சிங்களத்தின் கனவுகள் ஓர் நாள் தொகுக்கப்படும்


விடுதலைப்புலிகளை இவ்வாண்டுக்குள் முற்றாக ஒளித்து விடுவோம் என சிறிலங்காவின் தரைப்படத் தளபதி சரத் பொன்சேகா மீண்டும் ஒரு தடவை விதந்துரைத்துள்ளார். இதே போன்ற கருத்தை கடந்த ஆண்டும் முன்வைத்தார். ஆனால் அவர்களால் முடியாது போயவிட்ட நிலையில் 2009 பிறந்த போதும் பழைய பாணியில் இவ்வாண்டு முடிவதற்குள் புலிகளை ஒழித்துக் கட்டி விடுவேன் என ஊடகங்களிற்கு சொல்லி மகிழ்ச்சி அடைந்துள்ளார்.

சரத் பொன்சேகாவால் அது முடியுமா? அவரால் கடந்த ஆண்டு ஏன் அதைச் செய்யவில்லை? அவர்களால் முடியாது இனி எப்போதும் முடியாது இவ் ஆண்டுகளில் சிங்களப்படை சந்தித்த இழப்பு என்பது எவ்வளவு பெரியது? இதனை இவர்களால் விடுபட முடியாது தவிப்பது பற்றி ஏன் சரத் பொன்சேகாவால் வாய்திறக்க முடியவில்லை. கடந்த ஈரான் புலி சுமார்25000 படையினர் காயப்பட்டுள்ளதும் 25000படையினர் தப்பி ஓடியும் 10000 படையினர் கொல்லப்பட்டுள்ளதும் போன்ற செய்திகள் படைத்துறை வட்டாரங்களில் எழுந்துள்ளது பற்றி ஏன்? சரத் பொன்சேகா வாய் விதந்து பேசவில்லை எது எப்படி பொய் கூறப்படினும் சுமார் அறுபதினாயிரம் துருப்புக்கள் வன்னிக் களமுனையில் வெளியேற்றப்பட்டிருப்பது புலிகளுக்கு கிடைத்த பெரும் வெற்றியாகவே பார்க்கப்படுகிறது. கடந்த வாரம் லெப் nஐனரல் சரத் பொன்சேகா வெளியிட்ட செய்தியில் 12000 படையினர் காயமடைந்தே கிளிநொச்சியை கைப்பற்றியதாக பெருமிதமடைந்திருந்தார். இதனை விட இன்னும் கூடுதலாகவே அத் தொகை இருக்கும்.

இவ்வளவு இழப்புக்களை எதிர்க்கொண்டு தமிழர் வாழ்விடங்களை ஆக்கிரமிக்கவேண்டுமா? என்ற கேள்வியை மனித உரிமை ஆர்வலர்களால் எழுப்பாமல் இருக்கமுடியாது. சிங்களப்படைகள் தம்மிடமுள்ள ஆளணிப் பெருக்கத்தை வைத்துக்கொண்டு வன்னிப் பெரு நிலங்களுக்குள் ஊடுருவி விட்டன. இனி அடுத்த பிரச்சனை இவர்களால் இதனை எத்தனை நாளைக்கு தக்கவைக்க முடியும்? ஏன்ற கேள்வி எழுந்து நிற்கிறது. வன்னிப் பெருநிலப்பரப்பில் இராணுவத்தின் வேலிகள் போல் உள்ளன. இது எவ்வளவு ஆபத்தானது என்பது கூட படைத்தரப்பிற்கு புரியவில்லை. அவர்களது குறிக்கோள்கள் என்பது நிலங்களை ஆக்கிரமிப்பது. இது போன்ற தூர நோக்கற்ற முன்னகர்வுகள் கடந்த காலங்களில் படைத்தரப்பால் மேற்கொள்ளப்படவில்லை. அதனால் அவர்களால் தொடர்ந்து இராணுவ நிலைகளை பாதுகாக்க முடிந்தது. ஆனால் இப்போது கோத்தபாயவின் அதிரடி முன்னகர்வு என்பது நிலங்களை ஆக்கிரமித்துக் கொண்டு செல்வது மட்டுமே இதற்குப் பின்னால் அவர்களிற்குள்ள பாதுகாப்புப் பிரச்சனை கண்டுகொள்ளாதிருப்பது போரியல் நிபுனத்துவம் அவர்களிடம் இல்லாதிருப்பதைக் காட்டுகிறது. இது படைத்தரப்பிற்கு அழிவை ஏற்படுத்தக் கூடியதே.

முன்னைய அரண்களில் இருந்து கட்டளை அதிகாரிகள் இளம் இராணுவ வீரர்களை முன்னேறும்படி தூண்டிவிடுகின்றனர். அவர்களால் முடியாது திரும்பும் போது மீண்டும் மீண்டும் முன்னேற தள்ளிவிடுகிறார்கள். இதுவே இப்போது இராணுவதரப்பில் ஏற்பட்டுள்ள சிக்கலாகும் இதனால் சில வேளை தப்பி ஓடுகிறான். சில வேளை காயமடைகிறாhன் சில வேளை கொல்லப்படுகிறான் இவ்வளவு நீண்ட தூரம் துரத்திவிடப்பட்ட இராணுவம் புலிகளின் பொறிக்குள் சிக்கியுள்ளது. இவர்களால் மீளமுடியுமா? அல்லது புலிகளிடம் வீழ்ந்து மடிவார்களா? என்பதே இன்று எழுந்துள்ள கேள்வி. மகிழ்வுடன் நடந்து வரும் போரில் புலிகள் வெற்றிபெறவில்லையே என்ற கேள்வியை எழுப்புகின்றனர் பலர். இதற்கும் சுலபமாக பதில் சொல்கிறார்கள். ஏன் சொல்வதை விட அதிசயங்களை நிகழ்த்துபவர்களாகவே தங்களை அடையாளப்படுத்திக் கொண்டுள்ளனர் எனக் கூறுகின்றனர். இது யதார்த்தம் நிலையை பிரதிபலிக்கிறது. வலிகாமத்தை விட்டு பின்வாங்கிய புலிகள் சடுதியாக முல்லைத்தீவும் கூட்டுப் படைத்தளத்தை தாக்கி தங்களை யாரும் வெற்றிகொள்ளமுடியாதென்பதை உலகிற்கு காட்டினார்கள். அப்போது தமிழருக்கு எதிரான சக்திகள் வாயைப் பிளந்து கொண்டன.

ஐயசிக்குறு படைநடாத்திய சிங்களப் படைக்கு சரியான பாடம் புகட்டிய புலிகள் ஓயாத அலைகள் மூன்றில் ஆக்கிரமித்த நிலங்களை சில மணித்தியாளங்களில் மீட்டு உலகின் முன் நிமிர்ந்து நின்றானர். அப்போதும் எதிரிகள் வாயைப் பிளந்து கொண்டனர். இது போன்று கிளிநொச்சி மீட்பு ஆனையிரவு மீட்பு, தீச்சுவாலை, கட்டுநாயக்கா மற்றும் அனுராதபுர வான் தாக்குதல் என வரிசையாக புலிகள் நிகழ்த்திய தாக்குதல் என்பன உலகிற்கு புலிகளின் வீரத்தை பறைசாற்றி நின்றன. அப்போதும் சிங்களம் மட்டுமல்ல எதிரிகளும் வாயைப் பிளந்து கொண்டு புலிகள் வீரத்தை அங்கிகரிக்க நேரிட்டது. புலிகள் தோற்கடிக்கப்பட முடியாதவர் என உணர்த்தி நின்றது. இப்போதும் அதுவே நினைவில் கொள்ளத்தக்கது. ஏனெனில் சிங்களத்தின் அரச பயங்கரவாத நெருப்பில் தீக்ககுழிக்கப் பழகிக் கொண்டவர்கள் தமிழர்கள். எனவே மீண்டும்... மீண்டும் எழுவார்கள் அது யதார்த்த நிலையை வெளிக்காட்டி நிற்கிறது.

இனி கிளிநொச்சி நகரம் இராணுவத்தால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட செய்தி தமிழ் மக்களைப் பொறுத்தவரையில் ஏற்றுக் கொள்ளப்படாதவொன்று. அது வன்னியில் வாழ்ந்த தமிழ் மக்களாக இருக்கட்டும் அல்லது தமிழகத்து தமிழனாட்டும் அல்லாது போனால் உலகில் பரந்து வலிந்து வாழும் தமிழனாக இருக்கட்டும். எவருக்கும் கிளிநொச்சி வீழ்ந்ததை ஏற்றறுக் கொள்ள முடியவில்லை. அப்படியொரு தாக்கம் ஒவ்வொரு தமிழினது நெஞ்சில் பதிந்துள்ளது. இதிலிருந்து மீள்வோம் என்ற நம்பிக்கை அவர்களிடத்தில் உள்ளது என்பதும் அவர்கள் வெளியிடும் கருத்துக்கள் மூலம் உணரப்படுகிறது. அது தமிழகத்தில் ஊறிய இன உணர்வாகும்.

இவ்வாறான சந்தர்ப்பங்களில் ஒவ்வொரு தமிழனும் உறுதியுடன் எழுவது முக்கியமானது. தமிழக முதல்வர் மு.கருணாநிதியின் புதல்வியும் நாடாளுமன்ற உறுப்பினருமான கவிஞர் கனிமொழி வெளியிட்ட கருத்து முக்கியமானது. ஒவ்வொரு தமிழரும் வீறு கொண்டு எழ வேண்டுமென வலியுறத்தியிருந்தது மறக்கமுடியாத செய்தியாக வன்னி மக்கள் பார்க்கின்றனர். இது போன்று உலகில் வாழ்கின்ற உணர்வு மிக்க தமிழன் ஒவ்வொருவரும் கிளிநொச்சி வீழ்ந்தது கண்டு துடித்துப் போயிருப்பது கண்டு ஈழத்தமிழினம் பெருமிதம் கொள்வதும் உணரப்படுகிறது. அது மேலும் உரம் சேர்த்துள்ளது.

இவ்வாறான சந்தர்ப்பங்களில் உறுதி என்பது முக்கியமானது உலகில் ஈழத்தமிழனுக்கு உற்ற துனையாக நிற்கக்கூடியவர்கள் தமிழகத் தலைவர்களும் மக்களுமே. அவர்களின் எழுச்சி மட்டுமே ஈழத்தமிழர்களின் விடுதலைத் தாகத்தை தீர்க்கக் கூடியது. ஈழமண் போராடுகிறது. அதுவும் நெருப்புக் குளிக்கிறது. தமது உயிரை கொடுத்துப் போராடுகிறது. உயிர்த் தியாகத்தை கேவலம் செய்யும் ஒரு கூட்டம் இன்னமும் உலகில் உள்ளது. சிங்களத் தலைமைகள் ஈழமக்களின் உயிர்த் தியாகத்தை உணர மறுக்கிறது. அல்லது அவர்களது குறிக்கோள் ஈழ மக்களை அழித்து விட்டால் முழு இலங்கைத் தீவிற்கும் சொந்தம் கொண்டாடலாம் என எண்ணுகிறது. எனவே இந்த இன அழிப்பு போர் குறித்து ஈழத்தமிழினம் உலகிடம் நியாயம் கேட்டது. குறிப்பாக இந்தியாவிடம் விடுதலைப் போராட்டத்திற்கு அங்கீகாரம் கேட்டது. ஆனால் யாருமே இதற்கு உதவாத நிலை என்பதற்கு அப்பால் ஈழத்தமிழரை அழிக்கும் இனப் போருக்கு ஆதரவாக நிற்பது இம் மக்களை பாதித்து வருவதாக பல பொது அமைப்புக்கள் குற்றம் சாட்டியுள்ளன. இது ஊன்றி கவனிக்கத்தக்கது.

இவ் வேளையில் தமிழ்த்தேசிய விடுதலைப் போராட்டம் மேலும் வீச்சாக இழந்த மண்ணை மீட்பதற்கு தமிழகத்தின் உதவிகள் மட்டுமல்ல அங்கு ஒரு ஆதரவு நிலை எழ வேண்டும் அப்போதுதான் ஈழத்தமிழினத்திற்கு ஒரு பக்கபலமாக அமையும். அதே வேளை தமிழகத்தின் எழுச்சியினூடாக இந்திய நடுவன் அரசையும் ஈழ விடுதலைப் போராட்டத்திற்கு ஆதரவான நிலையை எடுக்க உதவும் என்பது ஈழத்தமிழர்களின் எதிர்ப்பார்ப்பாகும். இவ்வேளையில் சிங்கள தேசத்தின் போர் வெறிக்கு சரியான பாடம் புகட்டும் வழியை விடுதலைப் புலிகள் கண்டுபிடிப்பார்கள் என்பது நிச்சயம் தெரிகிறது.

ஐயசிக்குறு சமரில் இராணுவத்தின் பிடரியை தாக்கி வீழ்த்திய ஆயுதத்தைப் போன்று அடுத்து வரும் காலங்களில் புலிகள் மேற்கொள்வார்கள் என எதிர் கூறப்படுகிறது. இன்றைய களயதார்த்த நிலையை ஆய்வு செய்யும் ஆய்வாளர்கள் தற்போதைய நிலையில் புலிகளுக்கு தோல்வி ஏற்பட்டதை ஒப்புக்கொள்ளும் அதே வேளை புலிகளை முற்றாக தோல்வி அடையச் செய்ய இயலாது என்பதையும் ஒப்புக்கொள்கின்றனர். அந்த வகையில் புலிகளின் வலிமையை உணர்ந்து கொண்ட எவரும் புலிகள் தோற்று விடுவர் என்று நம்பிக்கை கொள்ளமாட்டார்கள். புலிகள் அதிசயம் நிகழ்த்த காத்திருக்கின்றனர் என எவரும் நம்பலாம் அந்த செய்திக்காக பலர் காத்திருப்பதும் தெரிகிறது.

அதேவேளை புலிகளிடம் பாடம் கற்றுக் கொள்ள தெரியாதவர் நிச்சயம் பரிதாபமாக அதில் சிக்குப்படுவது தவிக்கமுடியாதது என்பதுவே கள நிலையாகும். புலிகள் பற்றி உண்ர்ந்து கொள்ளாத ஒரே தலைவராக ராஐபக்ச உள்ளார். இதுவரை நடைபெற்ற போரில் இருந்து இன்னும் பாடங்களை கற்கவில்லை என்றால் அடுத்து வரும் நாட்களில் அதனை கற்றுக் கொள்ள நேரிடும் என்பது மட்டும் தெரிகிறது. அடுத்து வரும் காலமும் ராஐபக்சவின் இருப்பிற்கு ஆபத்தானதாகவே போகிறது.

-ஞானமுருகன்-

Comments