நேற்றைய தாக்குதலில் விடுதலைப் புலிகளால் கைப்பற்றப்பட்ட இராணுவ உடல்களும், ஆயுததளவாடங்களும்


முல்லைத்தீவு சிலாவத்தை நோக்கிய சிறிலங்காப் படையினரின் முன்னேற்ற முயற்சி விடுதலைப் புலிகளால் முறியடிக்கப்பட்டது.

இதில் படையினரின் பல சடலங்கள் படையப்பொருட்களும் புலிகளால் கைப்பற்றப்பட்டன. நேற்றுக்காலை சிலாவத்தை நோக்கி முன்னேறிய சிறிலங்காப் படையினர் மீது விடுதலைப்புலிகள் முறியடிப்புத் தாக்குதலை மேற்கொண்டனர். புலிகளின் தாக்குதலை எதிர்கொள்ள முடியாத படையினர் தமது சகாக்களின் சடலங்களையும், படையப்பொருட்களையும் கைவிட்டுத் தமது பழையநிலைகளுக்குப் பின்வாங்கிச்சென்றனர்.




இதன்போது விடுதலைப்புலிகளால் கைப்பற்றப்பட்ட படையப்பொருட்களின் விபரம் வருமாறு.




பி.கே.எல்.எம்.ஜி ரக துப்பாக்கிகள் 02,
ஏ.கே.எல்.எம்.ஜி ரக துப்பாக்கிகள் 02,
ஆர்.பி.ஜி உந்துகளை செலுத்திகள் 03,
ரி.56 ரக துப்பாக்கிகள் 05
என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.




Comments