில் கூறியிருக்கிறார்.

எல்லா ஆயுதப் போராட்டங்களும் புரட்சிகரமானவை அல்ல. பயங்கரவாதம் கணிசமாகவ உள்ள போராட்டங்கள் உள்ளன. அடிப்படையிலய பயங்கரவாத முறையிலான போராட்டங்கள் உள்ளன. இவ்வாறான போராட்ட அமைப்புகள் பலவற்றுக்கு வெகுசன ஆதரவு இல்லை. மும்பைப் பயங்கரவாதத்தை இந்தியாவில் உள்ள முஸ்லிம்களா மாஓவாதிகள் எவருமா அங்கீகரிக்கவில்லை என்பது கவனிக்கத்தக்கது. அதை விடுதலைப் புலிகளுடன் உறவுபடுத்துகிற இலங்கை அரசுசார்ந்த முயற்சிகட்கு ஒத்தூதிய இந்திய அதிகாரிகளும் உள்ளனர். இங்கெல்லாம் பயங்கரவாத்ததை முறியடிக்க அரசு தனது பங்கரவாதத்தையும் அடக்குமுறையையுங் கட்டவிழ்த்து விடுகிறதயொழிய அவ்வாறான பயங்கரவாதத்தின் விளைநிலம் எது என்று தடி அறியவா அதற்கான விஷ வித்துகள் எவை என்று விசனித்து அவற்றைக் களையவா முயல்வதில்லை. ஏனெனில், தீரவிசாரித்தால் விளைநிலங்கட்கும் வித்துகட்கும் அரச ஒடுக்குமுறைய காரணமாக இருப்பது தெரியவரும்.

எனவதான் எளிமையான ஆக்கபூர்வமான தீர்வான சமூக நீதிக்குப் பதிலாக பயங்கரவாத ஒழிப்பு என்கிற அழிவுமிக்க சிக்கலான தீர்வு நாடப்படுகிறது. அமெரிக்காவின் உலகப் பயங்கரவாத ஒழிப்பின் பாடங்களை இந்திய ஆட்சியாளர்கள் கற்க ஆயத்தமாக இல்லை. இந்தப் பின்னணியிலய இந் தியாவில் தடைசெய்யப்பட்ட இயக்கங்கட்கு ஆதரவாகப் பசுவார் மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கிற காரிக்கைகளை நாக்க வண்டும். இவை சனநாயக விராதமானவை, கருத்துச் சுதந்திரத்தை மறுப்பவை. தடைசெய்யப்பட்ட ஒரு அமைப்பிற் செயற்படுவாரைச் சட்டம் தண்டிக்கிறது ஒரு விடயம். தடைசெய்யப்பட்ட அமைப்பின் நியாயத்தை எடுத்துச் சொல்வதையும் தடையை நீக்கக் கோருவதையும் தண்டனைக்குரியதாக்குவது இன்று ஒருசில அமைப்புகளைப் பாதிக்கலாம். நாளை அதுவ இன்று கடும் நடவடிக்கை கோருவோரைத் தண்டனைக்குரியாராக்கலாம்.

கோகர்ணன்


Comments